Wednesday, December 30, 2015

ஹலால்(Halal) என்றால் என்ன ??

பொது மக்கள் சிந்தனையில் மிக நீண்ட நாட்களாக ஓடி கொண்டிருக்கும் கேள்வி இது ? பெரும்பாலான அசைவ உணவகங்களில் குறிப்பிட்டிருக்கும் 100 % (ஹலால்) - நம்மவர்கள் பெரும்பாலனவர்கள் நினைப்பது சுத்தம் என்றுதான் . அதன் உண்மை விளக்கம் தான் என்ன வாருங்கள் அலசுவோம் !!! சுருக்கமாக ஹலால் என்பது கால்நடைகளை அறுக்கும் போது அதன் கழுத்து பகுதி முழுவதும் அறுபடாமல் மூளைக்கு செல்லும் நரம்பு வரை அறுபதால் ,அதன் வலியை உணர்த்தும் நரம்புகள் துண்டிக்க பட்டு வலியை உணராமல் இருக்க செய்வதே ஹலால் ஆகும் . இப்படி அறுக்கும் போது அதன் முழு ரத்தமும் வெளிப்பட்டு ரத்தத்தின் மூலம் நோய் பரவுதல் தடுக்கபடுகிறது. இதற்கு மற்றுமொரு காரணம் இறைவன் அனுமதி படி அறுபது என்பது பொருள் ஹலால் முறையில்...

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்..?

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம். மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான். அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம். ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை....

வசூலில் விஜய், அஜித்தை பின்னுக்கு தள்ளிய ஜெயம் ரவி- உண்மை தகவல்

தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுவது விஜய், அஜித் தான். ஆனால், இந்த வருடம் இவர்கள் படங்களின் வசூலை ஜெயம் ரவி முந்தியுள்ளார்.ஆம், சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றில் இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் விவரங்கள் வெளியிட்டுள்ளனர்.இதில் வேதாளம், என்னை அறிந்தால், புலி படத்தின் வசூலை முறியடித்து முன்னணியில் உள்ளது ஜெயம் ரவியின் தனி ஒருவன். இதோ அந்த லிஸ்ட்    1.பாகுபலி    2தனி ஒருவன்    3.ஐ    4.வேதாளம்    5.காஞ்சனா-2    6.என்னை அறிந்தால்    7.நானும் ரவுடி தான்    8.அனேகன்    9.புலி   ...

அப்பா டீ விற்ற கோர்ட்டில் மகள் நீதிபதி

தனது அப்பா டீ விற்ற நீதிமன்றத்தில் மகள் நீதிபதியாக பதவியேற்ற நெகிழ்ச்சிகரமான சம்பவம் பஞ்சாப்பில் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் டீ விற்று வருபவர் சுரிந்தர் குமார். இவரது மகள் சுருதி. நகோதர் எனும் சிறு நகரத்தில் வசித்து வரும் சுருதி, நீதித்துறை சார்ந்த, பஞ்சாப் மாநில சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, நீதிபதி பதவிக்கு தேர்வானார். முதல் முயற்சியிலேயே நீதிபதி கனவுக்கு சுருதிக்கு நிஜமானது. விரைவில் அவர் தனது அப்பா டீ விற்ற நீதிமன்றத்திலேயே நீதிபதியாக பதவியேற்க இருக்கிறார். மாநிலப் பள்ளியில் கல்வி கற்ற பின், சட்டப் படிப்பை தொடங்கிய சுருதி, குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில்...

ரஜினிக்கு 2016 வருடம் எப்படி இருக்கும் - ஒரு நிதான கணிப்பு!

ரஜினிகாந்த்- இந்த வருஷம் முழுக்க கபாலி திசையில் கஷ்ட புத்தி ஓடுவதால், ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். படங்களில் அணைக்கட்டு உடைவது போலவோ, நீர் வெள்ளமாக பெருக்கெடுப்பது போலவோ காட்சிகள் வந்தால் தவிர்ப்பது நலம். அது கையிருப்பை குறைப்பதுடன், கெட்டப் பெயரையும் ஏற்படுத்தும். வருஷ இறுதியில் இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களால் நல்லது நடக்கும். எனவே எந்திரன்களை வாங்கிப் போடுவது விசேஷமான பலன்களை தரும். தலைக்கு மேல் சுற்றும் அரசியல் மேகங்களை கூலிங் கிளாஸ் அணிந்து கூட பார்க்கக் கூடாது. ஏனென்றால் உங்கள் ராசிக்கு கருப்பும் ஆகாது. சிவப்பும் ஆகாது. நடுவில் கொஞ்சம் வெள்ளை இருக்கலாமா என்பதை குடும்ப ஜோதிடரிடம் கலந்தாலோசிக்கவும். ராசி நிறம் நரைத்த வெள்ளை....

"ப்ரூஸ் லீ" - ன் மறுபக்கம்...?

தற்காப்பு கலையின் முடிசூடா மன்னன் என்று உலகம் முழுவதும் போற்றப்படும் "ப்ரூஸ் லீ" ஒரு சிறந்த நடன கலைஞரும் கூட என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். அவருடைய 14 வயதில் குங்ஃபூ படித்து கொண்டிருத்த கால கட்டத்தில், Cha Cha Cha நடனத்தின் மீது அவருக்கு பெரும் ஈடுபாடு வந்து, அதற்க்கேன நேரம் ஒதுக்கி மிக விருப்பத்துடன் கற்று கொண்டார் ப்ரூஸ் லீ. ஹாங்-காங்கில் 1958-ம் ஆண்டு நடைபெற்ற மிக பிரமாண்ட Cha Cha Cha நடன போட்டியிலும் பங்கெடுத்து சாம்பியன்ஷிப் பட்டதையும் வென்றார் ப்ரூஸ் லீ. Martial Arts கற்றுகொள்வதர்க்கு காண்பித்த அதே ஆர்வத்தையும், உழைப்பையும் Cha Cha Cha நடனம் கற்று கொள்வதிலும் காட்டியிருக்கிறார் ப்ரூஸ்லி.  தன்னுடைய நோட்டில் Cha Cha Cha-வின்...

மாதவனுடன் இணையும் சூர்யா, இயக்குனர் பாலா!

நீண்ட நாட்களுக்கு பிறகு மாதவன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘இறுதிச்சுற்று’. தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தின் ட்ரைலர்கள் அண்மையில் வெளியானது. கமல்ஹாசன் வாழ்த்துக்களுடன் இதன் ட்ரைலரை சிவகார்த்திகேயன் தன் ட்விட்டரில் வெளியிட்டார். மாதவன், ரித்திகாசிங், நாசர், காளி வெங்கட், ராதாரவி நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ராஜ்குமார் ஹிரானியுடன் இணைந்து சசிகாந்த் இப்படத்தை தயாரித்துள்ளார். இயக்கம் சுதா கொங்காரா. இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை வருகிற ஜனவரி 4ஆம் தேதி சென்னையில் வெளியிடவுள்ளனர். பாடல்களை இயக்குனர் பாலா வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக் கொள்கிறார். சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் வருண்மணியன்...

'எல்நின்யோ காலநிலையின் தாக்கத்தால் 2016இல் பசியும் நோயும் ஏற்படும்'

2016 ம் ஆண்டில் எல் நினோ சுழற்சியால், உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பசியாலும், கடுமையான நோயாலும் பாதிக்கப்படுவார்கள் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வரும் ஆண்டில் உலகம் முழுவதும் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. புவியின் சுழற்சி காரணமாக எல் நினோ (கடும் வெப்பம்), லா நினா (கன மழை) மாறி மாறி வருகிறது. 2015 ம் ஆண்டில் உலகின் சில பகுதிகள் வறட்சியாலும், சில பகுதிகளில் மழை- வெள்ளத்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அடுத்த ஆண்டில் எல் நினோ காரணமாக அடுத்த 6 மாதங்கள் கரீபியன், மத்திய மற்றும் தெற்கு அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட உள்ளது. 2015ம் ஆண்டு உலகின் மிக மோசமான வெப்பம் நிறைந்த ஆண்டாக வானிலை ஆய்வாளர்கள் கூறு...

சீனு ராமசாமியே சொல்லிட்டாரு… அப்புறம் என்னங்க?

‘சௌந்தர்ராஜா பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை’ என்றெல்லாம் இந்த செய்தியை ஆரம்பிக்க முடியாது. அறிமுகம் தேவைப்படுகிற நடிகர்தான். ஆனால் அது இன்னும் ஆறேழு மாதங்களுக்கு பின் மாறிவிடும்! குட்டிப்புலி படத்தில் அறிமுகமானவர். சில பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தவர் என்றாலும், கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்து வருகிறார் சௌந்தர்ராஜா. மேலும் இரண்டு படங்களில் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் இயக்குனர் சீனுராமசாமி தனது முகப்புத்தகத்தில் சௌந்தர்ராஜா பற்றி நாலே நாலு வரி எழுதியிருக்கிறார். வேறு பல ஜன்னல்களை திறந்துவிடுகிற அளவுக்கு படு ஸ்டிராங்காக இருக்கிறது அந்த நாலு வரி. “கதாநாயகனாக ஓரிரு...

சிம்பு மீதான பீப் வழக்குகள் ஒவ்வொன்றாக வாபஸ்-பின்னணி காரணம்தான இது..?

அனிருத் இசையில் நடிகர் சிம்பு பாடிய ‘‘பீப்’’ பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களை இழிவாக சித்தரித்து பாடிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் 3 வழக்குகள் தொடரப்பட்டன. பா.ம.க. சார்பில் ஒரு வழக்கும், விடுதலை சிறுத்தை சார்பில் 2 வழக்குகளும் தொடரப்பட்டன. இதில் பா.ம.க. தொடர்ந்த வழக்கு ஏற்கனவே வாபஸ் பெறப்பட்டது. விடுதலை சிறுத்தை தென் சென்னை மாவட்ட வக்கீல் அணி செயலாளர் வக்கீல் காசி சைதாப்பேட்டை கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 9–வது பெருநகர் நீதிமன்ற நீதிபதி திலிப் அலெக்ஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் காசி ஆஜராகி, தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். கட்சி தலைமை உத்தரவிட்டதன்...

விக்கிரமாதித்தனாய் விஜயகாந்தை தொடரும் பா.ஜனதா!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை, பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது தேர்தல் கூட்டணி தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதேபோல், கூட்டணி பேச்சுவார்த்தையும், வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் நடந்து வருகின்றன.இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., தற்போது அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. அதேபோல், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வும் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் மட்டுமே பா.ஜ.க.வுடன்...

Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி..?

நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Codeஇல் புதிய Window மூலம் Open ஆகும்.அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும்.அந்த Search Bar இல் {"list" இதை Type செய்து Enter பண்ணவும்.இது மாதிரி {"list""1000011345400-2","10000043254566-3" இருக்கும் list கிடைக்கும்.உங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவருக்கும் இதுமாதிரி Codeஅதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2" இது எத்தனை முறை வந்துள்ளார்...

ரஜினி, சிவாஜி ரூட்டில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார் - விஜய் சேதுபதி.. சூப்பர் ஜி. சூப்பர் ஜி

‘நானும் ரௌடிதான்’ வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி பழைய பார்முலாவுக்கு திரும்பியுள்ளார். அடுத்த வருடம் மட்டும் இவரது நடிப்பில் அரை டஜன் படங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ஏற்கெனவே ஒப்புக் கொண்ட ஒரு புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார். ‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டன் இறார். அன்புசெழியன் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்க இருக்கிறது. விஜய் சேதுபதி தற்போது ரஜினி படத்தலைப்பான ‘தர்மதுரை’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இவர் நடிக்கவுள்ள ‘ஆண்டவன் கட்டளை’ படம், சிவாஜி கணேசன், தேவிகா. சந்திரபாபு நடித்து 1964ஆம் ஆண்டு வெளியான படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி, சிவாஜி ரூட்டில் பயணிக்க...

இதுதான் உண்மையான.. நட்சத்திர பலன்கள் 2016

ரஜினிகாந்த்-இந்த வருஷம் முழுக்க கபாலி திசையில் கஷ்ட புத்தி ஓடுவதால், ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். படங்களில் அணைக்கட்டு உடைவது போலவோ, நீர் வெள்ளமாக பெருக்கெடுப்பது போலவோ காட்சிகள் வந்தால் தவிர்ப்பது நலம். அது கையிருப்பை குறைப்பதுடன், கெட்டப் பெயரையும் ஏற்படுத்தும். வருஷ இறுதியில் இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களால் நல்லது நடக்கும். எனவே எந்திரன்களை வாங்கிப் போடுவது விசேஷமான பலன்களை தரும். தலைக்கு மேல் சுற்றும் அரசியல் மேகங்களை கூலிங் கிளாஸ் அணிந்து கூட பார்க்கக் கூடாது. ஏனென்றால் உங்கள் ராசிக்கு கருப்பும் ஆகாது. சிவப்பும் ஆகாது. நடுவில் கொஞ்சம் வெள்ளை இருக்கலாமா என்பதை குடும்ப ஜோதிடரிடம் கலந்தாலோசிக்கவும். ராசி நிறம் நரைத்த வெள்ளை. திசை இமயமலை!கமல்-வாக்கு ஸ்தானத்தில் சனி சப்பணமிட்டு அமர்ந்திருப்பதால் பேச வேண்டிய எதையும் கடிதம் வாயிலாகவோ, மெயிலாகவோ, நேரிடையாகவோ, அல்லது பக்கத்துவீட்டுக்காரர்...

சேரன் இயக்கத்தில் நயன்தாராவின் ‘ஆட்டோகிராப் 2’…!

ஒவ்வொரு ரசிகனையும் அவர்களின் முன்னாள் காதல் வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்த படம் ஆட்டோகிராப். இதில் ஒரு இளைஞனின் வாழ்வில் வந்த சென்ற காதல்களை பற்றி கவிதையாக சொல்லி இருந்தார் சேரன். இவரே தயாரித்து இயக்கி நடித்திருந்த இப்படத்தில் நான்கு காதாநாயகிகள் நடித்திருந்தார்கள். அதாவது சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். தமிழில் வெளியாகி படம் சூப்பர் ஹிட்டடிக்கவே தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே…’ பாடலுக்காக கவிஞர் பா. விஜய் மற்றும் பின்னணி பாடகி சித்ரா ஆகியோர் தேசிய விருது பெற்றனர். இந்நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை இயக்க சேரன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது....

ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல... சத்தியமா இது ஒரு படத்தோட பேர்தாங்க!

பிரபல நடிகர்கள் தங்களது படத்திற்கு பெயர் வைத்ததும், அது ஏற்கனவே நாங்கள் பதிவு செய்த தலைப்பு என ஆளாளுக்கு போர்க்கொடி தூக்குவது வழக்கமாகி விட்டது. அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் தலைப்பு பஞ்சம் தலை விரித்தாடுகிறது எனலாம். இதனாலேயே படத்திற்கு சகட்டு மேனிக்கு விதவிதமாய் பேர் வைப்பதை புதிய டிரெண்டாக்கி இருக்கிறார்கள் சில இயக்குநர்கள். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், தீயா வேலை செய்யணும் குமாரு, வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான், யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ள வை என இதற்கு உதாரணங்கள் பல.ந்தவகையில் தற்போது வித்தியாசமான தலைப்பில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. தலைப்பு ‘ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல' என்பதாகும். தலைப்பைக் கேட்டாலே சும்மா சிரிப்பு...

தாரை தப்பட்டை-அந்தக்காட்சியை நீக்க மாட்டேன்-பாலா- ஏ சான்றிதழே கொடு..!

சசிகுமார் - வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் தாரை தப்பட்டை படத்தை பாலா இயக்கி வருகிறார். படத்தின் நாயகனான சசிகுமாரே இந்தப்படத்தைத் தயாரித்துள்ளார். தஞ்சாவூர் பின்னணியில் படமாக்கப்பட்ட தாரை தப்பட்டை படத்தில் சசிகுமார் நாதஸ்வர வித்வானாகவும், வரலட்சுமி கரகாட்டம் ஆடுபவராகவும் நடிக்கின்றனர்.தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் படங்களின் சாயலில் இப்படத்தின் கதை அம்சம் உள்ளதாக சொல்லப்படுகிறது. பொங்கல் அன்று திரைக்கு வரும் தாரை தப்பட்டை படம் நேற்றைய முன்தினம் தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் தாரை தப்பட்டை படத்தில் வன்முறை அதிகமாக இருப்பதால் ஏ சான்றிதழ் மட்டுமே வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.குறிப்பிட்ட சிலகாட்சிகளை...

2015ல் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கிய+சொதப்பிய டாப் 10 படங்கள்- ஒரு பார்வை

புத்தாண்டு என்றாலே ஒரு புத்துணர்ச்சி தான். இந்த வருடத்தில் நாம் செய்த தவறுகளை இனி செய்யக்கூடாது என்று சபதத்துடன் பலரும் புத்தாண்டை ஆரம்பிப்பார்கள். அந்த சபதம் எல்லாம் அடுத்து வரும் தமிழ் புத்தாண்டு வரை இருக்குமா என்றாலும் கேள்விக்குறி தான். எது எப்படியோ இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக தொடங்க சினி உலகம் தன் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், கடந்த ஆண்டு 200 படங்களுக்கு மேல் வந்துள்ளது, இதில் தமிழ் சினிமாவை கலக்கிய+சொதப்பிய படங்களின் சிறப்பு தொகுப்பு தான் இந்த பகுதி.(இவை அனைத்தும் படத்தின் பட்ஜெட், தயாரிப்பாளர் லாபம், விநியோகஸ்தர்கள் லாபம் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது).1)பாகுபலி, காக்கா முட்டைடைனோசர் முட்டை இருக்கும் இடத்தில் காக்கா...

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன. மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால், பலரும் வாயில் கை வைத்து 'அப்படியா!!!' என்று ஆச்சரியமாக கேட்பார்கள். சொன்னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகிலேயே வெடிகுண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான்பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என்று சொன்னால் ஆச்சரியம் தானே.இது போன்று நிறைய விசித்திரமான சில உண்மைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் வேறு ஏதாவது இயற்கையில் உள்ள சில விசித்திரமான உண்மைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, அந்த விசித்திரமான உண்மைகளைப் பார்ப்போமா!!!லிப்ஸ்டிக்பெண்களுக்கு லிப்ஸ்டிக் என்றால்...

வங்கியில் வாங்கிய கடனை, முன்கூட்டியே கட்டினால்..! லாபமா..? நஷ்ட‍மா..?

அவசர தேவைக்காக கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, எப் போது பணம் கிடைக்கும் என்று தான் காத்திருப்போம். அதே கட னை திரும்பக்கட்டும்போது, கடன் எப்போது முடியும் என்று காத்திரு ப்பவர்கள் பலர். மாதம் மாதம் இந் த இ.எம்.ஐ. யை கட்டி முடிப்பத ற்குள் உயிர் போகிறது என்று புல ம்புகிற வர்கள்தான் அதிகம்.இப்படி புலம்புகிறவர்களில் சிலர், கையில் மொத்தமாக பண ம் கிடைக்கும்போது கடனை முன்கூட்டியே கட்டி முடித்து விடுகிறார்கள். இதனால் சிபில் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்று, உங்களுக்கான மதிப்பெண்குறையும் எனசிலர் சொல்லப்போக, முன்கூட்டியே கடன் பணத்தைத் திரும்பக் கட்டியவர்களும், இனி கட்டலாம் என்கிற நினைப் பில் இருந்தவர்களும் கல ங்கிப் போயிருக்கிறார்கள். வாங்கிய கடனை முன்கூ ட்டியே கட்டினால் நஷ்டம் வருமா, வராதா? என இந் தியன் ஓவர்சீஸ் வங்கியி ன் முன்னாள் பொதுமேலா ளர் (ஓய்வு) டாக்டர் எஸ். இளங்கோவனிடம் கேட்டோம்.”வங்கியில் தனிநபர்...

பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு!

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.. ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. உலகநாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அதி முக்கிய காரணியான இந்த கச்சா எண்ணெய்யை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார் தெரியுமா?. தற்போது ஈராக்கியர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் பண்டைய பாபிலோனியர்கள் தான் கச்சா எண்ணையை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் ஆவர். அதைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது என்று பார்ப்போம் வாருங்கள். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை பேரிடர் காரணமாக மண்ணில் புதையுண்டு இறந்த மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் உடல்கள் அழுகி...

புரோகிராம்களை முறையாக மூடிட புதிய மென்பொருள்!

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். பிரவுசர்கள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால், Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம். சில வேளைகளில், இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல், பிரச்னைகளைத் தரும். இறுதியாக, ரீபூட் பட்டனை அழுத்தி விண்டோஸ் சிஸ்டத்தினை மறுபடியும் இயக்குவோம். சில வேளைகளில் ஏதேனும் ஒரு புதிய புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில், ""அனைத்து புரோகிராம்களையும் மூடிவிடவும்'' என்று ஒரு செய்தி கிடைக்கும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களையும், ஒவ்வொன்றாக முறையாக மூட வேண்டியதிருக்கும். இது நேரம் எடுக்கும் செயலாகும். அவசரத்தில், சில புரோகிராம்களை மூட முடியாமல்...

பீப் பாடல் சர்ச்சை : சிம்பு, அனிருத் ஜனவரி 4க்குள் கைது

பீப் பாடல் சர்ச்சையில் நடிகர் சிம்பு, பாடகர் அனிருத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி போலீசாருக்கு அம்மாவட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பீப் பாடல் மூலம் சர்ச்சையில் சிக்கி உள்ளார் நடிகர் சிம்பு. இவருடன் இசையமைப்பாளர் அனிருத் மீதும் நடவடிக்கை கோரி பல்வேறு தரப்பிலிருந்து போராட்டங்கள் வெடித்தன.சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் கோர்ட் அறிவுறுத்தல்படி, சர்ச்சைக்குரிய அந்தப் பாடலை வெளியிட்ட இணைய தளத்தை அணுகி அந்தப் பாடலை யூடியூப்பிலிருந்து நீக்கும்படி கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்தனர். ஆனால் யூடியூப் நிர்வாகம் அப்படிச் செய்ய வாய்ப்பில்லை என்று மறுத்து விட்டது.இந்நிலையில், பீப் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியதைத்...

‘கேம்பஸ் இண்டர்வியூ’ – அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

கேம்பஸ் இண்டர்வியூ’ – இன்றைய நிலையில் மாணவர்கள் ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்கு இதுதான் மந்திரச்சொல். மாணவர்களுக்கு மட்டுமல்ல… கல்லூரிகளுக்கும் இதுதான் தூண்டில் முள். ‘எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு கேம்பஸில் தேர்வானவர்கள் 500 பேர்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்திதான் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை சேர்க்கிறார்கள். படிப்பு முடியும் முன்னரே அப்பாய்ண்மென்ட் ஆர்டரை கையில் வாங்கும் இந்த கேம்பஸ் மோகத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் மயங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் மயக்கத்தில் மருந்து தெளித்திருக்கிறது அண்மையில் வெளியான அந்த செய்தி. ‘ஹெச்.சி.எல். நிறுவனத்தில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வாகி ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும் 59 மாணவர்கள் சென்னையில் உண்ணாவிரதம்’ என்ற செய்தி மாணவர்கள், பெற்றோர்கள், கல்லூரிகள் என அனைத்துத் தரப்பினரிடையேயும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது. சென்னையில் மட்டுமல்ல… பெங்களூரு,...

இந்தப் பெயர்கள் எப்படி வந்தன.?

சஹாரா: “சஹாரா’ என்னும் சொல்லுக்கு அரேபிய மொழியில் “பாலைவனம்’ என்று பொருள். “ஆரஞ்ச்’ வந்த வழி: வடமொழியில் “நருகுங்கோ’ (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் “நாருங்கோ’ ஆகி உருதுவில் நாரஞ்சாகி, இத்தாலியில் “ஆரஞ்சியா’வாகி ஆங்கிலத்தில் “ஆரஞ்ச்’ ஆகிவிட்டது இந்த ORANGE. தாய் + தந்தை: தாய், தந்தை என்ற பெயர்களுக்குக் காரணம் என்ன தெரியுமா? குழந்தையைத் தாவி எடுத்துத் தழுவுதலால் “தாய்’ என்று பெயர் வந்தது. அதேபோல குழந்தையைத் தந்த தலைவன் தந்தை. தந்த + ஐ இரண்டும் சேர்ந்தது “தந்தை’ ஆனது. உதகமண்டலம்: தோடர்கள் மலைப்பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்கள் குடிசைகள் இருக்கும் பகுதிகளுக்கு “மந்து’ என்று பெயர். உதகையில் இவர்கள் குடிசைகள் இருக்கின்றன. இதற்கு “உத மந்து’ என்று பெயர். இதனால்தான் இந்தப் பகுதிக்கு “உதகமண்ட்’ என்றும் “உதக மண்டலம்’ என்றும் பெயர் வந்தது. காகிதம்: “காகிதம்’ என்பது தமிழ்ச் சொல் அல்ல....