
வானிலை குறித்த முன்னெச்சரிக்கை எதையும் வெளியிடவில்லை என்று சென்னை அரசு கல்லுாரி பேராசிரியரின் இ - மெயில் கடிதத்திற்கு, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அதிகாரப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. ஒரு மாதத்துக்கு மேலாக பெய்த கன மழையால், சென்னை நகரம் துவம்சமாகி விட்டது. அதே நேரம், மழை மற்றும் புயல் குறித்து, பல வதந்திகள் வலம் வந்து, மக்களை மிரட்டி கொண்டு இருந்தது.சென்னையில் நவம்பர் 21, 22ல் மிகக் கன மழை பெய்யும் என, அந்த தகவலில் சொல்லப்பட்டு இருந்தது. மற்றொரு தகவலில் டிசம்பர் 7, 8ல் சென்னையை சுற்றி மிகக் கன மழை பெய்து, சென்னை நகரமே மூழ்கும் அபாயம் உள்ளது என, நாசா எச்சரித்துள்ளது என்ற வதந்தி பரவியது. இந்த தகவல் வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர்...