Thursday, December 31, 2015

கூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை

கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது. அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள். அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.இதன் முதலாளி லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி பன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில்...

சிம்பு தம்பிக்கான 2016 ராசிபலன் எப்படியிருக்கு..!

பேச்சாயி அம்மனின் அருளைப் பெற முடியாத துர்பாக்கியசாலி நீங்கள்தான். அதனால் சுமார் ஆறு வருடங்களுக்கு பேசவோ, பாடவோ, முணுமுணுக்கவோ, கூடாது. முக்கியமாக முக்கால் கிலோ எடையுள்ள நண்பர்கள் வந்தால் முற்றிலும் அவர்களை விட்டு ஒதுங்கியிருப்பது ‘குண’சந்திரிகா யோகத்தை கொடுக்கும். நாட்டு மருந்து கடையில் ‘மண்டை’ வெல்லத்தை வாங்கி தூள் தூளாக அரைத்து செல்போனுக்கு அபிஷேம் செய்து வந்தால் துர் சக்திகள் விலகும். நந்தி காதில் தொடர்ந்து ஓதிவர, ரகசியங்கள் கசியாமல் காக்கப்படும். பிடித்த நிறம் வெள்ளை. திசை – புழலாகவும் இருக்கலாம், வேலூராகவும் இருக்கலாம...

அழகான குழந்தை தன்னுடையதுதான்-போலிசாரிடம்-பிச்சைக்காரி போரட வேண்டியிருந்த சம்பவம் பரபரப்பு

 அழகான குழந்தை தன்னுடையதுதான் என்று போலிசாரிடம் நிரூபிக்க ஒரு பிச்சைக்காரி போரட வேண்டியிருந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கேரளாவின் கோலிகோடு மாவட்டத்தில்,  நாடபுரம் என்று ஊருக்கு அருகில் உள்ள கலாச்சி என்னும் பகுதியில், கடந்த திங்கள் கிழமை, ஒரு பிச்சைச்காரி காண்பவரிடமெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார். அவர் தன் கையில் ஒரு அழகான 4 மாத குழந்தையை வைத்திருந்தார்.  அதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்களுக்கு, அவரின் மீது சந்தேகம் ஏற்பட்டது.ஏனெனில் தாயின் நிறம் மற்றும் தோற்றத்திற்கும், குழந்தையின் நிறம் மற்றும் தோற்றத்திற்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது. அந்த குழந்தை மிகவும் அழகாக இருந்தது.   ...

ராதிகா பேசியதைக் கேட்டால் சிரிப்பு சிரிப்பா வருதாம் விஷாலுக்கு..!

விஷால் நடிகர் சங்க தேர்தலில் அனைவரும் எதிர்ப்பார்த்தது போல் வெற்றி பெற்றுவிட்டார். இந்நிலையில் இன்று கதகளி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இதில் படத்தின் ட்ரைலரில் காண்டம் குறித்து ஒரு பெண்ணிடம் பேசியதை ராதிகா சுட்டிக்காட்டி குறை கூறினார், இதை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘இதில் என்ன தவறு உள்ளது என்று எனக்கு தெரியவில்லை, இதை கேட்டால் எனக்கு சிரிப்பு தான் வருகின்றது’ என மிக கூலாக பதில் அளித்தார...

ஸ்டார் வார்ஸ் -போர்ஸ் அவேகன்ஸ் (2015)-திரை விமர்சனம்

ஸ்டார் வார்ஸ் படங்கள் இதுவரை 6 பாகங்கள் வந்துள்ளன. ஜார்ஜ் லூகாஸ் இயக்கிய முந்தைய பாகங்களின் சாதனையை ஸ்டார் வார்ஸ் 7 முறியடிக்குமா? என்ற சந்தேகத்தை தவிடுபொடியாக்கி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது அறிவியல் புனைகதைப் படமான ஸ்டார் வார்ஸ் 7-வது பாகம்.இந்த கதையானது சூரிய குடும்பத்தை தாண்டிய மற்றொரு கேலக்ஸியில் நடைபெறுகிறது. கதையின் ஹிரோவான போ டேமரோன் ஒரு மிகச் சிறந்த பைலட். தீயவர்களை அழிக்கும் கடைசி ஜெடாய் வீரரான லூக் ஸ்கைவாக்கர் 30 ஆண்டுகளாக காணவில்லை. அவரை கண்டுபிடிக்க வேண்டுமானால் அவர் இருக்கும் இடத்தின் மேப் வேண்டும். ஆனால் வில்லனான ஸ்னோக்கும் மேப்பை கண்டுபிடித்து லூக் ஸ்கைவாக்கர் அழிக்க முயற்சிகிறான்.ஒரு கட்டத்தில் ஹீரோயின் ரே வில்லனிடம் சிக்கிக்கொள்கிறாள்....

நீரிழிவு இருக்கா? இந்த காய்கறிளை சாப்பிடுங்க...

 தற்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலில் உள்ளது. ஏனெனில் இந்தியர்கள் எந்த ஒரு உணவிலும் சரியான கட்டுப்பாட்டுடன் இல்லாததால், பாரபட்சமின்றி நோய்கள் உடலைத் தாக்குகின்றன. அவ்வாறு தாக்கும் நோயில் ஒன்று தான் நீரிழிவு. அதிலும் அந்த நோய் வந்தால், அதற்கான டயட சார்ட்டை தயார் செய்வது என்பது மிகவும் கடினம். பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தந்தாலும், நீரிழிவு நோயளிகளுக்கு சில நேரங்களில் அவை கெடுதலை விளைவிக்கும். ஏனெனில் நிறைய காய்கறிகளில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பொருள் உள்ளது. உதாரணமாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற காய்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் சிறந்தவை. ஆனால், அது நீரிழிவு உள்ளவர்களுக்கு சிறந்தது அல்ல. ஆகவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த ஒரு உணவை உண்ண வேண்டுமென்றாலும், மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது....

பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் என்ன செய்யலாம் அருமையான தகவல்!

கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன் . . . . உலகோர்க் கெல்லாம் காரமா மூலியடா பங்கம்பாளை கொண்டு . . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால் கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம் . . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும் நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா . . . . அன்றான ஆகாசகருடன் மூலி அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம் - சித்தர் பாடல். ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல். பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து...

மறக்க முடியுமா - தமிழ் திரையின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்

 தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். அவரைப் போல் பணம், புகழில் புரண்டவர்களும் இல்லை, பசி, பிணியில் வாடியவர்களும் இல்லை.பத்திரிகை என்ற பலமான ஆயுதத்தை பணம் பிடிங்கும் ஏடிஎம் எந்திரமாக கருதிய ஒரு சுயநலமியால் வீழ்த்தப்பட்ட முதல் தமிழ் நடிகரும் பாகவதர்தான். * எம்.கே.தியாகராஜ பாகவதரின் முழுப்பெயர், மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் என்பதாகும். மார்ச் 1, 1910 -ஆம் ஆண்டு மாயவரத்தில் (இன்றைய மயிலாடுதுறை) பிறந்தார்.* பாகவதர் என்ற சொல்லிற்கு பக்திக்கதைகளை இசையுடன் பாடுபவர் என்று பொருள்.* 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய தியாகராஜ பாகவதர் 14 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார்.* பவளக்கொடியில்...

சிம்பு ரசிகர்களுக்கு இன்று ஒரு சப்ரைஸ் விருந்து

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சிம்பு-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் ‘அச்சம் என்பது மடமையடா’. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு மற்றும் கௌதம் மேனன் இணைந்திருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துயுத்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருவது படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பை துண்டியுள்ளது.இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு சிம்பு ரசிகர்களுக்கு இன்று இரவு ’’அச்சம் என்பது மடமையடா’’ படத்தின் டிரைலர் ‘சப்ரைஸ்’ ஆக  வெளியாகிறது. இதனை  அப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளார...

ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் 10 அறிகுறிகள்

இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைவோம். சாதிக்கும் எண்ணம் இருக்கும் யாருக்கும் இறக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது. இருப்பினும், நிச்சயம் ஒரு கட்டத்தில் அனைவரும் இறக்க நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது. இத்தகைய இறப்பை சந்திக்கும் முன்பு ஒருசில அறிகுறிகள் தென்படும். மேலும் சிவபுராணத்தில் ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் : அறிகுறி 1 : எப்போது ஒருவரது சருமத்தின் நிறமானது வெளிர் மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ அல்லது லேசான சிவப்பாக மாற ஆரம்பித்தால், அது அவர் இன்னும் 6 மாத காலத்தில் உயிரை விடப் போகிறார் என்று அர்த்தமாம். அறிகுறி 2 : எப்போது ஒருவனால் அவனது பிம்பத்தை எதிரொலியை தண்ணீரிலோ அல்லது கண்ணாடியிலோ...

பாலாவின் 'தாரை தப்பட்டை'யில் டிஸ்கவரி தமிழ் கேமரா குழு

 பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தாரை தப்பட்டை' படத்தில் டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சியின் கேமரா குழு இடம் பிடித்துள்ளது.பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'தாரை தப்பட்டை'. இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை சசிகுமார் தயாரித்து வருகிறார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் ஐங்கரன் நிறுவனம், இப்படம் பொங்கலுக்கு வெளியீடு என்று அறிவித்திருக்கிறது.இப்படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்துக்கு 'ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். இளையராஜா இசையமைப்பில் உருவாகியிருக்கும் 1000வது படம் 'தாரை தப்பட்டை' என்பது குறிப்பிடத்தக்கது.தஞ்சாவூரில் உள்ள கரகாட்டக்கார இசை மற்றும் நடனக்குழுவினர்...

சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்!

 சீறுநீரக கல் பிரச்னை என்பது, இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கக்கூடிய நோயாக மாறி வருகிறது. சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறது. சிறுநீர், சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே, சிறுநீர்ப் பைகளுக்கு வந்து, பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கி, வளர்ந்து அடைப்பு ஏற்படுத்துகிறது என்கின்றனர் டாக்டர்கள். முதலில் முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்கு மாறி அடிவயிற்றில் வலி ஏற்படுத்தும். பின் தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவி காய்ச்சல்...

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்..!

தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும். அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா? அப்படி தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டும். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள உறக்கம் வந்துவிடும். பலன் என்னவா இருக்கும்னு. நினைக்கிறீங்க…? வேற ஒண்ணுமில்ல, குழப்பம்தான். அட ஆமாங்க சில சமயம் நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள தூக்கம் வந்துவிடும். பல சமயங்களில் 1000 வரை எண்ணிக்கிட்டிருந்தாக் கூட தூக்கமே வராது. ஆனா இப்போ, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும்,...

“தற்காப்பு” – ‘திரைவிமர்சனம்-என்கவுன்டர்’ பிரச்சனையை இருபக்கமும் அலசல் – காவல் துறைக்கு மரியாதை தரும்!

கோலாலம்பூர் – இந்தியாவில், ஏன் மலேசியாவில் கூட காவல் துறையைப் பொறுத்தவரையில் முக்கியமான சர்ச்சைக்குரிய அம்சமாக விவாதிக்கப்படுவது ‘என்கவுன்டர்’ எனப்படும் குற்றவாளிகள் எனக் கருதப்படுபவர்களை விசாரணையின்றி காவல் துறையினர் திட்டமிட்டுக் கொல்லும் பிரச்சனையாகும். அந்தப் பிரச்சனையை எல்லா முனைகளில் இருந்தும் மிக விரிவாக, நுணுக்கமாக அலசுகின்றது ‘தற்காப்பு’.இதற்கு முன் வந்த தமிழ்ப்படங்களில் சில காட்சிகளாக மட்டுமே வைக்கப்பட்டிருந்த என்கவுன்டர் அம்சம், இந்தப் படத்தில் முழுமையாகப் பேசப்படுவதோடு, மனித உரிமை ஆணையத்தின் கோணத்திலிருந்தும் விவாதிக்கப்படுகின்றது என்பது வித்தியாசமான அணுகுமுறை.படத்தின் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம், மலேசியாவின் டாக்டர் எஸ்.செல்வமுத்து...

மாபெரும் தோல்விகளுக்குப் பிறகும் எழுந்து நிற்கும் சூர்யா

தமிழின் முன்னணிநாயகர்களில் ஒருவரான சூர்யாவுக்கு 2015 ஆம் ஆண்டு கலவையான ஆண்டாக அமைந்திருக்கிறது. நடிகராக அவருக்கு இந்தஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்த மாசுஎன்கிறமாசிலாமணி (மே 29, 2015) படம் மட்டும்தான் வெளியானது. அந்தப்படத்தில் அவருக்கு இரட்டைவேடம், அவற்றில் ஒன்று ஆவி என்று சமகாலத்திற்கேற்ற கதையாக அமைந்தும் அந்தப்படம் எதிர்பார்த்தபடி போகவில்லை. சிலபடங்கள் நல்லவிமர்சனங்களைப் பெறும், வசூலில் குறைவாக இருக்கும். இந்தப்படம் விமர்சனரீதியாகவும் சரியாக இல்லை. இதற்கு முந்தைய படமான 2014 இல் வெளியான அஞ்சான் (ஆகஸ்ட் 15, 2014) படமும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. இப்படி தொடர்ந்து இரண்டுபடங்கள் பெரிதாகப் போகவில்லை என்பது ஒரு நாயகனாக சூர்யாவுக்கு...

2015-ல உங்ககிட்ட நிறைய எதிர்பார்த்துட்டோம் பாஸ்!

இந்த வருடம் கோலிவுட்டில் வெள்ளிக்கிழமை வெளியாகி, சனிக்கிழமை சரண்டர் ஆன படங்களின் எண்ணிக்கையும் அதிகம். புதுமுகம், லோ பட்ஜெட், நட்சத்திர பட்டாளம், ஹை பட்ஜெட் என எந்த வேறுபாடுமின்றி படங்களை வரவேற்றான் தமிழக ரசிகன். ஒவ்வொரு படத்திற்குமான அவனது எதிர்பார்ப்புகள் அப்படங்களின் வெற்றிகளுக்கு பெரிதும் உதவின. அதேசமயம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத படங்கள் அடி வாங்கின. அப்படி பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி ரசிகர்களைத் திருப்திபடுத்தாத படங்களில் சில இங்கே... குறிப்பு:  பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் பற்றிய அலசல் அல்ல இது! மாரி 'செஞ்சிருவேன் செஞ்சிருவேன்'னு சொல்லி ரசிகர்களை செமத்தியா செஞ்சிட்டார் இந்த மாரி. மாமனாரின் ஸ்டைலை காப்பி அடித்தாலும், ...

தலைப்பை கேட்டவுடன் கொடுத்த லாரன்ஸ்- படத்தின் பெயரை மாற்றினார்

ராகவா லாரன்ஸிற்கு சுக்ர திசை தான் போல. அவர் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா, காஞ்சனா-2 என இரண்டு படங்களும் மெகா ஹிட் ஆனது. இதை தொடர்ந்து இவர் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இந்த தலைப்பை சூப்பர் குட் பிலிம்ஸ் கேட்டதற்காக அந்த டைட்டிலை கொடுத்துவிட்டாராம். தற்போது இப்படத்திற்கு பைரவா என்று தலைப்பு வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளத...

பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ்...

சுள்ளெனக் கொளுத்தும் வெயிலையும், சடசட மழையையும் தாங்கி கொள்ளலாம். அதுவும் எலும்பை ஊடுருவும் கார்த்திகை, மார்கழிப் பனியை கண்டால் பயப்படுவோம். மழையும் குளிரும் வாட்டும் இந்த காலக்கட்டங்களில் காய்ச்சலும் சளித் தொந்தரவும் எளிதில் வந்துவிடும். உதடுகளில் வெடிப்பு, கை, கால்களில் வறட்சி ஏற்படும். இதற்காக நாம் கவலைப்பட வேண்டாம். நாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் பனியும் குளிரும் நம்மை எதுவும் செய்யாது. ஒரே சீரான தட்ப வெப்பநிலை இல்லாமல் வெப்பமும் பனியும் கலந்து இருக்கும் நாட்களில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். பனிக்காலத்தில் ஏ டிபிக்கல் வகை வைரஸ் அதிகமாக தாக்கும். இந்த வைரஸ் கிருமிகள் தாக்கினால் 10 முதல் 13 நாட்கள் வரை வலி நீடிக்கும். சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்து வருவதுதான் இதற்குக் காரணம். இந்த வைரஸ் குழந்தைகளையும்,...

பாயிண்ட் பிரேக் - படம் எப்படி?

தலை சுற்ற வைக்கும் பாறை முகடுகள், கப்பலையே சுழற்றி அடிக்கும் ராட்சத அலைகள் இதற்குள் நடக்கும் திக் திக் திக் நிமிடங்கள் தான் பாயின்ட் பிரேக்.ஹீரோ ஜானி தன் நண்பனுடன் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்துகொண்டிருக்கும் வேளையில் எதிர்பாரா விதமாக நண்பன் தவறி விழுந்து இறக்க, அதோடு சாகச விளையாட்டுகளை விட்டுவிட்டு துப்பறியும் நிபுணராக வேலை செய்கிறார். இந்நேரத்தில் தான் அரசாங்கத்தின் சொத்துகள், விலைமதிப்புடைய பொருட்கள் என மூன்று சாகச வீரர்கள் கொண்ட குழு கடத்தி அதை ஏழை மக்களிடம் ஒப்படைக்கிறார்கள்.இவர்கள் யார் என கண்டறியும் பொறுப்பு ஹீரோ வசம் வருகிறது. தேடுதல் வேட்டையில் குறிப்பிட்ட குழுவிலேயே ஒருவராக மாறி அவர்களுடன் இணைந்து சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டுக்கொண்டே...

வெள்ளத்துல கார்கள் போச்சே! ஜிவி.பிரகாஷ், ஹாரிஸ்-நாடு முழுக்க நஷ்டக் கணக்கா இருக்கும் போது..?

போட்டு போட்டு புரட்டியெடுத்த வெள்ளம், பங்களாவாசிகளையும் கூட விட்டு வைக்கவில்லை. ஏழைக்கு ஈராயிரத்து சொச்சம் என்றால், பணக்காரர்களுக்கு பல லட்சங்கள் லாஸ். சிலருக்கு கோடிகளை தாண்டியும் நஷ்டம். கண்ணீரை அடக்கிக் கொண்டு, “கஷ்டம் எல்லாருக்கும்தானே?” என்று மனதை சமாதானப்படுத்திக் கொள்கிறவர்கள் ஓ.கே. ஆனால் எழவே முடியாமல் போனவர்கள்தான் ஏராளம் ஏராளம்.நாடு முழுக்க நஷ்டக் கணக்கா இருக்கும் போது, நாம எங்கய்யா போய் புலம்பறது? என்று கர்சீப்பால் வாயை அடைத்துக் கொண்டு விசும்புகிறார்களாம் ஜி.வியும் ஹாரிசும். ஏன்? இவர்கள் இருவருமே கார் பிரியர்கள். ஒரு காரோடு திருப்தியடையாமல் நான்கு அல்லது அதற்கு மேலும் என்று ஆசைப்பட்டவர்கள். அதனால்தான் இப்போது கண்ணீர். ஜி.வி.பிரகாஷின்...

தாரை தப்பட்டைக்கு ஏ! 18 இடங்களில் கட்? என்ன பாலா இப்படி..?

“ஏனென்றால் சப்ஜக்ட் அப்படிங்க?” என்கிறது ஏ-ரியா! ஒரு கரகாட்டக்காரிக்கும், நாதஸ்வர வித்வானுக்கும் நடுவேயிருக்கும் லவ்தான் கதை. ஏற்கனவே தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் போன்ற படங்களில் நாம் பார்த்த லவ்தான் இந்த படத்திலும் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஊரே ஒரு மாதிரி சிந்தித்தால், பாலாவின் மூளைக்குள் மட்டும் வேறொரு ரசவாதம் நடந்திருக்கும். ஆக, தாரை தப்பட்டை வேறொன்றை சொல்லும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.கரகாட்டம் என்பதே நள்ளிரவு ஆட்டம்தானே? ஊர் அடங்கி, குழந்தை குட்டிகளெல்லாம் தூங்கிய பின் தெரு தெருவாக ஆடிக்கொண்டே வருவார்கள். அவர்கள் பேசும் சில டயலாக்குகள் கூடியிருக்கும் வாலிப வயோதிக அன்பர்களுக்கு வயாக்ராவை ஊட்டி ஊட்டி வீட்டுக்குள் அனுப்பும்....

தந்தை பெரியார் - வாழ்க்கை வரலாறு

1. இளமைப் பருவம் காவும் கழனியும் நிறைந்த காவிரி ஆற்றின் அரவணைப்பில் அமைந்திள்ள ஊர் ஈரோடு. மஞ்சளும், மாவும் செழித்த நகரம் ஈரோடு. யாரோடும் வம்பு பேச்மல் தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்ந்து வந்தார் வெங்கட்ட நாயக்கர். வெங்கட்ட நாயக்கர் இளம் வயதிலேயே அப்பாவை இழந்தார். வசதியற்ற குடும்பம். எனவே, அவர் தனது பன்னிரண்டு வயதிலேயே கூலி வேலை பார்த்தார். கூலி பெற்றுத்தான் கூழ்கூடிக்க வேண்டிய நிலை. அவ்வளவு வறுமை. பதினெட்டு வயதில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் சின்னத்தாயம்மை. வெங்கட்ட நாயக்கர் – சின்னத்தாயம்மை வாழ்க்கை வண்டி ஓடிற்று. வண்டிமாடு வைத்துப் பிழைத்தார். நிலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. வண்டி மாட்டை விற்றார். அந்தப் பணத்தைக்கொண்டு சிறிய அளவில் பலசரக்குக் கடையொன்றைத் துவக்கினார். கணவருடன் சேர்ந்து அவரது மனைவி சின்னத்தாயம்மையும் உழைத்துப் பாடுபட்டார். நெல் குத்தி அரிசி வியாபாரம்...

அறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் - சர். ஐசக் நியூட்டன்

அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன் பூமிக்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர். அவர் ஒரு சமயம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் அங்கிருந்த அறைக் கதவில் பெரியதும் சிறியதுமாக இரண்டு துவாரங்கள் வட்டமாக இருந்ததைப் பார்த்தார். 'அறைக் கதவில் இரண்டு துவாரங்கள் போட்டிருக்கின்றீர்களே அது ஏன்?' என்று நியூட்டனிடம் கேட்டார். அதற்கு நியூட்டன் சொன்னார்: நான் சிறியதும், பெரியதும் என்று இரண்டு பூனைகள் வளர்க்கின்றேன். வீட்டின் அந்த அறையைப் பூட்டிக் கொண்டு வெளியில் போய் விட்டால் பெரிய துவாரம் வழியாக பெரிய பூனையும், சிறிய துவாரம் வழியாக சிறிய பூனையும் அறைக்குள் வருவதற்காகவே இந்த...

விஜய் அவர்களே-அடுக்குமொழி பேசுகிறவர்களை சேர்க்காமலிருப்பது -மற்றவர்கள் சிரிக்காமலிருக்க உதவும்!

போன வருஷத்தில் புலியடித்து அதனால் கிலியடித்துப் போயிருந்தீர்கள். ராசிநாதன் சற்று பலமாக இருப்பதால் இந்த வருடம் தெறிக்க விடுகிற யோகம் வரும். பயண காலங்களில் பெண் தெய்வங்கள் சில உங்களுக்கெதிராக உக்கிர கதியில் இயங்கி வருவதால், அந்த தெய்வங்களின் காந்த பலம் அதிகம் வீசும் போயஸ் பகுதியை தவிர்ப்பது நல்லது. அடுக்குமொழி பேசுகிறவர்களை அருகில் சேர்க்காமலிருப்பது உங்களை பார்த்து மற்றவர்கள் சிரிக்காமலிருக்க உதவும்! இந்த வருஷமாவது கட்சிக் கொடி தைக்கலாம் என்று கவர்ச்சி திட்டத்துடன் அழைக்கும் டெய்லர்களின் சகவாசத்தை இன்னும் நாலைந்து வருஷத்துக்கு ஒத்திப் போடுவது நலம். ஜல ராசிப்படி உங்களுக்கு தோஷம் வந்து சில வாரங்கள் ஆகியிருப்பதால், கோட்டூர்புரம், அடையார், முடிச்சூர்...

நாய்க்கு எப்படி பேண்ட் போடணும்.... நெட்டைக் கலக்கும் ஒரு 'அடடே.. அயயே' விவாதம்!

நாய்க்கு எப்படி பேண்ட் போட வேண்டும் என்பது தான் தற்போது இணையத்தில் 'பயங்கர' பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் கருத்து என்றால் நம்புவீர்களா..? நீங்கள் நம்பாவிட்டாலும் அது தாங்க உண்மை... பேசாம நம்பிருங்க.ரோம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் எனச் சொல்வதுண்டு. அதுபோல், நாட்டில் எத்தனையோ விஷயங்கள் இருக்கும் போது, சமயங்களில் அவற்றில் இருந்து விலகி நெட்டிசன்கள் வித்தியாசமாக எதையாவது பேசி, வாதம் (சில நேரங்களில் வதம்) செய்து கொண்டிருப்பார்கள்.இப்போதும் அப்படித்தான், நான்கு கால்களைக் கொண்ட நாய்க்கு எப்படி பேண்ட் போட்டு விடுவது என்பது அவர்களது விவாதப் பொருளாக மாறியுள்ளது.செல்லப்பிராணி...நான்கு கால் உயிரினமான நாய், பல வீடுகளில்...

தமிழ் திரை இசையின் துரோணாச்சாரியார்-மேற்கத்திய இசை குரு- தன்ராஜ் மாஸ்டர்

ஒரு படத்திற்கு கூட இசை அமைக்காத  தன்ராஜ் மாஸ்டரை தவிர்த்து விட்டு தமிழ் சினிமா இல்லை. ஆச்சர்யமாக இருக்கிறதா... சென்னை மயிலாப்பூரை ( பூர்வீகம் தஞ்சாவூர் ) சேர்ந்த தன்ராஜ் மாஸ்டர் தமிழ் திரை இசையின் துரோணாச்சாரியார். வெஸ்டர்ன் கிளாசிகல் மியூசிக் எனப்படும் மேற்கத்திய இசை குரு. இளையராஜா ,கங்கை அமரன் , AR ரஹ்மான் , தேவா , வித்யாசாகர் , மலையாள இசை அமைப்பாளர் ஷ்யாம் ... எல்லோரும் அவரின் பெருமைக்குரிய சீடர்கள்... இவர்கள் அனைவரும் திரை இசைக்கான அடிப்படை பயிற்சி  , வெஸ்டர்ன் கிளாசிகல் இரண்டையும் தன்ராஜ் மாஸ்டரிடம் பயின்றார்கள். தன் முதன்மை சீடர் ராசையாவை ராஜா என்றே அழைத்தார். பிறகு அன்னகிளியின் போது பஞ்சு அருணாசலம் அவர்கள் இளையராஜா என மாற்றினார்.ரஹ்மான்...

'துப்பாக்கி'யை தொடர்ந்து‘அகிரா’விலும் கலக்கப்போகும் - முருகதாஸ்

விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படம் பிரமாண்ட வெற்றிபெற்றது. மும்பையில் படமான துப்பாக்கியில் விஜய் ராணுவ வீரராக நடித்திருந்தார்.இன்னமும் மும்பை செண்டிமெண்டை மறக்காத முருகதாஸ், அடுத்து மகேஷ் பாபுவை வைத்து இயக்கவுள்ள படத்தையும் மும்பையிலேயே எடுக்க திட்டமிட்டுள்ளார்.இப்போது சோனாக்ஷி சின்ஹா, அனுராக் கஷ்யாப், ராய் லட்சுமி அகியோர் நடிக்கும் ‘அகிரா’ படத்தை இயக்கிவரும் முருகதாஸ், இந்த படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் மகேஷ்பாபு படத்தை தொடங்குவார் என தெரிகிறது.துப்பாக்கியில் பணியாற்றிய சந்தோஷ் சிவன் தான் இந்த படத்திலும் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கத...

எத்தனை வருஷமானாலும் திருந்தாத தமிழ்சினிமா காட்சிகள்!!!

தமிழ் சினிமாவுக்கென்று தவிர்க்க முடியாத சில காட்சிகள் உண்டு. கொஞ்சம் ரீல் ஓட்டலாமா?உருட்டுக் கட்டை அடி காட்சிகள்:தமிழ் சினிமாவுக்கு இப்படி ஒரு காட்சியைக் கண்டுபிடித்துக் கொடுத்த பெருமை சுந்தர்.சி அவர்களையே சேரும். ஆமா பாஸ், தலையில் உருட்டுக் கட்டையால் அடித்தால் மயக்கம் வரும் என்பதைக் கண்டுபிடித்த விஞ்ஞானியாச்சே அவர். கல்யாணத்தை நிறுத்தும் காட்சியில் மாப்பிள்ளையை கடத்தணுமா அல்லது பெண்ணைக் கடத்தணுமா என பக்காவா ஸ்கெட்ச் போட்டு, எடுடா அந்த உருட்டுக் கட்டையை என்று ஆளாளுக்குக் கட்டையும் கையுமாகக் கும்பல் கும்பலா சுத்துவாங்க. போற போக்கைப் பார்த்தா க்ளோராஃபார்முக்கு வேலையே இருக்காது போல!மொட்டை மாடிக் காட்சிகள்:ஹீரோ மொட்டை மாடியில் நின்னுக்கிட்டு காத்தாடிக்கு...

தழும்புகளை மறைக்க வேண்டுமா..? இந்த ஜூஸ்களை கொண்டு மாஸ்க் போடுங்க..

தழும்புகளை மறைக்க வேண்டுமா? இந்த ஜூஸ்களை கொண்டு மாஸ்க் போடுங்க... நம் உடலில் உள்ள மிகவும் மோசமான மற்றும் தேவையற்ற பகுதிகளாகவே தழும்புகள் உள்ளன. உடலில் காயம் அல்லது வெட்டு ஏற்பட்ட இடமம் என எங்கு வேண்டுமானாலும் தழும்புகள் ஏற்படும். விபத்து, தொற்று அல்லது அரிப்பினால் பாதிக்கப்பட்டு காயம் உருவாகி தோல் புதிதாக உருவாகி இருக்கும் இடம் தான் தழும்பு என்று அழைக்கப்படுகிறது. புதிதாக தோல் வளர்ந்த இடத்தில் புரோட்டினின் அமைப்பு மாறுபட்டு இருப்பதால், அந்த இடம் மட்டும் வித்தியாசமாகவும், சொரசொரப்பாகவும் தோன்றும். சில ஆண்டுகளுக்குப் பின்னர் தான் தழும்புகள் சற்றே சாதாரணமாக காட்சியளிக்கத் துவங்குகின்றன. ஆனால், காலம் செல்லச் செல்ல இவை வளருவதில்லை. இங்கு தான் நீங்கள் சில சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கும். தழும்புகளை நீக்குவதற்காகவே பல இரசாயன மருந்துகள் கிடைத்து வருகின்றன. ஆனால் அவை குறுகிய காலத்திற்கு மட்டுமே...

திரு. கமல் அவர்களே-வாக்கு ஸ்தானத்தில் சனி சப்பணமிட்டு அமர்ந்திருப்பதால்..

நட்சத்திர பலன்கள் 2016 வாக்கு ஸ்தானத்தில் சனி சப்பணமிட்டு அமர்ந்திருப்பதால் பேச வேண்டிய எதையும் கடிதம் வாயிலாகவோ, மெயிலாகவோ, நேரிடையாகவோ, அல்லது பக்கத்துவீட்டுக்காரர் மூலமாகவோ கூட பேசாமலிருப்பது நல்லது. பின்பு அது பேட்டியாக வந்துவிட்டதே என்று புலம்புவதை கணிசமாக குறைக்கும். நீண்ட வருஷங்களாக பரணில் போட்டு வைத்த பழசு பட்டுகளுக்கு திடீர் மரியாதை கிடைக்கும். வீட்டில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறு, வாசலில் தேங்கியிருந்த குப்பை கூளங்கள் அகலவில்லையே என்று கடந்த வருஷத்தில் நீங்கள் பட்ட கவலை ராசிநாதனின் அமைதி காரணமாக மெல்ல மெல்ல மறையும். பவுர்ணமி நாட்களில் தொடர்ந்து சந்திரனை வழிபட்டால், நீங்கள் பேசுவதை நீங்களே புரிந்து கொள்கிற அளவுக்கு வாக்கில்...

தன்ராஜ் மாஸ்டரிடம் இசை பயின்ற இளையராஜா

எல்லா வாத்தியங்களையும் வாசிக்கத் தெரிந்தவரும், பல இசைக் கலைஞர்களை உருவாக்கியவருமான தன்ராஜ் மாஸ்டரிடம் இளையராஜா இசை பயின்றார். இதுபற்றி இளையராஜா கூறியதாவது:- "திருச்சியில் நான் இசை அமைத்த நாடகமான ஓ.ஏ.கே. தேவரின் "மாசற்ற மனம்'' அரங்கேறிய பின், சென்னைக்குப் புறப்பட்டோம்.அப்போது, திருமதி கமலா அவர்களிடம், "கர்நாடக இசை அல்லது வெஸ்டர்ன் (மேற்கத்திய) இசை கற்றுக் கொடுக்க யாராவது இருந்தால் சொல்லுங்கள். நான் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்றேன். "கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்கும் யாரையும் எனக்குத் தெரியாது. மேற்கத்திய இசை கற்றுத்தரும் மாஸ்டர் ஒருவர் இருக்கிறார். அவருடைய மாணவர் ஒருவரை எனக்கு தெரியும். அவரிடம் சொல்லி உங்களை அழைத்துப் போகச் சொல்கிறேன்''...