Monday, December 28, 2015

உங்கள் மொபைலின் இரண்டு எண்களுக்கும் தனித் தனியாக வாட்ஸ் அப் வசதி வோணுமா?

இன்றைய கால கட்டத்தில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தாத நபரே இல்லை எனலாம். குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ் ஆப்பின் மூலம் நாம் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்வதுடன் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க முடிகிறது.தற்பொழுது வரும் ஆன்ட் ராயிட் மொபைல்கள் அதிகமாக இரட்டை சிம் வசதி கொண்டது. ஆனால் ஏதேனும் ஒரு சிம் நம்பரில் மட்டுமே வாட்ஸ் ஆப் அக்கௌன்ட் பயன்படுத்த முடியும். இனி அந்த கவலை வேண்டாம்

இனி இரண்டு சிம்கள் பொருத்தக் கூடிய டூயல் சிம் மொபைல் போன்களில் இருக்கும் இரண்டு நம்பர்களுக்கும் தனித் தனியாக வாட்ஸ் அப் பயன்படுத்தும் விதமாக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நீங்கள் டூயல் சிம் மொபைல் பயன்படுத்துபவர் என்றால், திசா (Disa) என்ற இந்த செயலியின் மூலம், உங்கள் மொபைலில் உள்ள இரண்டு எண்களுக்கும், தனித் தனியாக வாட்ஸ் அப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கான வழிமுறைகள் மிக எளியவை. திசா செயலியை https://goo.gl/bW2ELo என்ற இணைப்பின் மூலம் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

அதில் ‘+’ என்ற தேர்வை அழுத்தி, உங்கள் மற்றொரு எண்ணை (அதாவது வாட்ஸ் அப் பயன்படுத்தாத எண்) ‘+91′ என குறியீட்டோடு தரவும். (உதாரணம்: +91 98765*****)

அடுத்து வெரிஃபை செய்வதற்கான கட்டம் வரும். இதைத் தாண்டினால் ஒரே நேரத்தில் இரண்டு எண்களுக்கு தனித்தனியாக வாட்ஸ் அப் பயன்படுத்த உங்கள் மொபைல் தயாராகிவிடும். நீங்கள் ஏற்கெனவே வைத்துள்ள வாட்ஸ் அப் இல்லாமல், திசா செயலிக்குள் இன்னொரு வாட்ஸ் அப் பக்கம் உருவாகிவிடும்.

ஆனால் தற்போது திசா செயலியில் உள்ள வாட்ஸ் அப் மூலம் செய்திகளை அனுப்ப மட்டுமே முடியும். வாட்ஸ் அப் கால்கள் (Whatsapp call) செய்ய முடியாது. அதே போல ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் மட்டுமே தற்போது இந்த செயலி வேலை செய்யும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்..

0 comments:

Post a Comment