Thursday, December 3, 2015

உப்பு நிறைந்த உணவுகள் எப்படி உங்கள் குழந்தையைப் பாதிக்கிறது என்று தெரியுமா?

இன்றைய தலைமுறைக் குழந்தைகள் அதிக அளவில் உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அப்படியானால் குழந்தைப் பருவத்திலேயே சோடியம் உடலில் அதிகமாகிறது என்று பொருள். இது மிகவும் ஆபத்தான மற்றும் கவலை தரக்கூடிய விஷயம். ஏனென்றால் உப்பினால் உடல் நலனுக்கு விளையும் கேடுகளை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

இன்றைய குழந்தைகள் பாப்கார்ன், நொறுக்குத்தீனிகள், சிப்ஸ் போன்ற பல உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணுகிறார்கள். இவை பொதுவாக பெற்றோர்களுக்கு சாதாரணமாக தோன்றினாலும் அவர்கள் வளர வளர இது போன்ற உணவுகளுக்கு அடிமையாகி இது ஒரு பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளது.

உப்பின் மூலம் விளையும் பாதிப்புகள் உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றையும் தாண்டி பல உடல் நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும். அதனால் தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் இளம் பருவத்தில் உப்பைக் குறைத்து அல்லது உப்பற்ற உணவுகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகள் உப்புச் சுவைக்கு ஈர்க்கப்பட்டு அதற்கு வாடிக்கையை வளர்த்துக் கொள்வதை தவிர்க்க முடியும்.

நல்ல பழக்கங்களோ அல்லது தீய பழக்கங்களோ சிறுவயதில் இருந்து தான் தொடங்குகின்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். இதனை நாம் குழந்தைப் பருவத்தில் செய்யத் தவறினால் பிற்காலத்தில் வருந்த நேரிடும்.

சென்னையில் ஃபேஸ்புக் சேஃப்டி செக் அம்சம் அறிமுகம்..!

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் சேஃப்டி செக் எனும் பாதுகாப்பு உறுதி செய்யும் தகவல் அனுப்பும் சேவையை சென்னைவாசிகளுக்கு செயல்படுத்தியுள்ளது. இன்று காலை செயல்படுத்தப்பட்ட இந்த சேவை மூலம் ஃபேஸ்புக் வாசிகள் தாங்கள பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதோடு அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பாதுகாப்பு குறித்த தகவல்களையும் அறிய முடியும்.

ஃபேஸ்புக் சேஃப்டி செக் அம்சமானது பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தும் தகவல்களை அனுப்பி வருகின்றது. இந்த தகவல் கிடைத்ததும் "Yes, let my friends know" என்ற பட்டனை க்ளிக் செய்தால் குறிப்பிட்ட பயனாளி பாதுகாப்பாக இருப்பதை ஃபேஸ்புக் அவர்களது நண்பர்களுக்கு தெரியப்படுத்தும்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னையில் ஃபேஸ்புக் தளத்தின் இந்த அம்சம் பெரும்பாலானோருக்கு உதவியாக இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

பகல் கொள்ளை அடிப்பவர்களுக்கு நடுவே இப்படியும் ஒரு பஸ் டிராவல்ஸ்: சல்யூட் அடிக்கலாமே!

வெள்ளத்தை காரணமாக வைத்து பகல் கொள்ளை அடிக்கும் நபர்களுக்கு மத்தியில் ரதி மீனா டிராவல்ஸ் தனது இரக்கத்தால் மக்கள் மனதில் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது.

நேற்று முன்தினம் சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டி வெள்ளக்காடானது. இதனால் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் ரத்து செய்யப்பட்டு கோயம்பேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டன.

பேருந்துகள் திடீர் என்று ரத்து செய்யப்பட்டதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரம் செல்லவிருந்த 25 பயணிகள் குழந்தைகளுடன் செய்வது அறியாது தவித்தனர். அவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள ரதிமீனா டிராவல்ஸை அணுகி சிதம்பரத்திற்கு ஒரு பேருந்தை இயக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் பரிதாப நிலையை பார்த்த அலுவலக அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் பேசி பேருந்தை இயக்க அனுமதி பெற்றனர்.


இதையடுத்து மாலை 4 மணிக்கு 25 பேருடன் ரதி மீனா பேருந்து சிதம்பரத்திற்கு கிளம்பியது. மகாபலிபுரம் சாலை வெள்ளக்காடானதால் பேருந்துகள் எல்லாம் திண்டிவனம் - செங்கல்பட்டு சாலைக்கு திருப்பிவிடப்பட்டது. இதனால் ரதி மீனா பேருந்து செங்கல்பட்டு சென்று அங்கிருந்து திண்டிவனத்தை அடைய இரவு 10 மணி ஆனது.

வெள்ளத்தை பார்த்து பயத்தில் இருந்த பயணிகளை பேருந்து ஓட்டுநர்கள், கிளீனர்கள் தேற்றியதோடு மட்டும் அல்லாமல் குழந்தைகளுக்கு பால், பிஸ்கெட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்களை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

மேலும் பயணிகளை உணவகத்திற்கு அழைத்துச் சென்று நிறுவன செலவில் உணவு வாங்கிக் கொடுத்துள்ளனர். உணவுக்கு பிறகு கிளம்பிய பேருந்து புதுச்சேரி, கடலூர் வழியாக சென்று இரவு 1 மணிக்கு சிதம்பரத்தை அடைந்துள்ளது.

வெள்ளத்தை காரணம் காட்டி ஆம்னி பேருந்துகள் பகல் கொள்ளை அடிக்கையில் ரதி மீனா டிராவல்ஸ் சென்னையில் இருந்து சிதம்பரம் செல்லும் கட்டணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு பயணிகளுக்கு உணவும், தைரியமும் கொடுத்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளது பாராட்டுக்குரியது.

சென்னையில் வெள்ளம் சூழ்ந்த சாலைகளை காட்டும் 'லைவ் மேப்' வசதி!

சென்னையில் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தண்ணீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகள் தனித்தனி தீவுகளாக மாறிவிட்டன. வீட்டில் சிக்கியவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கூட வெளியேற முடியாத அவல நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில், மீட்புப் பணிகளில் முப்படைகளும் களமிறக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தாண்டி தன்னார்வம் கொண்ட இளைஞர்களும் மீட்புப் பணிகளில் இறங்கியிருக்கின்றனர். ஒட்டுமொத்த தமிழகமும் தற்போது சென்னை மற்றும் கடலூர் பகுதிகளில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களையும், உதவிகளையும் அவசர கதியில் துவங்கியுள்ளன.

Chennai Live Map இந்தநிலையில், சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட சாலைகள் குறித்த தகவல்களை 'லைவ் மேப்' எனப்படும் நிகழ்நேர வரைபடம் உதவியுடன் அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதில், வெள்ளம் பாதித்த சாலைகள் குறித்த சாலைகள பதிவு செய்யவும், அவற்றை அறிந்து கொண்டு தவிர்ப்பதற்குமான வசதியாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

உறவினர்களையும், நண்பர்களையும் தெரிந்து கொள்ள அல்லது அழைத்து வரச் செல்வோர்க்கு இது உதவிகரமாக இருக்கும் என்று நம்பலாம்.

லைவ் மேப்பை காண இங்கே க்ளிக் செய்க.

பாதுகாப்பாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன்” கமல்ஹாசன்

கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையின் நிலைமை குறித்து நடிகர் கமல்ஹாசன் மிகவும் கவலையுடன் இணையதளம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

"ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும் அவதிப்படுவதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். உண்மையில் எனக்கு இப்படி இருப்பது வெட்கமாக இருக்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கே இந்த நிலைமை என்றால் பிற பகுதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஏழைகளுக்கும், நடுத்தர வகுப்பினருக்கும் இது ஒரு கெட்ட கனவு. பணக்காரர்கள் பிறர் படும் துன்பம் கண்டு வெட்கப்படவேண்டும் . நான் பெரிய பணக்காரன் இல்லையென்றாலும் ஒன்றும் செய்யமுடியாமல் வேடிக்கை பார்ப்பது எனக்கே வெட்கத்தை உண்டாக்கிறது.


ஒட்டுமொத்த நிர்வாகமும் குலைந்து போய்க் கிடக்கிறது, மழை நின்றாலும் சென்னை இதிலிருந்து மீண்டு வர பல மாதங்கள் ஆகலாம். மக்களின் வரிப்பணம் எங்குச் செல்கிறது எனத் தெரியவில்லை. நான் கருப்புப் பணம் வைத்திருப்பவன் அல்ல, ஒழுங்காக வரி கட்டுபவன். நான் உழைத்துச் சம்பாரித்துக் கட்டிய வரிப்பணம் உரியவர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை என நன்றாகத் தெரிகிறது.

எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, தங்களைக் கடவுளாக அறிவித்துக்கொண்ட ஆட்சியாளர்களின் முடிவுகள் மீதும் நம்பிக்கை இல்லை. யார் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, கார்ப்ரேட் திட்டங்களுக்கு ரூ.4000 கோடி செலவழிக்கிறார்களே, அதை 120 கோடி மக்களுக்குப் பிரித்துக்கொடுத்தால் அனைவரும் கோடிஸ்வர்கள்தானே.

இது போன்ற அசாதாரண நிகழ்வுகள் ஏற்பட்டால் உடனே எங்களைப் போன்றவர்களிடம் இருந்து பொருளாதார உதவிகளை அரசு எதிர்பார்க்கிறது, ஆனால் அதற்காகத்தான் அரசை நாம் நியமித்துள்ளோம் என்பதை மறந்துவிடுகின்றனர். அரசோடு ஒப்பிடுகையில் நான் குறைவாகவே சம்பாரித்தாலும், கொடுக்க வேண்டியது என் கடமை என்பதும் எனக்குத் தெரியும். கண்டிப்பாக நான் நிதியளிப்பேன் ஆனால் அது மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய பணக்காரனின் பணம் அல்ல, மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒருவனின் பணம். அரசு எல்லோரையும் ஒன்றாக நடத்தினால் ஏழை,பணக்காரன் பேதம் ஒழிந்து போகும்" என்றும் அதில் தெரிவித்துள்ளார்

வெள்ள நீரினால் சொறி, சிரங்கு வராமல் இருக்க பெட்ரோலியம் ஜெல்லி யூஸ் பண்ணுங்க...

வேஸ்லின் என்று பலராலும் அறிப்பட்ட பெட்ரோலியம் ஜெல்லி பலவாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் தற்போது கனமழையால் முழங்கால் அளவில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர் உள்ளது. அதிலும் இந்த நீரில் வெறும் மழை நீர் மட்டுமின்றி, சாக்கடை நீர் மற்றும் இதர கழிவு நீரும் கலக்கப்பட்டுள்ளதால், பல்வேறு நச்சுமிக்க மோசமான கிருமிகள் நம்மை தாக்க தயாராக இருக்கும்.

குறிப்பாக இந்த நீரால் முதலில் நம் சருமம் தான் அதிக அளவில் பாதிப்பிற்குள்ளாகும். எனவே எக்காலத்திலும் நம் சருமத்திற்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டியது அவசியம். இந்த பாதுகாப்பை பெட்ரோலியம் ஜெல்லி வழங்கும். ஏனெனில் இது மிகவும் அடர்த்தியானது என்பதால், சருமத்திற்கு மேல் ஓர் படலத்தை உருவாக்கிவிடும்.

இங்கு வேஸ்லின் என்னும் பெட்ரோலியம் ஜெல்லியைக் கொண்டு நம் சருமத்தைப் பராமரித்தால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தாவரங்களில் நடைபெறும் ஒளிச்சேர்க்கையின் மூலம் மின்சாரம் தயாரிப்பு

தாவரங்களில் நடைபெறும் ஒளிச்சேர்க்கையின் மூலம் எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று ஸ்வீடன் நாட்டின் லிங்கோபிங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், தெரிவித்துள்ளனர். தாவரங்கள், தங்களுக்கு தேவையான உணவை சூரிய ஒளியின் உதவியுடன், இலைகளில் உள்ள Chlorophyll மூலம் Photosynthesis செயல்பாட்டின் மூலம் உணவை தயாரித்துக்கொள்கின்றன.

ஸ்வீடனின் பல்கலைகழக விஞ்ஞானிகள், ரோஜா தோட்டத்தி்ல் செடிகளின் அடியில், நீரில் கரையும் பாலிமர் கலந்த நீரை பாய்ச்சினர். தாவரங்கள், மண்ணில் உள்ள ஊட்டச் சத்துக்களை எடுத்துக்கொள்வதைபோல, இந்த பாலிமரும், தாவரத்தினுள் செல்கிறது. தாவரத்தினுள் பாலிமர், அதிலுள்ள அயனிகளின் உதவியுடன் மின் வயர்களாக உருமாற்றம் பெறுகிறது.

ஒளிச்சேர்க்கையின் போது இலைகளில் தயாரிக்கப்படும் உணவு, தாவரங்களில் உள்ள மற்ற பகுதிகளுக்கு சைலம் மற்றும் புளோயத்தின் மூலமாக கடத்தப்படுவது போல், தாவரத்தினுள் உருவாகியுள்ள பாலிமர் வயரின் மூலம், இலைகளில் உருவாகும் ஆற்றல் கடத்தப்படுகிறது. சுவீடன் நாட்டு விஞ்ஞானிகளின் இந்த அரிய ஆராய்ச்சி, எதிர்காலத்தில் தாவரங்களை கொண்டு மின்சாரம் தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகளுக்கு உறுதுணை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவசர காலத்தில் மின்சாரமின்றி போனினை சார்ஜ் செய்வது எப்படி.??

ஊர் முழுக்க மழை வெள்ளம் சூழ்ந்திருக்கும் இந்நேரத்தில் அனேக இடங்களில் பாதுகாப்பு நலன் கருதி மின்சாரம் துன்டிக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன யுகத்தில் மின்சாரம் இன்றி தகவல் தொடர்பு முற்றிலும் முடங்கும் அபாயம் இருப்பதால் இந்த தொகுப்பு பகிரப்படுகின்றது.

கரண்ட் இல்லாமல் ஸ்மார்ட்போனினை சார்ஜ் செய்யாமல் இருப்போர், வீட்டில் இருக்கும் சிறிய 9 வோல்ட் பேட்டரி, நாணயம், கார் சார்ஜர் அல்லது டேட்டா கேபிள் பயன்படுத்தி நிமிடங்களில் சார்ஜரை உருவாக்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் டேட்டா கேபிள் அல்லது கார் சார்ஜரை மொபைல் போனுடன் இமைத்து, பின் 9 வோல்ட் பேட்டரியின் + டர்மினலில் நாணயத்தை அழுத்தி பிடித்து கார் சார்ஜர் அல்லது டேட்டா கேபிள் வயர்களை அந்த நாணயத்தில் வைத்தால் மொபைலில் சார்ஜ் ஏறும். தொடர்ந்து 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அவசர அழைப்புகளை மேற்கொள்ளவாவது உதவும்.

அசைவப்பிரியர்களே...இது உங்களுக்கான டிப்ஸ்!

கொழுப்பு அமிலமான(Fatty Acid) ஒமேகா-3 இயல்பான வளர்ச்சிக்கும், உடல்நலத்திற்கும் மிகவும் இன்றியமையாதது.

ஒமேகா 3 உள்ள உணவுகள்

ஒமேகா 3 உள்ள உணவுகளில் முதன்மையானவவை மீன்கள். அதுவும் சால்மன், துனா, சார்டின், ஹெர்ரிங், நெத்திலி போன்றவற்றில் அதிகம் அளவு ஒமேகா 3 உள்ளது.
இந்த வகை மீன்களை வறுக்காமல் உண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. வாரம் ஒருமுறை இந்த மீன்களை உண்டால் மாரடைப்பு வரும் சாத்தியக்கூறு 44% குறைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வால்நட் போன்ற கொட்டைகளிலும், ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பசலைக்கீரை, சணல் விதை எண்ணெய், கோதுமை போன்றவற்றில் அதிகமாக கிடைக்கும்.

சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கர்ப்பக் காலத்தில் பெண்களிடம் மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் பட்டியலில் இந்த ஒமேகா 3 க்கும் இடம் உண்டு.

முதலில் இது ஒரு வலி நிவாரணியாகவும் செயல்படும். உடலில் தேவையான அளவு ஒமேகா 3 இருந்தால் உடல் வலிகள் குறையும்.

உடலில் எரிச்சல்,சிவப்பாவது, மிகவும் சென்சிடிவ் ஆவது போன்ற பிரச்சனைகள் இருந்தால் இந்த ஒமேகா 3 குணமாக்கிவிடும்.

நம்புகளை வலிமைப்படுத்துகிறது, கண் மூளை செயல்பாடுகள் மற்றும் பக்கவாதம் வருவதை தடுக்கிறது.

மனச்சோர்வு, இதர மனநோய்களில் சிகிச்சை பயன்படுகிறது.
மூளை செயல்பாடு, நினைவாற்றல், புத்திசாலித்தனம் இவற்றை வளர்க்கும்.
உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும் பணியை செய்கிறது.
வலிப்பு, மாரடைப்பு இந்த இரண்டு நோய்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ள ஒமேகா 3 சாப்பிட வேண்டும்.

மீனுடன் தயிரோ அல்லது கீரை வகைகளோ சேர்க்கக்கூடாது, செரிமானப்பிரச்சனைகள் மட்டுமின்றி தோல் நோய்கள் வரக்காரணமாகின்றன.

கற்பூரம் கொடிய விஷம்!

‘கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!’
எனது நண்பரின் நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக ‘ரோலர்கோஸ்டர்’ போல மாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது என்று அவரே சொல்கிறார் இதோ கேளுங்கள்:

“வீட்டில் சாமி போட்டோவிற்கு முன் கற்பூரம் வைத்திருந்தோம். அதை ‘கல்கண்டு’ என்று நினைத்து மூடிவைத்திருந்ததை எப்படியோ திறந்து ஒரே ஒரு துண்டு கற்பூரத்தை கடித்து தின்றுவிட்டான். அதை உடனடியாக பார்த்த நான் கடித்திருந்த பாதியை வாயில் இருந்து எடுத்துவிட்டேன்.

‘கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?’- என்று மனைவி கூகுளில் பார்த்து தெரிவித்த அடுத்த நிமிடமே, என் மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது. அது நான்கு நிமிடம் நீடித்தது. உடனே ஆம்புலன்ஸ் 911 உதவிக் கேட்டேன். அவர்கள் வந்தபோது, இழுப்பு சரியாகிவிட்டது. முதலுதவிக்கு வந்தவர்கள் குழந்தை தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள்.
ஆனால், மீண்டும் கண்கள் செருக ஆரம்பித்துவிட்டன. உடனே ‘எமர்ஜென்ஸி’ பிரிவுக்கு குழந்தையை எடுத்துச் சென்றோம்.

கற்பூரத்திலிருக்கும் ‘கேம்பர்’ (Camphor) என்ற கொடிய நச்சுப் பொருள் கடுமையான பாதிப்புகளை உருவாக்கக் கூடியது – என்று ‘நச்சுத் தடுப்பு’ துறையினர் (பாய்ஸன் கண்ட்ரோல்) மூலம் அறிந்த எமர்ஜென்ஸி மருத்துவர்கள், உடனே அதற்கு தகுந்த சிகிச்சையில் இறங்கினார்கள்.
அதற்காக ‘சலைன்’ (டிரிப்) ஏற்ற ஊசி குத்தும் போது குழந்தை எந்த விதமான எதிர்ப்பையும் காட்டாதது எங்களுக்கு அடிவயிற்றைக் கலக்கியது. அதாவது அவன் சுயநினைவு இழந்த ‘டிப்ரெஷன் மோடு’க்கு சென்றுவிட்டிருந்தான்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் ‘டாலஸ் மெடிக்கல் சென்டரின்’ குழந்தை நல அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (சில்ரண்ஸ் ஐசியூக்கு) மாற்றப்பட்டான்.

ஆம்புலன்ஸில் இருந்து இறங்கும்போது “அப்பா!” – என்று ஈனஸ்வரத்தில் அவன் அழைத்தாலும் அது எனக்குத் தெம்பூட்ட தைரியமானேன்.

கேம்பர் என்னும் அந்த கொடிய நச்சுப் பொருளின் மூன்றாம் நிலை கோமாவுக்கு கொண்டு சென்றுவிடும். அதை என் மகன் குறைந்த அளவு சாப்பிட்டதால் கோமா நிலைக்கு செல்லாமல் தப்பித்துவிட்டான்.

இது ஒருவிதமான அதிஷ்டமேயானாலும் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தகுந்த நேரத்தில் கண்டதாலும், உடனே சிகிச்சைக்கு கொண்டு சென்றதாலும் இறையருளால் எங்கள் கண்மணியை எங்களால் காக்க முடிந்தது. அதுவும் கிட்டத்தட்ட 16 மணி நேர மருத்துவப் போராட்டத்துக்குப் பின்தான் அதுவும் சாத்தியமாயிற்று!”

கேட்டீர்களா… விபரீதத்தை?
அதனால், கற்பூரம் என்னும் கொடிய விஷப் பொருளை வீட்டில் வைப்பதை தவிருங்கள். குழந்தைகளுக்கு எட்டாமல் பாதுகாப்பாக வையுங்கள். அப்படி குழந்தைகள் ஏதாவது சாப்பிட்டதாக சந்தேகம் வந்தால்.. உடனே தாமதிக்காமல் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள். - See

உங்களை நீங்களை காப்பாற்றினால்தான் உண்டு: அப்துல் கலாம் உதவியாளர் விளாசல்... மீட்பு பணி தோல்வி..

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காத நிலையில், உங்களை நீங்களே காப்பாற்றிக்கொண்டால்தான் உண்டு என்று, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உதவியாளராக பணியாற்றிய பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

தனது முகநூலில் நேற்று காலை, பொன்ராஜ் கூறியிருந்ததாவது:

தமிழக முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள். 108-டை உடனடியாக சென்னை மக்களை காப்பாற்றும் ஒரே நம்பராக அறிவியுங்கள். ‪ஒரு சேவை நோக்கம் கொண்ட திறமையான அதிகாரிக்கு முழு சுதந்திரம் கொடுத்து அவர் சொல்வதை ராணுவம், தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழக ஆட்சித்தலைவர்களுக்கு ஒரே இடத்தில் அத்துணை 108 அழைப்புகளையும் ஒருங்கிணைத்து, உதவும் உள்ளங்களை இணைத்து உதவ ஏற்பாடு செய்யுங்கள்.

HAM Radio operators ஐ பயன்படுத்துங்கள். 108 மற்றும் FM ரேடியோ மூலம் மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்து தண்ணீரால் சூழப்பட்ட மக்களை மீட்க ஏற்பாடு செய்யுங்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளில்லா விமானங்களை உடனடியாக தண்ணீர் நிரம்பியிருக்கும் தாழ்வான பகுதிகளுக்கு அனுப்புங்கள், அதில் இருந்து வரும் வீடியோ மூலம் ஒருங்கிணைந்த மீட்புப்பணிக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

அமைச்சர்கள் பார்வையிட இன்று செல்ல வேண்டாம். தயவு செய்து அவர்களை நீங்கள் மக்கள் மற்றும் உதவும் இளைஞர்களிடம் இருந்து வரும் அழைப்புகளுக்கு தேவையான உதவிகள் சென்று அடைந்ததா என்பதை மட்டும் ஒழுங்காக அதிகாரிகளை கொண்டு செயல் பட வையுங்கள். மீனவர்களை பயன் படுத்தி படகுகளை செயல் பட நடவடிக்கை எடுங்கள்.

இதையெல்லாம் தமிழக அமைச்சர்கள் செய்த மாதிரி தெரியவில்லை. இப்படிப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக எந்த அறிவிப்பும் வரவில்லை. நேற்று இரவில் இருந்து வரும் எந்த அழைப்புகளுக்கும் சரியான பதில் அரசு கொடுத்த எந்த போன் நம்பரும் பதிலளிக்கவில்லை. எனவே இந்த வேண்டுகோள் பலன் உள்ளது என்று நீங்கள் நினைத்தால், குறைந்த பட்சம் இதை இன்று மதியத்திற்குள் செயல் படுத்தினால், உயிர் பலியை தடுக்கலாம்.

செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் உங்களை தொடர்பு கொள்ள செய்யும் எந்த முயற்சியும் உங்களை சுற்றியுள்ள அதிரிகாரிகளால் தடுக்கப்படுகிறது. எனவே தான் இதை நான் எழுதிகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், முடிந்தால் உங்களை நீங்களே காப்பற்றிக்கொள்ள வேண்டியது தான் - பேரிடர் மீட்பு தோல்வி என்று தெரிவித்துள்ளார்.

அவர் இன்று மேலும் கூறியுள்ளதாவது: இப்படி சொல்வதை தவிர என்ன செய்வது என்று தூரத்தில் இருக்கும் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால், நேற்று சென்னையின் மையப்பகுதிகளில் மழைபெய்யாமல் இப்படிப்பட்ட வெள்ளம் வரலாறு காணாதது.

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட விருக்கிறது ஆற்றோரம் இருக்கும் மக்கள், சைதாப்பேட்டை, அசோக் பில்லர், ரங்கநாதன் மேம்பாலம் போன்ற பகுதிகள் - அதாவது சென்னையின் மையப்பகுதியை சேர்ந்த மக்கள் இதுவரை இப்படி பட்ட வெள்ளத்தை பார்த்ததில்லை.

நேற்று மழையும் இல்லை - அப்படியிருந்தும் ஏரி திறக்கப்பட்டதால் 30000 கனஅடிக்கும் மேற்பட்ட தண்ணீர் இந்த பகுதிகளை எல்லாம் சூழ்ந்து கொள்ளும் என்றும் மக்களுக்கு எப்படி தெரியும்.

இல்லை அரசு எல்லோரும் பார்க்கும் ஊடகங்களில் முறையான அறிவிப்பு வெளியிட்டு மக்கள் அஜாக்கிரதையாக இருந்து விட்டார்களா, இல்லை அரசு அறிவிப்பே மக்களை சென்றடையும் முறையில் வெளியிடவில்லையா.

ஆற்று நீரோட்டம் வேகமாக போகும்போது படகில் மீட்க முடியாது. குறைந்த பட்சம், முக்கியமான சான்றிதழ்களை, பணத்தை மட்டுமாவது எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டி விட்டு மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வாய்ப்பு இருந்திருக்குமே.

என்ன சொல்வது. தலைமச்செயலகம் இருக்கும் சென்னைக்கே இந்த நிலைமை என்று சொன்னால் - கடலூர் மக்கள் பாவம், மற்ற கடலோர மாவட்ட மக்கள் அனுபவிக்கும் வேதனையை சொல்லி முடியாது.

சென்னை நண்பர்கள் இரவும் பகலும் தொடர்ந்து உதவி செய்யும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் கேட்கும் உதவியை, எந்த அதிகாரப்பூர்வ மான தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு மீட்பு பணியை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க வரும் படி தெரிவிக்க இயலவில்லை, யாரும் எந்த போனையும் எடுக்க வில்லை.
எடுக்கும் ஒரு நம்பர், தகவலை கேட்கிறார் ஆனால் அடுத்த நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள். ஏனென்றால் வாட்ஸ்ஆப் மூலம் தகவல் மட்டும் தான் பரிமாற முடிகிறதே தவிர, யாராலும் எந்த வித உதவியும் செய்ய முடியாத நிலை இருக்கிறது என்று நண்பர்கள் சொல்கிறார்கள்.

இருப்பினும், இராணுவம் களத்தில் இறங்கி படகுகள் மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. தமிழக காவல்துறை முடிந்தளவு காப்பாற்றும் மற்றும் மீட்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள், தன்னார்வ தொண்டர்கள், அந்த அந்த பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அது மட்டும் தான் சென்னை மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல்.

பாவம் சென்னை மற்றும் கடலூர் மக்கள் - அதிலும் பாவம் குடிசையில், மற்றும் தரைதளத்தில் வசிக்கும் மக்கள். இரண்டாவது, மூன்றாவது மாடியில் உயிரை கையில் பிடித்துகொண்டு உதவிக்காக காத்திருக்கும் மக்களை கெலிகாப்படர் சென்று மீட்பதற்கான முகாந்திரம் ஏதும் தெரியவில்லை.

இராணுவ விமானங்கள் - உயிர்காக்கும் ஜாக்கெட்டை, ரப்பர் படகுகளை மேலிருந்து கீழே போட்டிருந்தால் கூட, தன்னார்வ தொண்டர்கள் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியிருப்பார்கள். எதுவும் நடக்கவில்லை என்ன சொல்லி என்ன பயன். எதுவும் நடக்கவில்லை. நாம் கற்றுக்கொண்ட பாடம்.

பேரிடர் மீட்பு தமிழகத்தில் நடக்காது என்று இதன் மூலம் உறுதியாகி இருக்கிறது. ஏன் இந்தியாவிலேயே அது இன்றைக்கு ஒரு கேள்விக்குறியாகி விட்டது. பேரிடர் மேலாண்மை சுத்தமான தோல்வியில் முடிந்திருக்கிறது. பேரிடர் நிவாரணம் உயிரோடு இருக்கும் மக்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். மழை வெள்ளம் வடிந்த பின். ..... என்ற உண்மையை சென்னை மழை உணர்த்தி விட்டது.

பேரிடர் வந்து 24 மணி நேரம் கழித்து தான் இராணுவம் இந்தியாவில் வரஇயலும், வந்த பின் பணியை துவக்க 12 மணி நேரம் ஆகும், அதுவும் முழுமையாக கிடைக்காது.

குடிசையின் கூரைமேலும் மக்கள் நின்று கொண்டு காப்பாற்றுங்கள் என்று செய்தி வருகிறது. மாடிவீட்டில் நின்று கொண்டு குழந்தைகளை, முதியவர்களை வைத்துக்கொண்டு காப்பாற்றுங்கள் என்று செய்தி வருகிறது. இப்படிப்பட்ட பேரிடர் வந்த இதுவரை 48 மணி நேரம் முடிந்து விட்டது.

இதுவரை 20 இராணுவ கெலிகாப்டரில் 2000 படகுகளை போட்டார்கள் அதன் மூலம் தன்னார்வ தொண்டர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டார்கள் என்று செய்தி வந்திருக்கிறதா. 1000 இராணுவ வீரர்கள் கெலிகாப்படரில் வீட்டு மாடியில் இறங்கினார்கள் மாட்டிக்கொண்ட மக்களை காப்பாற்றினார்கள் என்று செய்தி வந்திருக்கிறதா.

டிஜிட்டல் இந்தியா முழக்கத்தால் ஒரு ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை தொலைபேசி எண்ணை கொடுக்க முடியாது. இந்தியாவில் வேலை செய்யும் ஒரே கால் சென்டர் 108 இருந்தும், அதை பயன்படுத்தி மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க முடியாத மாநில ஆட்சி முறை நிர்வாகம்.

இந்தியாவின் ஒரு மாநிலத்தில், அதுவும் ஒரு மாநகரத்தில், அதுவும் ஒரு சில பகுதிகளில், அதுவும் ஆற்றோரத்தில் இப்படிப்பட்ட பேரிடர் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதுவும் சுனாமி மாதிரி தீடிரென்று வந்துவிட வில்லை.

கிட்டத்தட்ட 1 மாதமாக மழை பெய்து கொண்டிருக்கிறது. ஏரிகள் நிரம்பிவிட்டன. ஏரிகள் உடையும் மக்கள் மேடான இடங்களுக்கு சென்று விடுங்கள் என்று எச்சரிக்கை கூட இல்லை. அந்த காலத்தில் கிராமத்தில் தண்டோரா போட்டு மக்களை மழை வெள்ளத்தில் காப்பாற்றியிருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு இப்படிப்பட்ட சமூக வலைத்தளங்கள் இருக்கும், தொழில் நுட்பம் வளர்ந்த காலத்தில் நாம்மால், நமது அரசால் பயன்படுத்த முடியவில்லை. அதன் மூலம் அங்கு சிக்கியிருக்கும் மக்களை காப்பாற்ற முடியாத பேரிடர் மேலாண்மை தான் இந்தியா கோடிக்கணக்கான நிதியில் இயக்கிக்கொண்டிருக்கிறது என்பதுதான் அடிப்படை உண்மையாக இருக்கிறது.

ஒவ்வொரு பேரிடருக்கும் பின்பே பாடம் கற்றுக்கொள்வோம், அதிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடத்தை வைத்து அடுத்த பேரிடருக்குள் மக்களை காப்பாற்ற நம்மால் முடியாது என்றால் அது எப்படிப்பட்ட ஆட்சிமுறை நிர்வாகாம். இது கூடவா இந்தியாவால் முடியாது. பேரிடர் வந்தால் கையறு நிலையில் நிர்வாகம், காப்பாற்ற ஆளில்லா மக்கள், இது தான் இன்றைய நிலை, இதை நினைத்தால் கடவுளை கும்பிடுவதை தவிர சாதாரண மனிதனுக்கு வேறு என்ன இன்றைக்கு இருக்கிறது.

மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அவர்களுக்குள் பேசிக்கொள்ள மட்டுமே முடியும். எல்லா உதவிகளும், மாநில அரசிற்கு மத்திய அரசு செய்யும் ஆனால், எல்லாம் முடிந்தபின் தான் அது வந்து சேரும் என்றால் அதற்கு பெயர் பேரிடர் மேலாண்மை இல்லை.

எல்லாம் முடிந்தபின் வந்து பார்வையிடும் கடவுளாக மட்டுமே அவர்கள் இன்றும் காட்சியளிக்கிறார்கள். அந்த தரிசனத்திற்கு ஏங்கும் நாங்கள் இழி பிறவிகள் ஆனோம் என்று ஆதங்கத்துடன் வெளிப்பட்டஇரவு முழுவதும் முயற்சித்தும் யாரும் உதவிக்கு வராத நிலையில் நண்பர் தனபால் எழுதிய இந்த பதிவை பகிர்ந்து, இதன் மூலமாகவாவது மாட்டிக்கொண்ட மக்களுக்கு ஏதாவது உதவி கிடைத்தால் நலம் என்ற நப்பாசை மட்டும் தான்.

ஒன்றே ஒன்று மட்டும் தான், இன்னும் 2 நாளைக்கு கனமான மழை பெய்தால், ஏரிகள் உடைவதற்கான வாய்ப்பு இருக்கிறது, எனவே மக்களே அடையாறு கரையோரம் மற்றும் ஆற்று கரையோரம் இருக்கும் மக்கள் முடிந்தவரை மேடான பகுதிகளுக்கு சென்று உயிரைக்காப்பாற்றிக்கொள்ளுங்கள், உயிரோடு இருந்தால் தான், அரசு அமைக்கும் இல்லங்களில் சென்று உணவை சாப்பிட்டு உங்கள் உயிரைக்காத்துக்கொள்ள முடியும்.

கடவுள் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை கடல் பக்கமாக திருப்பி தமிழக மக்களை, குறிப்பாக சென்னை, கடலூர் மக்களை காக்க வேண்டுவோமாக. கையறு நிலை. வேதனை... பாவம் மக்கள்.

இயக்குனர் சிகரமும் காவிய கவிஞரும் - பகுதி 1

 இயக்குனர் சிகரம் பாலசந்தர் பாடல்கள் எடுப்பதில் வல்லவர். அவரது படங்கள் மட்டுமின்றி பாடல்களும் புதுமை நிறைந்ததாக இருக்கும். வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இடம்பெறும், சிப்பி இருக்குது முத்து இருக்குது பாடல் ஒன்றே போதும், அவரது திறமையை அறிய.

தூர்தர்ஷனில் காவிய கவிஞர் வாலி தனது மலரும் நினைவுகளை பதிவு செய்த நிகழ்ச்சியில் இயக்குனர் சிகரமும் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியை நடத்தியவர் நெல்லை ஜெயந்தா. அந்த அருமையான நிகழ்ச்சி நூலாகவும் வெளிவந்துள்ளது.

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் விழிகளில் கண்டேனே என்ற வாலியின் அற்புதமான பாடல் குறித்தும், அந்தப் பாடல் தனக்கு கற்றுத் தந்த பாடம் குறித்தும் இயக்குனர் சிகரம் அதில் பகிர்ந்து கொண்டுள்ளார்.


"மதுரையில் பறந்த மீன்கொடியை உன் விழிகளில் கண்டேனே ரொம்ப அற்புதமான பாட்டு. எல்லா ஊர்ப் பெயர்களும் அதில் வரும். ஆனால் அதில ஒரு டிராஜடி ஆகிப்போச்சு. நான் ரொம்ப ரசித்த பாட்டு, ஜெமினி பிரமாதமாக நடிச்சிருப்பார். அந்தப் பாடல் இடைவேளையில் வரும். ஏற்கனவே ஒன்றரை மணிநேரம் தம்மடிக்காம தம்பிடிச்சு உட்கார்ந்திருக்காங்க. அப்ப இந்தப் பாட்டு வந்தவுடன் பாதிபேர் எழுந்து வெளியே போயிட்டாங்க. அப்போ எல்லாம் உள்ளுக்குள்ள சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு சட்டம் இருந்தது. பல தியேட்டர்களிலும் இதே நிலை.

"எப்பவுமே இடைவேளை வரும்போது டைரக்டர் ஜாக்கிரதையாக இருக்கணும். அங்கபோயி இந்த மாதிரி ஸ்லோ உள்ள காட்சியை வைக்காமல் இடைவேளைக்குப் பிறகு கொடுத்தால் ரசிப்பாங்க. இடைவேளை நேரத்தில் இந்தப் பாட்டை கொடுத்ததால் எழுந்து போயிட்டாங்க. கொடுத்தது என் தப்பு. ஃபோன் பண்ணி பார்த்தால் எல்லா ஊர்களிலும் இதேநிலை என்றார்கள்.  கஷ்டமா போச்சு. மதுரை ஆடியன்ஸ்கூட எழுந்து போனார்கள்னு சொன்னாங்க. சரின்னு சொல்லிட்டு அந்தப் பாட்டை எல்லா ஊர்களிலும் நீக்க சொல்லிட்டேன்.

"இதிலிருந்து என்ன கத்துகிட்டேன்னா... ஒரு படத்துல பாட்டு வைக்கிற இடத்தக்கூட கவனமா பண்ணணும்னு. வெறும் சீனுன்னு நான் எழுதுறேன். நான் டைரக்ட் பண்ணிட்டு போயிடறேன். பாட்டு சீன் அப்படியில்ல. பாட்டுன்னா ஒரு கவிஞர் வர்றாரு. ஒரு மியூஸிக் டைரக்டர் வர்றாரு. நான் உட்கார்ந்துக்கிறேன். அப்புறம் நடன இயக்குனர். இவ்வளவு பேரும் சேர்ந்து பண்ற உழைப்பு வீணாகிப் போயிடக் கூடாதில்லையா? அதனால ஒரு பாட்ட எந்த இடத்தில் போடணும், போடக் கூடாதுன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்."

 - இயக்குனர் சிகரத்தின் இந்த வார்த்தைகளிலிருந்து அவர் ஒரு திரைப்படத்தை, திரைப்பட ரசிகர்களின் மனநிலையை எப்படி நுட்பமாக அணுகி புரிந்து வைத்துள்ளார் என்பதை அறியலாம்.

அவர் பாடலாசிரியர்களிடம் பாடல்கள் கேட்டுப் பெறுவதும் தனித்துவமானது. அது எப்படி? அடுத்தப பகுதியில் வாலியின் வார்த்தைகளில் அதனை படிக்கலாம்.

தனியார் பஸ்களில் கட்டணக் கொள்ளை ? ஹோட்டல்களில் ரூம் வாடகை இருமடங்கு உயர்வு ! என்னவாகுமோ சென்னை...

சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், ஹோட்டல்களில் ரூம் வாடகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாது பொதுமக்கள் திகைத்து வருகின்றனர்.

சென்னையில் விடாது விரட்டி விரட்டி பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். பலர் முகாம்களில் தங்கியுள்ளனர். மழையும் விடாது கொட்டித் தீர்த்து வருவதால் பாதிக்கப்பட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

இதற்காக பெருங்களத்தூரில் நேற்று இரவு முதல் பயணிகள் காத்திருக்கின்றனர். ஆனால் போதுமான பேருந்து வசதி இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிடைக்கும் ஓரிரு பஸ்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

இதனால் அந்த பகுதியாக வரும் லாரிகளில் பெண்கள் உட்பட பலர் ஏறி செல்கின்றனர். இந்த நெருக்கடியை பயன்படுத்தி தனியார் பஸ்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு செல்ல ரூ.1500ம், வந்தவாசி செல்ல ரூ.1000 வசூலிக்கப்படுவதாகவும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். விழுப்புரம், வந்தவாசிக்கே இந்த கட்டணம் என்றால் மற்ற ஊர்களுக்கு சொல்லவா வேண்டும் என பலர் மீண்டும் வீடு திரும்பினர்.

இந்த நிலையில் சென்னையில் ஈக்காட்டுதாங்கல், அரும்பாக்கம், சூளைமேடு, வேளச்சேரி, மடிப்பாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள் தங்களது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று தங்கியுள்ளனர். மேலும், பலர் அரசு, தனியார் சார்பில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களுக்குச் சென்றனர்.

பெரும்பாலான இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் தனியார் விடுதிகள் மற்றும் நட்சத்திர விடுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். ஏராளமானோர் ஒரே நேரத்தில் குவிந்து வருவதால், இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி தனியார் விடுதிகள் வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை விட இருமடங்கு கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

சென்னையில் இன்னும் 3 நாட்களுக்கு அதாவது 72 மணிநேரம் மழை தொடர்ந்து நீடிக்கும்; அதே நேரத்தில் அடுத்த 48 மணிநேரம் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்னவாகுமோ சென்னை...

மழை எதிரொலி: திரைப்படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு

சென்னையில் கடந்த சில நாட்களாக அடை மழை பொழிந்து வருகிறது. இந்த மழையால் சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால், வரும் 4ம் தேதி வெளியாக இருந்த ‘ஈட்டி’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மழை நின்று இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு இப்படங்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

பல் துலக்கும் போது நாம் செய்யும் 5 தவறுகள் - 5 mistakes we make while brushing

 பல் துலக்கும் போது நாம் செய்யும் தவறுகள் என்னவென்று பார்ப்போம்.

* நாம் கண்ணாடியை பார்த்து பல் துலக்குவது தான் சிறந்தது, ஆனால் பலரும் அதனை செய்வதில்லை.

* பல் துலக்குவதற்கு சரியான நேரம் எடுத்து கொள்ள வேண்டும் , ஆனால் நாம் வேகவேகமாக ஒரு நிமிடத்தில் முடித்து விடுகிறோம்.

* நாம் மிகவும் அழுத்தி பல் தேய்க்கிறோம் , இதனால் நமது பற்கள் பாதிப்படைகின்றன.

* நாம் சரியான பிரஷையும், டூத் பேஸ்டையும் உபயோகப்படுத்த தவறி விடுகிறோம்.

* பல் துலக்கிய பிறகு அதிகளவு வாய் கொப்பளக்க வேண்டும், ஆனால் நாம் அதனை செய்ய தவறி விடுகிறோம்.