Monday, December 28, 2015

“இனிமே இந்திய பொருளாதார நிலைமை .. ஆஹா.. ஓஹோ .. பேஷ் ..பேஷ்!”- உலக நாடுகள் கணிப்பு ..

2016-ம் ஆண்டு 7.3% மற்றும் 2017-ல் 7.5% என்ற விகிதங்களில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி யடையும் என்று ஐநா ஏற்கெனவே கணித்துள்ள நிலையில் .2030-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கும் என இங்கிலாந்தின் பிரபல பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான சி.இ.பி.ஆர் (Centre for Economics Business and Research) தெரிவித்துள்ளது.

முன்னதாக“வரும் பத்தாண்டு காலக்கட்டத்தில் அதிவேகமாக வளரும் ஆற்றல் இந்திய பொருளாதாரத் துக்கு உள்ளது. அதாவது 7% என்ற சீரான பொருளாதார வளர்ச்சி எதிர்ப்பார்க்கப் படுவதால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா அதிவேக வளர்ச்சி பொருளாதார நாடாக உயர்வடைய வாய்ப்புள்ளது” என்று ஹார்வர்டு பல்கலைக் கழக பன்னாட்டு வளர்ச்சி மைய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கும் போது, சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து மந்தநிலை கண்டு ஆண்டுக்கு 4.3% பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும். கச்சா எண்ணெய் பொருளாதார நாடுகள் மற்றும் பிற உற்பத்தி/ நுகர்வுப் பொருள் பொருளாதார நாடுகள் பொருளாதார மந்தநிலையை எதிர் கொள்ளும் வேளையில் தெற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் அதிவேக பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

இந்தியா தனது உற்பத்தித் திறன்களில் முக்கியமான வளர்ச்சி நிலையை பெற்றுள்ளது. வித்தியாசமான பொருட்கள் மூலம் இந்தியாவின் ஏற்றுமதிகள் பல்படித்தானதாக மாறும் வாய்ப்புள்ளது. அதாவது மருந்துப்பொருட்கள், வாகனங்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இது குறித்து ஹார்வர்டு கென்னடி பள்ளியின் பொருளாதார வளர்ச்சித்துறை பேராசிரியர் ரிகார்டோ ஹாஸ்மேன் கூறும்போது, “சீனா இத்தகைய பொருட்கள் மூலம் தனது தனிநபர் வருவாயை 10 ஆண்டுகளுக்குள்ளாகவே இரட்டிப்பாக்கியுள்ளது. அதே போல் வளர்ச்சியை இந்தியா எட்ட அடுத்த 10 ஆண்டுகளில் வாய்ப்புகள் கூடிவந்துள்ளன” என்று கூறியிருந்தார்.

இந்நிலைதான் வரும் 2030-ம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10,133 பில்லியன் டாலராக இருக்கும். அமெரிக்கா 32,996 பில்லியன் டாலர்களுடன் 2-வது இடத்திலும், சீனா 34,338 பில்லியன் டாலர்களுடன் முதலிடத்திலும் இருக்கும் என கணித்துள்ளது. 2030-ல் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும் என்றாலும், 2019-ம் ஆண்டிற்குள் பிரிட்டனை முந்திச்சென்று காமன்வெல்த் நாடுகளில் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் எனவும் ஜி 8 நாடுகளில் ஒன்றாக இந்தியா மற்றும் பிரேசில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment