Saturday, December 19, 2015

உடை மாற்றும் அறையில் மறைமுக கேமரா? கண்டுபிடிப்பது எப்படி?

இருவழி கண்ணாடிகளை கண்டுபிடிப்பது எப்படி? TWO WAY GLASSTrial Room உடை மாற்றும் அறை முன்பாக உங்கள் செல் போனிலிருந்து கால் செய்ய வும். கால் செல்கிறதா என்பதை சரி பார்க்கவும். அறையினுள் சென்ற பிறகு மீண்டும் கால் செ ய்து பார்க்கவும். உங்கள் செல் போனிலிருந்து கால் செய்ய முடிய் வில்லையெனில் நிச்ச யமாக அங்கே மறைமுகமாக கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளவும்.வீடியோ கேமராவிற்குறிய பைபர் ஆப்டிக் கேபிளின் அலைவரிசை செல்போனின் அலைவரிசையுடன் இடையூறு செய்யும்போது உங் களால் கால் செய்ய முடியாது. இருவழி கண்ணாடி என் பது நம்மால் கண்ணா டிக்கு பின்புறம் இருப்ப வரை பார்க்க முடியாது ஆனால் அவரால் நம் மை பார்க்க முடி யும்.நீங்கள் ஹோட்டல் அறையிலோ அல்லது குளியளறையிலோ...

அனிருத் மீது ரஜினி கடும் கோபம்... 'அவனை சேர்க்காதீங்க'... மகள்களுக்கு அறிவுரை!

ரஜினியாக இருப்பது ரொம்பவே கஷ்டம் என்பார்கள். காரணம் அவர் அமர்ந்திருக்கும் இடம் அப்படி. ரஜினி இப்படி ஒரு சிகரத்தில் இருக்கிறார்... அவரது நெருங்கிய உறவினர்களான நாம் செய்யும் எந்த செயலும் அவரைக் கடுமையாக, அதுவும் உடனடியாக பாதிக்குமே என்ற நினைப்பு அவரது உறவினர்களுக்கு பெரும்பாலும் இருப்பதில்லை. பல தீவிர ரசிகர்களுக்கு ரஜினியின் குடும்பத்தார் செய்யும் பல செயல்களில் உடன்பாடு இருப்பதில்லை. உதாரணம், தனுஷ், அவர் தந்தை கஸ்தூரிராஜா, இப்போது ரஜினியின் மைத்துனர் மகன் அனிருத். முதல் முதலில் அனிருத் கேவலப்பட்டது, தன்னைவிட பல வயது மூத்த நடிகை ஆன்ட்ரியாவின் உதட்டோடு உதடு வைத்து போஸ் கொடுத்த படங்களை வெளியிட்ட போதுதான். அப்போதே அனிருத்தை அழைத்து, 'பெரிய அளவுக்கு...

ஒரு 'பீப்' ஒரு மாசம் டைம் கேக்குது... இன்னொரு 'பீப்' நான் அவனில்லைங்குது!

பீப் பாடல் விவகாரம் தொடர்பாக, நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு கோவை போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இருவரும் இன்று ஆஜராகாமல் பொய்யான காரணங்களைக் கூறி கடிதம் எழுதியுள்ளனர்.இந்த இரு பீப் பிரதர்களின் சார்பில் அவர்களது தந்தைகள் காவல் நிலையத்தில் கடிதம் அனுப்பியுள்ளனர்.சிம்பு பிசியாக (?!) இருப்பதால் 30 நாள் அவகாசம் கேட்டு அவரது தந்தை டி.ராஜேந்தரும், அனிருத்துக்கும் இந்த பாடலுக்கும் சம்பந்தமே இல்லை என அவரது தந்தை ரவி ராகவேந்திரரும் விளக்க கடிதம் அனுப்பியுள்ளனர்.இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு எழுதி, பாடிய ஆபாச பாடலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இருவருக்கும்...

ரஜினிக்கு எந்திரன் 2 தலைப்பு கொடுக்க மறுத்த சன் நிறுவனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளிவந்த படம் எந்திரன். இப்படத்தின் அடுத்த பாகத்தை அதிகாரப்பூர்வமாக தயாரிக்க உள்ளது கத்தி படத்தை எடுத்த லைகா நிறுவனம். ஷங்கர் இப்படத்தை ஹாலிவுட்டுக்கு இணையாக இயக்கவுள்ளாராம்.மேலும் முதலில் இப்படத்துக்கு 2.0 என்று தான் பெயர் வைத்தனர். திடிரென்று நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் பெயரை 2.o (ஓ) என்று குறிப்பிட்டுள்ளனர்.ஏன் கடைசி நேரத்தில் பெயர் மாற்றம் என்று விசாரித்தால் எந்திரன் படத்தை தயாரித்த சன் நிறுவனத்திடம் எந்திரன் 2 தலைப்பு கொடுக்க கேட்டுள்ளது படக்குழு.ஆனால் அவர்களிடம் இருந்து எந்தவித பதிலும் வராததால் கடைசி நேரத்தில் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது என்று கூறப்படு...

அவ்ளோ கோவமா லிங்கா மேல?

பொறுத்து பொறுத்து பார்த்து படம் எடுக்கக் கிளம்பிவிட்டார் லிங்காரவேலன்! லிங்காவால் ஏற்பட்ட நஷ்டப் பிரச்சனையை ஐ.நா சபை வரை ஒலிக்க வைத்த மாவீரன்! தலைவர் லிங்காவை ஊற்றி மூடிவிட்டு கபாலிக்கு போன பின்பும், இவரது கோபம் தீரவில்லை போலிருக்கிறது. ‘அட்றா மச்சான் விசிலு’ என்றொரு படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார். படம் என்ன டைப்? ஸ்பூப் வகைதான். அதாவது முன்பு வந்த படங்களை கிண்டல் செய்து எடுப்பது.இவருக்கும் ரஜினிக்கும் ஏற்கனவே பிரச்சனை. இவர் எடுக்கும் படமோ ஸ்பூப் டைப். அப்படியென்றால் ரஜினி உள்ளே வருவார்தானே? வந்துவிட்டார்.‘அட்றான் மச்சான் விசிலு’ படத்தில் ஒரு சீன்.படத்தில் கபாலி என்ற பெயருடன் உலா வரும் ஹீரோவான பவர் ஸ்டார் சீனிவாசனை ஒரு தூணில் கட்டி வைத்து...

Wi-Fi (வை-ஃபை) - பற்றி ஓர் அதிர்ச்சி தகவல்!

லேப்டாப் (மடிக்கணனி)களில் Wi-Fi (வை-ஃபை) மூலம் இன்டர்நெட்டினை உபயோகிக்கும் போது ஆண்கள் அக்கணனிகளை தமது மடியில் வைத்து உபயோகிப்பதனை தவிர்க்குமாறு புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு மடியில் வைத்து லேப்டாப் (மடிக்கணனி)களைப் பயன்படுத்துவதன் மூலம் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படுவதாக ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. இக்கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியமும் குறைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்மை பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அவ்வாராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் செல்ஃபோன்கள் (கையடக்கத்தொலைபேசி) மற்றும் லேப்டாப் (மடிக்கணனி) ஊடாகவும் Wi-Fi (வை-ஃபை) உபயோகிக்கும் போதும் இது தொடர்பில் கவனமாக இருக்கும் படியும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதன்போது 29 பேரின் விந்தணு மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. Wi-Fi...

வடிவேலு இடத்தில் மொட்டை ராஜேந்திரன்

வடிவேலுவுக்குப் பிறகு அவர் அளவுக்கு காமெடி செய்யக்கூடிய நடிகர்கள் வரவில்லை என்று கூறிய போதும் அதன்பிறகு சந்தானம், சூரி என இளவட்ட நடிர்களும் என்ட்ரியாகி ரசிகர்களை சிரிக்க வைத்துக்கொண்டுள்ளனர்.அவர்களைத் தொடர்ந்து வில்லன், அடியாள் என்று நடித்து வந்த நான் கடவுள் ராஜேந்திரனும் சில படங்களில் காமெடியனாக நடித்தார். அப்படி அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றதால் தொடர்ந்து அவர் காமெடியால் மிகவும் ரசிக்கப்பட்டார்.அதனால் இப்போது அவரும் முக்கிய காமெடியனாகி விட்டார். மேலும் தெனாலிராமன், எலி படங்களில் நடித்த வடிவேலு அடுத்து காமெடியனாகவும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்து அவருக்காக காமெடி காட்சிகளை உருவாக்கிய சில இயக்குனர்கள், தற்போது வடிவேலு மதுரையிலேயே...

நரம்புகளை சுத்தம் செய்யும் சித்தாசனம்

நமது உடலில் உள்ள 72000 நாடி நரம்புகளை சுத்தம் செய்யும் எளிதான ஆசனம் இது. செய்முறை : முதலில் தரையில் அமருங்கள். பின்னர் இடது காலை மடித்து வலது கணுக்காலில் படும்படி மடித்து அமருங்கள். அடுத்தது வலது காலை மடித்து இடது தொடை மீது படும்படி செய்யுங்கள். இரு கைகளையும் சின் முத்திரை தாங்கி கால் முட்டிகள் மீது வைத்து மூச்சை நிதானமாக இழுத்து விட வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தில் 20 நிமிடம் அமர வேண்டும். பிறகு கைகளை சமநிலைக்கு கொண்டு வந்து பின்னர் நிதானமாக  ஒவ்வொரு காலாக பிரித்து நிமிர்த்தி அமர்ந்த பின் எழ வேண்டும். பயன்கள் : இந்த ஆசனத்தை செய்வதால் மனம் அமைதி அடையும். ரத்த ஒட்டம் சீராகும். பின்புறம் மற்றும் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் குறையும்....

'பீப்' பாடல் குறித்து ரஜினியிடம் கேளுங்கள்: கங்கை அமரன் காட்டம்

 'பீப்' பாடல் குறித்து ரஜினியிடம் கருத்து கேளுங்கள் என்று கங்கை அமரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியிருப்பதாக கூறப்படும் 'பீப்' பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பல்வேறு அமைப்புகள் சிம்பு வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் வரிகள் இருப்பதாக கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை, தஞ்சாவூர், விருதுநகர் உட்பட தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பாடல் குறித்து இளையராஜாவிடம் கருத்துக் கேட்டு, அவருடைய பதிலும் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.இந்நிலையில் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன்...

சீசனுக்கு சீசன் மாறும் தமிழ் சினிமா

தமிழ் சினிமாவிற்கு என்று அவ்வபோது ஒரு சீசன் வந்து போகும். அந்த வகையில் 90களில் இருந்து 2000 வரை வந்த படங்களில் பெரும்பாலும் காதல் கதை படங்கள் தான்.ஹீரோ ஒரு பெண்ணை துரத்தி துரத்தி காதல் செய்வார், முதலில் முடியாது என்று சொல்லும் பெண், டார்ச்சர் செய்யும் ஹீரோவையே காதலிக்க தொடங்குவார், பின் வீட்டில் எதிர்ப்பு, அமெரிக்கா மாப்பிள்ளை வரவு, கிளைமேக்ஸில் அவரே ஹீரோ-ஹீரோயினை சேர்த்து வைத்து சொந்த காசிலேயே டிக்கெட் போட்டு அமெரிக்கா சென்று விடுவார்.முதன் முதலாக இதுப்போன்ற கதையில் வெளிவந்த படங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது பாலிவுட் படமான dilwale dulhania le jayenge என்ற படம் தான். ஷாருக், கஜோல் நடிப்பில் இப்படம் கிட்டத்தட்ட 15 வருடங்கள் திரையரங்கில்...

பீப் பாடல் விஷயத்தில் நடிகர் சங்க தலைவரை வம்புக்கு இழுத்த சரத்குமார்

நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தோல்வியுற்று, நாசர் வெற்றி பெற்ற கதை அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது சரத்குமார் தன் அரசியல் சார்ந்த வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பீப் பாடல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப, ‘பெண்களை பற்றி தவறாக யார் பாடினாலும் கண்டிக்கத்தக்கது தான்.மேலும், சிம்பு இதை நீதிமன்றம் வாயிலாக சந்திப்பதாக கூறிவிட்டார். ஆனால், நான் நடிகர் சங்க தலைவராக இருந்த போது சின்ன பிரச்சனைக்கு கூட சரத்குமார் என்ன செய்கின்றார் என கேட்டார்கள், தற்போதைய நடிகர் சங்க தலைவர் என்ன செய்கின்றார், அவரிடம் நீங்கள் கேட்டீர்களா?’ என்று பேசினார...

இளையராஜா...எப்பவுமே இப்படியா? இல்ல… இப்ப மட்டும்தான் அப்படியா?

“எந்த இடத்தில் என்ன கேள்வி கேட்பது என்கிற விவஸ்தையே இல்லேயேப்பா?”சமூக வலைதளங்களில் நடந்து வரும் இதுபோன்ற விவாதமே விநோதமாக இருக்கிறது! அரசியல்வாதிகள் போலில்லை, சினிமா பிரபலங்கள்! அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தாக வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் அப்படியல்ல. தினம் தினம் கூவ வேண்டியிருக்கிறது. கூவ மறந்தால், ஓட்டு போடும்போது அவர்களை மறந்துவிடும் பொதுஜனம்.இதில் கலையுலகம் எப்படி? சினிமாக்காரனாக இருக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதிக்குரிய லட்சணங்கள் வேண்டும். அரசியல்வாதிக்கு கிடைக்கிற எல்லா மரியாதைகளும் தனக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படியென்றால் அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டுமல்லவா? அதுதான் நடக்காது. சந்திப்பதேயில்லை. அப்புறம் எப்படி கேள்வி கேட்பது?விமான நிலையங்களுக்கு வரும் அவர்களை மறித்து கேள்வி கேட்கிறார்கள். சாவு வீட்டுக்கு வந்தாலும் சரி....

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும், இளமைப் பொலிவுடன் வாழ உதவும் கறிவேப்பிலை...

கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும். இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது. தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கும். மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது. கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும். பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். கறிவேப்பிலைச் சாறு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத்...

சிம்புவிற்கும் பீப்புக்கும் சம்மந்தமே இல்லை- அதிரடி அறிக்கை

சிம்புவின் பீப் பாடலால் தமிழகமே கொதித்து எழுந்துள்ளது. அவரின் மீது தினமும் 10 புகார்கள் வந்து குவிகின்றது.இந்நிலையில் சிம்பு தரப்பில் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ‘சிம்பு ஒரு இசைப்பிரியர். நிறைய படங்களில் பாடல்கள் உருவாக்கியுள்ளார். இதனிடையில் நிறைய பாடல்களை எந்த படத்திலும் வெளியிடாமல், தனது சொந்த பயன்பாட்டிற்காக தயார் செய்து வைத்திருந்தார்.இதை யாரோ ஒரு விஷமி சிம்புவின் வெளிவராத ஒரு பாடலைத் திருடி அதில் பெண்களை கொச்சை படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்’ என கூறப்பட்டுள்ளது.ஆனால், எல்லோருக்கும் நன்றாக தெரியும் சிம்பு தான் அந்த வார்த்தைகளையும் பாடியுள்ளார் என்று, தற்போது திடிரென்று இப்படி பல்டி அடிப்பது...

வெளுத்து வாங்கிய ரசிகர்கள்- ஜேம்ஸ் வசந்தன் எடுத்த முடிவு?

சுப்ரமணியபுரம் என்ற மாபெரும் வெற்றி படத்திற்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் இளையராஜா குறித்து சில கருத்துக்களை வெளியிட்டார்.இந்த கருத்துக்கள் பலவும் இளையராஜாவை தாக்குவது போலவே இருந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் கோபமாகி அவரை கடுமையான வார்த்தைகளால் திட்ட தொடங்கினர்.அவரும் பொறுமையாக பதில் அளிக்க ஒரு கட்டத்தில் டுவிட்டர் பக்கத்தையே நீக்கி விட்டாராம...

மக்களை மொட்டையடிக்கும் சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்! விரிவான அலசல்!

[ நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம் ] "AMWAY " இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?. [i]ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக...

சிறுமிகளும், பிராய்லர் கோழிகளும் - ஒரு அதிர்ச்சி தகவல்..!

நெருங்கிய தோழியின் மகள் பூப்பெய்திய விழாவுக்குச் சென்றிருந்தேன். தோழியின் தூரத்து உறவினர் பெண்ணான ஒரு ஆசிரியையும் வந்திருந்தார். சடங்கு,சம்பிராதய நிகழ்வுகள் முடிந்ததும் அந்த ஆசிரியை பூப்பெய்திய பெண்ணின் வயதைக் கேட்டார். “9″ வயது என்றார்கள். இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியை ஒரு அதிர்ச்சித் தகவலைச் சொன்னார். இன்றைய பல குடும்பங்களில் வாரம் ஒரு முறை தவறாமல் பிராய்லர் சிக்கன் கோழிகளை வாங்கி சமைக்கின்றனர். ஆண்களுக்கு இது எப்படியோ, ஆனால் பெண்களுக்கு இது ஒரு விதத்தில் ஆபத்து என்றார். பண்ணைகளில் வளர்க்கப்படும் ப்ராய்லர் கோழிகள் நாற்பதே நாளில் பருத்து வளர ஹார்மோன் ஊசி போடுவது உண்டாம். இந்தக் கோழிகளை சமைத்துச் சாப்பிடும் நமக்கும் ஹார்மோன்கள் வேலை செய்கிறதாம். குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு வரும் முன்னரே பருவம் எய்தும் வேலையை இது செய்கிறது.இது பிஞ்சிலே பழுக்கும் அபாயம் ஆகும். தோழியை விசாரித்த...

மகதீரா - திரை விமர்சனம்

மிகப்பெரிய தாதாவான ராகுல் தேவ், காஜல் அகர்வாலை அடைய முயற்சி செய்கிறார். இதனால், தனது காதலன் அல்லு அர்ஜூனுடன் ஊரைவிட்டு செல்கிறார். அப்போது, ராகுல்தேவின் அடியாட்கள் இவர்கள் செல்லும் பஸ்சை வழிமறித்து, காதலர்களை கொலை செய்துவிட்டு, அந்த பஸ்சுடன் சேர்த்து எரித்து விடுகிறார்கள். இதில், காஜல் அகர்வால் இறந்துபோக, அல்லு அர்ஜூன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கிறார். அவரது முகம் ஒரு பாதி முழுக்க எரிந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்.இது ஒருபுறமிருக்க... இதே பஸ்சை மையப்படுத்தி மற்றொரு சம்பவம் இணைகிறது.டாக்டரான ஜெயசுதாவின் ஒரே மகன் ராம்சரண். கல்லூரியில் படித்து வரும் இவர் ஊரில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் எழுச்சிகரமான இளைஞர்....