Monday, December 28, 2015

2015ல் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டு ரசிகர்களை ஏமாற்றிய படங்கள்- ஒரு பார்வை

தமிழ் சினிமாவில் இந்த வருடம் 204 படங்கள் வந்துள்ளது. இதில் வெற்றி படங்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில் இந்த வருடத்தில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டு ரசிகர்களை ஏமாற்றியப்படங்களின் சிறப்பு தொகுப்பே இந்த பகுதி.

புலி

இளைய தளபதி விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த தமிழகமும் இப்படத்தை எதிர்ப்பார்த்தது, ஏனெனில் முதன் முதலாக பேண்டஸி கலந்த கதை என்பதால் எப்படியிருக்கும், அதிலும் விஜய் நடித்துள்ளார் என்ற ஆர்வம் வர, இப்படம் ரசிகர்களை மிகவும் ஏமாற்றியது. மேலும், ஒரு சிலரின் சதி செயலால்(சமூக வலைத்தளங்களில் தொடர் கிண்டல்) இப்படம் பெரும் தோல்வியை கண்டது.

மாசு

முதலில் இந்த படத்திற்கு என்ன தலைப்பு என்றே பலருக்கும் குழப்பம் தான். மாஸ் என்று வைத்து பிறகு மாஸு அதன் பிறகு மாசுவில் வந்து நின்றது. இப்படமும் வெங்கட் பிரபு-சூர்யா கூட்டணி என மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் சென்ற ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை தர, வழக்கம் போல் சமூக வலைத்தள கிண்டலுக்கு இப்படமும் ஆளாகி தோல்வியை சந்தித்தது.

எலி

வடிவேலு இஸ் பேக், கலக்கப்போகிறார் என்று பார்த்தால் இந்த வடிவேலு காமெடி தானா? ஏன் நமக்கு மட்டும் சிரிப்பே வரவில்லை என்று நிலையில் தான் படம் இருந்தது. இதுவே இப்படத்திற்கு பெரும் தோல்வியை தர காரணமானது.

10 எண்றதுக்குள்ள

ஐ என்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் விக்ரம் இந்த படத்தில் கலக்குவார் என்று எதிர்ப்பார்த்து சென்றால் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி தான் காத்திருந்தது. சொதப்பலான திரைக்கதையால் 10 எண்றதுக்குள்ள திரையரங்கை விட்டு ரசிகர்கள் சென்று விட்டனர்.

தங்கமகன்

வேலையில்லா பட்டதாரி, அனேகன், மாரி என அதிரடி படங்களை கொடுத்த தனுஷ், இந்த படத்திலும் அதே அதிரடியில் கலக்குவார் என ரசிகர்கள் திரையரங்கிற்கு செல்ல, அங்கு தனுஷ் குடும்ப செண்டிமெண்டில் கலக்கினார். ஆனால், இது அவரின் ரசிகர்களுக்கே ஒரு கட்டத்திற்கு மேல் பிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படமும் இதனால் இந்த லிஸ்டிற்குள் வந்தது.

இதேப்போல் வாலு, பொறம்போக்கு என்கின்ற பொதுவுடமை, உத்தம வில்லன், பாயும் புலி, சகலகலா வல்லவன், எனக்குள் ஒருவன், இது என்ன மாயம், மசாலா படம், சண்டி வீரன், வலியவன் ஆகிய படங்களும் ரசிகர்களை மிகவும் ஏமாற்றியது.

0 comments:

Post a Comment