Tuesday, December 29, 2015

முடி வளர சித்த மருத்துவம் !

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும். இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும். முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி...

ரஜினியின் கபாலி படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் - ரசிகர்கள் உற்சாகம்

ரஜினியின் கபாலி படத்தின் போஸ்டர் வந்ததில் இருந்தே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தற்போது அவர்களை அதிக சந்தோஷத்தில் ஆழ்த்தும் வகையில் ஒரு புதிய தகவல் வந்துள்ளது. அதாவது இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் மற்றும் மார்ஷியல் நிபுணர் ஜெட் லீ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்வாக கூறப்படுகிறது. Donnie Yen (‘IP Man’ series), Winston Chao (‘Zhong Kui: Snow Girl and The Dark Crystal’), Simon Yam (‘Lara Croft Tomb Raider: The Cradle of Life’), Jiang Wen (‘Gone with the Bullets’) and Chow Yun Fat (‘Pirates of the Caribbean: At World’s End’) போன்ற பிரபலங்களிடமும் பேச்சுவார்த்தையில் உள்ளனராம் படக்குழு. ஆனால் கபாலி படக்குழுவின் முதல்...

அஜீத்தை ரூமுக்குள் வைத்து நான் அடிச்சேன் என்பது பத்திரிகைகளின் கற்பனை! பாலா பதில்!

‘நான் கடவுள்’ படத்தின் போது அஜீத்துடன் மனஸ்தாபம் இருந்தது உண்மை என்று இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் பாலா, தனியார் தொலைக் காட்சியில் நடிகை சங்கீதா நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர், சங்கீதாவின் கேள்விகளுக்கு தனக்கே உரிய பாணியில் பதில் சொன்னார். ‘நான் கடவுள்’ படம் ஆரம்பிக்கும்போது உங்களுக்கும் அஜீத்துக்கும் என்ன பிரச்சனை? நீங்க அஜீத்தை ரூமுக்குள் வைத்து அடித்ததாக சொல்கிறார்களே? “நான் அடிச்சேன், மிதிச்சேன்னு சொல்றதெல்லாம் பத்திரிகைகளின் கற்பனை! மேலே தெரிஞ்சுக்கணும்னா.. நீங்க அல்ட்டிமேட்டுக்கிட தான் கேட்டுக்கணும்’. ஆனால் எங்களுக்குள் மனஸ்தாபம் இருந்தது உண்மை. தொடர்ந்து அவரது கழுத்தில் கிடந்த மாலையை பற்றி...

மால்வேர் பாதித்த கம்ப்யூட்டரை கிளீன் செய்ய வேண்டுமா...?

இந்த டிஜிட்டல் உலகம் தரும் அனைத்து கேடு விளைவிக்கும் புரோகிராம்களிடம் இருந்தும், உங்கள் கம்ப்யூட்டரை மிகக் கஷ்டப்பட்டு, பாதுகாக்கிறீர்கள்.உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை அப்டேட் செய்கிறீர்கள். சந்தேகப் படும்படியான இணைய தளங்கள் பக்கமே செல்லாமல் இருக்கிறீர்கள். அதே போல, சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் லிங்க்களில் கிளிக் செய்வதில்லை.ஜாவா, ப்ளாஷ் மற்றும் அடோப் ரீடர் புரோகிராம்களை அவ்வப்போது அப்டேட் செய்து வைக்கிறீர்கள். அல்லது இவை இல்லாமலேயே, உங்கள் கம்ப்யூட்டரை இயக்கி, உங்கள் பணியை முடிக்கிறீர்கள்.இப்படி மிகக் கவனமாகக் கம்ப்யூட்டரில் செயல்பட்டாலும், மிகத் தந்திரமான ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் ஒன்று, ஏதோ ஓர் இடத்தில் உள்ள பிழையான இடம் மூலம், உங்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து, தன்னை அடையாளம் காட்டுகிறது.சில சில்மிஷ மாற்றங்களை உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்படுத்துகிறது. வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு கம்ப்யூட்டரை,...

இனிப்புகளுக்கு வாயை பிளக்கும் குழந்தைகளைக் கையாள சில எளிய வழிகள்!!!

உங்கள் குழந்தை சர்க்கரைக்கு மிகவும் அடிமையாகிவிட்டதா? சரி அதுப்போன்று ஆகாமல் இருக்க பெற்றோர் ஒரு உக்தியைப் பயன்படுத்த வேண்டும். குழந்தை உண்ணும் உணவுகள் விஷயத்தில் பெற்றோர் மிகவும் விழிப்புடன் இருந்தால், இது போன்று சர்க்கரைக்கு அடிமையாகாமல் தடுக்க முடியும். நீங்கள் அவர்கள் உண்ணும் உணவில் கவனமுடன் இல்லையென்றால், குழந்தைகள் சர்க்கரையின் இனிய ஈர்க்கும் சுவைக்கு அடிமையாகிவிட வாய்ப்புண்டு. எனவே இதுப்போன்ற இனிப்புகளுக்கு வாயை பிளக்கும் குழந்தைகளைக் கையாள எளிய வழிகள் இதோ உங்களுக்காக. சிறு சிறு அளவில் உண்பதற்குக் கொடுங்கள் இனிப்புகளை அறவே ஒதுக்குவது குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு நல்லது தான் என்றாலும், அது குழந்தைகளை வேறு எங்காவது அதனை பெற்று உண்ணும்...

ஹாலிவுட்டுக்கு செல்லும் தனுஷின் வில்லன் !

தனுஷ் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படம் தமிழகமெங்கும் சூப்பர் ஹிட். இப்படத்தில் வில்லனாக நடித்த அமிதாஷ் (Amitash Pradhan), அவரது அமுல் பேபி நடிப்பால் பலராலும் பேசபட்டார். இந்நிலையில் இவர் ஹார்ட்பீட்ஸ் (Heart Beats) என்ற ஹாலிவுட் படத்தில் கதாநாயகன் வேடமிடுகிறார். இப்படத்தின் இயக்குனர் டோனே அட்லெர் இதற்கு முன் நடனம் சார்ந்த படமான Save the dance மற்றும் Step Up படத்தை எடுத்தவர். அமிதாஷின் நடன வீடியோவை பார்த்து அப்படத்தின் நடிகர்களின் தேர்வு இயக்குனர் நளினி ரத்னம் இவரை தேர்வு செய்துள்ளார். மேலும் அமிதாஷ் பல முன்னணி ஹாலிவுட் நடன இயக்குனர்களிடம் பணியாற்றியதால் தான் இவ்வாய்ப்பு கிடைத்துள்ளதாம...

இனிமேல் தியேட்டரில் படுத்துக் கொண்டே படம் பார்க்கலாம்.. இங்கல்ல கோயமுத்தூரில்!

திரையரங்குகளில் படுத்துக் கொண்டே சாவகாசமாக படம் பார்க்கும் வகையில் மல்டிபிள் திரையரங்கு ஒன்று கோயமுத்தூரில் உருவாகி வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் கோயமுத்தூரில் பல்வேறு வசதிகளுடன் கூடிய புரோசான் மால் கட்டப்பட்டு வருகிறது. இந்த மாலில் 9 திரையரங்குகளை அமைக்க ஐநாக்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. மேலும் இந்த மாலில் அமையவிருக்கும் 9 திரையரங்குகளிலும் ரசிகர்கள் படுத்துக் கொண்டே படம் பார்க்கும் வகையில், மெத்தை போன்ற தலையணைகளுடன் கூடிய இருக்கைகளையும் ஐநாக்ஸ் அமைக்கிறது. ஆனால் தனித்தனியாக இல்லாமல் ஜோடியாக சேர்ந்து அமரும் வகையில் இந்த இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோயமுத்தூரில் உள்ள சத்தி ரோட்டில் இந்த மால் தற்போது கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே...

இளமை ததும்பும் 2.0 ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த், ‘எந்திரன்-2’ படத்தில் இளமையான தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். இந்த படம், கடந்த 2010-ல் வெளிவந்த ‘எந்திரன்’ படத்தின் தொடர்ச்சி என்பதால் இதிலும் அவர், ‘வசீகரன்’ என்ற இளம் விஞ்ஞானி வேடத்தில் வருகிறார். இதற்காக, ‘ஹாலிவுட்’ ஒப்பனை கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். கழுத்தை ஒட்டிய பனியன், கோட்-சூட், ‘பிரஞ்சு பியர்டு’ வடிவில் தாடி என ரஜினிகாந்த் இளமையாக மாறி இருக்கிறார். அவரது மிடுக்கான வேடத்தை பார்த்து பழைய இளம் ரஜினிகாந்த் திரும்ப வந்தமாதிரி ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள...

படுக்கும் முன் செய்யக்கூடாத விஷயங்கள்

சில பெண்கள் இரவில் படுக்கும் போது முடியை விரித்துப் போட்டு, அதன் மேல் தூங்குவார்கள். இப்படி முடியின் மீது நாம் தூங்கினால், உராய்வின் காரணமாக மயிர்கால்கள் வலிமையிழந்து, அதனால் பல்வேல் முடி சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். இரவில் படுக்கும் முன் ஆல்கஹால் அருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒருவேளை அப்படி ஆல்கஹால் அருந்தி படுத்தால், இரவில் தன்னைத் தானே பழுது பார்த்துக் கொள்ளும் சரும செல்களின் செயல்பாட்டில் இடையூறு ஏற்படும். எனவே அழகாகத் திகழ வேண்டுமெனில் இப்பழக்கத்தைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சிலர் தூங்கும் போது குப்புற படுப்பார்கள். அப்படி குப்புறப் படுத்தால், சருமம் பாதிக்கப்பட்டு, அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக மார்பகங்கள் வடிவிழந்து தொங்க ஆரம்பித்து, சுருக்கங்களைப் பெறும். எனவே நேராகவோ அல்லது இடது பக்கம் திரும்பியோ படுக்க பழகுங்கள். சிலருக்கு எப்போதும் ஏசியிலேயே...

அம்மா ஆட்சி- ராதிகா டுவிட்டர் பதிவு? – தர்மசங்கடத்தில் சரத்குமார்

சென்னை – சிம்பு விவகாரத்தில் நடிகர் சங்கத்தை விமர்சிக்கப் போய், ராதிகா வெளியிட்ட டுவிட்டர் பதிவு, ஆளும் கட்சிக்கு எதிராகத் திரும்பி உள்ளது. ராதிகா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் ஒரு முடிவு எடுக்க வேண்டும். இந்த பிரச்சனை நாளை செல்ஃபி எடுக்கும், குளியல் அறையில் பாட்டுப் பாடும் உங்களில் ஒருவருக்கும் வரலாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில் அவர், “நடிகர் கமல்ஹாசனை, நிதி அமைச்சர் விமர்சித்தபோதும் ஏன் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவர், “சிம்புவுக்காக விமான நிலையங்களில் கண்காணிப்பா? நாட்டில் பற்றி எரியும் பல விசயங்கள் உள்ளன. இதுதான் முக்கியமா? கற்பழித்தவர்...

2015-ல் தமிழ் சினிமா கடந்து வந்த சர்ச்சைகள் ஒரு பார்வை!

சென்னை – இந்திய அளவில் பாலிவுட்டுக்கு அடுத்ததாக சிறந்து விளங்கும் கோலிவுட் சினிமா, பாலிவுட் போலவே சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. 2015-ம் வருடத்திலும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து வந்திருக்கின்றனர். 1. பீப் போட்ட சிம்பு சிம்பு = சர்ச்சை என்று கூறும் அளவிற்கு, தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுடன் வளம் வந்த சிம்பு, இந்த வருடத்தின் இறுதியில் கிளப்பிய சர்ச்சை தான் இதுவரை அவர் சந்தித்த பிரச்சனைகளின் உச்சமாக இருக்க வேண்டும். பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பீப் பாடல் போட, ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு மகளிர் சங்கம் வழக்கு போட்டது. அவரைப் பிடிக்க, காவல்துறை 5 தனிப்படை அமைத்தும், மனிதர் இன்னும் சிக்கவே இல்லை. பூதாகரமான...

“தகப்பன் ஸ்தானத்தில் இருந்து சிம்புவிற்காக மன்னிப்பு கேட்கத் தயார்” – நாசர்

சென்னை – சிம்பு விவகாரத்தில், நடிகர் சங்கம் ஏன் தலையிடவில்லை என நடிகை ராதிகா கேள்வி எழுப்பி இருந்த நிலையில், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். இந்த விவகாரத்தில், சிம்பு மன்னிப்புக் கேட்டிருந்தால் இந்த பிரச்னை முடிவிற்கு வந்திருக்கும். ஆனால் சட்டப்பூர்வமாக, அதனை சந்திக்க விரும்புவதாக அவர் தெரிவித்ததால் தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாசர் அளித்துள்ள விளக்கத்தில், “இந்த பிரச்னையை பொறுத்த வரை, இதனை விரைந்து முடிக்க வேண்டும் என்றுதான் சங்கமும் விரும்புகிறது. தம்பி விஷாலும், கார்த்தியும் தொடர்ந்து சிம்புவிடம் பேசிக்கொண்டு இருந்தனர். இதிலிருந்து அவர் மீண்டு வரவேண்டும் என்று...

ரஜினியுடன் இணைய அர்னால்ட் கால்ஷீட் கிடைக்கல… ஜெட் லீயாவது கொடுப்பாரா..?

பல வருடங்களுக்கு பிறகு ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ‘கபாலி’ படப்பிடிப்புக்கு கொஞ்சம் இடைவெளி கொடுத்துவிட்டு ஷங்கர் இயக்கும் ‘2.ஓ’ படத்தில் நடித்து வருகிறார்.இதனைத் தொடர்ந்து விரைவில் மீண்டும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். இப்படத்தில் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடிக்கவிருந்த கேரக்டரில் தற்போது ஜான் விஜய் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் மற்றொரு வில்லனும் இருப்பதாக கூறப்படுகிறது.படத்தின் கதைப்படி ரஜினி மலேசியா மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்கு வில்லனால் சில பிரச்சினைகளை சந்திக்கிறாராம். அந்த வில்லன் கேரக்டரில் நடிக்க ஜெட் லீ, டோனி யென், சைமன் யாம், ஜியாங் வென் ஆகியோருடன் பேச்சுவார்த்தை...

உங்களுக்கேற்ற ராசியான செடி இங்க இருக்கு பாருங்க...

செடி, மரம், கொடி போன்றவை இயற்கை நமக்கு தந்த ஒரு வரப்பிரசாதம். இவை உணவு, சுத்தமான காற்று, தங்குவதற்கு இடம் மற்றும் பலவாறு பெரிதும் உதவியாக உள்ளது. இவை இல்லாமல் நம்மால் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழவே முடியாது. இத்தகையவற்றை வீட்டின் வெளியே மட்டும் வளர்க்காமல், வீட்டின் உள்ளே கூட வளர்க்கலாம். அதற்காக அனைத்து செடிகளும் வீட்டினுள் வளரும் என்று நினைத்தால் அது தவறு. ஏனெனில் ஒவ்வொரு செடியும், ஒவ்வொரு தன்மையைக் கொண்டவை.ஆகவே அவற்றில் ஒருசில செடிகளை மட்டுமே வீட்டின் உள்ளே வளர்க்கலாம். அதுமட்டுமின்றி, அவற்றினுள் வீட்டினுள் வளர்க்கும் சில செடிகள் வீட்டில் சந்தோஷத்தையும், அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் வாரி வழங்கும். மேலும் வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்றி, நல்ல சக்தியை வீட்டில் நிலைக்க வைத்து, வீட்டில் எப்போதும் நல்லதே நடைபெற வழிவகுக்கும்.இப்போது அப்படி வீட்டில் சந்தோஷத்தை வாரி வழங்கக்கூடிய சில...

விஜய்யின் புலி தோல்வியடைய இந்த சென்டிமென்ட் காரணமா?

விஜய் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை திருமலை படத்திலிருந்து தொடங்கினார். 2003 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படம் வெற்றி. அதைத் தொடர்ந்து 2004 இல் வெளியான கில்லி அவருடைய மதிப்பைப் பன்மடங்கு உயர்த்திவிட்டது. அதன்பின்னர் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று படங்களில் நடித்துவிடுகிறார். ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் அவர் படங்கள் வெளியாகும் போது பெரும்பாலும் இரண்டுபடங்களும் வெற்றி அல்லது இரண்டில் ஒன்று வெற்றி என்று இருந்திருக்கிறது. அதேசமயம் ஒரு வருடத்தில் ஒரேபடம் என்று வெளியான படங்கள் எல்லாம் தோல்வியைத் தழுவி அவருக்கு நெருக்கடி கொடுப்பதாகவே அமைந்திருக்கிறது. 2006 ஆம் ஆண்டு வெளியான ஆதி படம் தோல்வியடைந்தது. விஜய்யின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிவைத்த ரமணா...

பாகிஸ்தானுடன் 'குளோஸா' போனால் அரசியலில் 'குளோஸ்'தான்... மோடிக்கு 'வார்னிங்'

பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுகிற எந்த ஒரு இந்திய அரசியல் தலைவரும் அரசியலில் நீடித்ததாக சரித்திரமே இல்லை என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா, ஆப்கானிஸ்தான் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நாடு திரும்பும் வழியில் திடீரென பாகிஸ்தான் சென்றார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள்து. இதனிடையே பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிவசேனா பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்து தமது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டும் எந்த ஒரு தலைவரும் அரசியலில் நீடித்ததில்லை. வாஜ்பாய், அத்வானி ஆகியோர் பாகிஸ்தானிடம் நெருக்கம் காட்டினர். அவர்கள்...

ஹாலிவுட் பட ஹீரோவான தனுஷ் பட வில்லன்

தனுஷ் நடித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற வேலையில்லா பட்டதாரி படத்தில் அமுல் பேபி என்று தனுஷால் கிண்டலடிக்கப்பட்ட வில்லன் அமிதாஷ், தற்போது பிரபல இயக்குனர் இயக்கும் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த ஹாலிவுட் வாய்ப்பினால் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கும் அமிதாஷ் இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், "ஆமாம்.. நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். 'ஸ்டெப் அப்', 'சேவ் த லாஸ்ட் டான்ஸ்' போன்ற ஹாலிவுட் படங்களை இயக்கிய ட்வேன் அட்லரின் படத்தில் நான் நடிக்கவிருக்கிறேன். முழுக்க முழுக்க நடனத்தை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படம் இந்தியாவில் எடுக்கப்படவுள்ளது. இந்த படத்தின் கேஸ்டிங் டைரக்டரான நளினி ரத்னத்திற்கு நான் நடனமாடிய சில காட்சிகளை அனுப்பி...

திருட்டுத்தனமாக படம் லீக் , பாதிக்கப்பட்ட டைட்டானிக் நடிகர்

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பிய சம்பவங்கள் உண்டு. அதுபோல  சமீபத்தில் ஹாலிவுட்டில் வெளிவர இருந்த ரேவேனன்ட், தி ஹேட்ஃபுல் எயிட்  ஆகிய திரைப்படங்கள் படம் ரிலீஸாவதற்கு முன்பே இணையதளத்தில் லீக் ஆகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. டைட்டானிக் புகழ் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்திருக்கும்  படம் "தி ரேவேனன்ட்". அமெரிக்கக் காடுகளில் பயணங்களை மேற்கொள்ளும் ஹுக்ஹ் கிளாஸ் என்பவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் தயாராகியுள்ளது. சென்ற ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதைத்தட்டி சென்ற "பேர்ட்மேன்" படத்தை இயக்கிய அலெஜன்றொ கோன்சாலஸ் இப்படத்தை...

என்னை முழுநேர அப்பா நடிகராக்கி விட்டனர்! -பட்டிமன்றம் ராஜா

ரஜினி நடித்த சிவாஜி படத்தில் ஸ்ரேயாவின் அப்பாவாக சினிமாவில் என்ட்ரி ஆனவர் பட்டிமன்றம் ராஜா. அதையடுத்து, குரு என் ஆளு, மாப்பிள்ளை, கண்ணா லட்டு தின்ன ஆசையா, பட்டத்து யானை, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க என பல படங்களில் நடித்திருக்கிறார். அப்படி நடித்ததில் பெரும்பாலான படங்களில் அவர் அப்பா வேடங்களிலேயே நடித்திருக்கிறார்.இதுபற்றி பட்டிமன்றம் ராஜா கூறுகையில், சினிமாவில் நான் அறிமுகமானதே அப்பா வேடம் என்பதினாலோ என்னவோ எனக்கு தொடர்ந்து அப்பா வேடங்களாகவே கிடைக்கிறது. அப்பா நடிகர் என்கிற முத்திரையை அழுத்தமாக குத்தி விட்டார்கள். அப்படி தரும் வேடங்களில் கோட்சூட் போட்டு வரும் வசதியான அப்பாவாக காட்டுகிறார்களா என்றால்...

சிம்புவுக்காக மன்னிப்பு அறிக்கை தயாரானதா?

பீப் பாடல் விவகாரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சிம்புவைக் காப்பாற்ற நடிகர்சங்கம் முன்வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு மன்னிப்பு அறிக்கை கொடுத்துவிடுங்கள் மற்றதெல்லாம் நாங்கள் சரி செய்துவிடுகிறோம் என்று நடிகர்சங்கம் தரப்பில் சிம்புவிடம் கேட்கப்பட்டதாம். அவரும் அதற்குத் தயாராகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.இதனால் நடிகர்சங்கத்தைச் சேர்ந்த மூத்தநடிகர்கள், சிம்புவுக்காக ஒரு மன்னிப்பு அறிக்கையை ஒருநாள் முழுக்க அமர்ந்து தயார் செய்து சிம்புவுக்கு அனுப்பியிருக்கிறார்கள். வெளிமாநிலத்தில் தங்கியிருந்த சிம்பு அறிக்கை தயாராகும்வரை நடிகர்சங்கத்தினரோடு தொடர்பில் இருந்திருக்கிறார்.அறிக்கை அவர் பார்வைக்குப் போன பிறகு இவர்களுடைய தொடர்பிலிருந்து விலகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது....

தென்னிந்திய சினிமாவிற்கு கௌரவம் தேடித்தந்த ராகவா லாரன்ஸ்

இந்த வருடத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோராலும் ரசிக்கப்பட்ட படம் காஞ்சனா 2.இப்படம் ராகவா லாரன்சுக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. தற்போது 2011ல் வெளியான காஞ்சனா 1 படம் தமிழ் சினிமாவிற்கு கௌரவம் தேடித்தந்துள்ளது.அதாவது இப்படம் சீனா, கொரியன், தாய் போன்ற அந்நிய மொழிகளில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.இதுபோன்ற அந்நிய மொழிகளில் ரீமேக்காகும் முதல் தமிழ் படம் இதுவே ஆகும...

பத்தே நிமிடத்தில் மெட்டு! எட்டே நிமிடத்தில் பாட்டு! பாட்டைய கிளப்பும் நா.முத்துக்குமார்!

பத்தே நிமிஷத்தில் மெட்டு போட்டால் கூட அதற்கு, எட்டே நிமிடத்தில் பாட்டெழுதிக் கொடுத்து அசத்துகிற ஆற்றல் நா.முத்துக்குமாருக்கு உண்டு. பாடுனவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் என்கிற பழமொழிக்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர். சினிமா பாடல்கள் இலக்கியமாகுமா என்ற வெகுகால சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த கவிஞர்களில் மிக முக்கியமானவர் நா.முத்துக்குமாரும்தான்.வழக்கம் போல இந்த வருடமும் அவர்தான் டாப். கடந்த வருடத்தில் எழுதிய படங்கள், இந்த வருடத்தில் எழுதிக் கொண்டிருக்கும் படங்கள் என பாய்ச்சல் பலமாகவே இருக்கிறது.2016 ம் அவர் வசம் ஆக வாழ்த்துகிறது நியூடமில்சினிமா.காம்2015 ல் அவர் எழுதிய பாடல்களின் லிஸ்ட்1. பாபநாசம் (அனைத்துப் பாடல்கள் )2. காக்கிசட்டை3....

நீங்கள் மூளையின் வல பக்கமா? இடப் பக்கமா?ஒரு சின்ன டெஸ்ட்!!

உலகிலேயே மிக மிக ஆச்சரியம் – மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண் துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.இந்நிலையில் மூளையை பொறுத்த மட்டில் இடது, வலது என இரு பாதிகளாக உள்ளன. ஒரு நரம்பு குவியல் இரண்டையும் இணைக்கிறது. இந்த இணைப்பு “corpus callosum” எனப்படும். வால்நட் பருப்பு இணைந்துள்ளது போலவே காணப்படும். செரிபெரம் இரு பகுதிகள் என மூளையை கொண்டுள்ளது. இடது பாகம் உடலின் வலது புறத்தையும்,...

புதிய ஈமெயில்களை SMS -இல் பெறுவது எப்படி?

மின்னஞ்சல் பயன்படுத்தும் போது நமக்கு அடிக்கடி வரும் பிரச்சினை நமக்கு வரும் ஈமெயில்களை உடனடியாக நம்மால் அறிய முடியாதது. எப்போதும் ஆன்லைனில் இருக்க முடியாத காரணத்தால் இந்த பிரச்சினை நமக்கு வரும். இதே புதிய ஈமெயில் நமக்கு வந்துள்ளது என்பது SMS மூலம் அறிய முடிந்தால்? எப்படி என்று பார்ப்போம். 1. முதலில் way2sms.com என்ற தளத்துக்கு செல்லுங்கள். 2. ஏற்கனவே அக்கௌன்ட் இருப்பின் Sign-in செய்யுங்கள் இல்லை என்றால் புதிய அக்கௌன்ட் தொடங்கவும். 3. உள்ளே நுழைந்த உடன் "Mail Alert" என்பதை கிளிக் செய்யவும். 4. இப்போது  Forward your mails to என்பதற்கு நேரே உள்ள முகவரியை Copy செய்து கொள்ளவும். 5. இப்போது உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings >> Forwarding and POP/IMAP என்பதில் "Add a forwarding address" என்பதை கிளிக் செய்து முன்னர் Copy செய்த முகவரியை இதில் தரவும். 6. இப்போது உங்கள்...

300 ரூபாய் செலவில் – சாதா டீவி – டச் ஸ்க்ரீன் டிவியாக மாற்ற முடியும்!

மனுஷன் டச் ஸ்க்ரீன் மொபைலை பயன்படுத்த ஆரம்பித்த பழக்கத்தில் பார்க்கும் பொருட்களை எல்லாம் டச் முறையில் உபயோகிக்க ஆசை.அந்த வரிசையில் டேப்ளட் / ஐபேட் / இப்போது லேப்டாப்பும் டச் ஸ்க்ரீன் வந்துவிட்டது. அப்புறம் இப்போது தொலைக்காட்சியில் மூவிங் சென்சார் தான் வந்திருக்கிறது.அந்த வரிசையில் டச் ஸ்க்ரீன் வந்தால் நன்றாக இருக்கும் என எதிர்ப்பார்ப்பால் இந்த டெக்னாலஜி வர வைப்பதற்க்கு பதிலாய் வழக்காமான எல் சி டி / பிளாஸ்மா டிவியை 300 ரூபாய் செலவில் டச் ஸ்க்ரீனாய் மாற்ற முடியும் என வாஷிங்டன் பல்கலைகழக ஆராய்ச்சி நிருபித்திருக்கிறது. இதில் குப்தா என்னும் இந்தியர் தான் முக்கிய பங்கு. இது மின்காந்த அலையால் நடக்கும் ஒரு அதிசயம். சீக்கிரம் வீட்ல இந்த ரிமோட் சண்டை...

மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு!

மனிதர்களுக்கு பல சிக்கலை ஏற்படுத்துவது மலச்சிக்கல் நோயே. மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக மூலநோய் இருக்கும். வயிற்று தொந்தரவுகள் இருந்தால் மனதில் தெம்பு இருக்காது. பணிகள் செய்ய சுறுசுறுப்பு இருக்காது. ஏராளமான குறைகளை ஏற்படுத்தும் இந்த நோய்க்கு மிக சாதாரண மருந்து உள்ளது. முருங்கை கீரை பொரியலை சற்று அதிகமாக எடுத்து கொண்டாலே போதும். இரவு உணவு சாப்பிடும்போது, சோறு பாதி, முருங்கை கீரை பாதியாக பிசைந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலே இருக்காது. எவ்வித தொந்தரவும் இல்லாமல் இலகுவாக மலம் வெளியேறும்.வெளி மூலம்:முருங்கை இலையும், முத்து என்னும் சிற்றாமணக்கு இலையும் சம அளவில் பொடியாக அரிந்து விளக்கெண்ணெய் விட்டு லேசாக வதக்கி மூலத்தின் மேல் வைத்துக்கட்டினால் வெளி மூலம், மூளை மூலம், சதை மூலம் போன்ற அனைத்து மூலங்களும் சுருங்கி குணமாகும். மூலம், பௌத்திரம் (பகந்தரம்) நோய் குணமாக முருங்கை கீரை 2 பங்கு,...

பூலோகம், கணிதன்... என்ன ஒற்றுமை?

ஆஸ்கார் பிலிம்ஸ் பட நிறுவனம் சில வருடங்களுக்கு முன் ஐ, விஸ்வரூபம்-2, பூலோகம், மரியான், வல்லினம், திருமணம் எனும் நிக்காஹ் என ஒரே நேரத்தில் வேறு பல படங்களையும் தயாரித்து வந்தது. இவற்றில் நடித்த ஹீரோக்களின் அன்றைய மார்க்கெட் நிலவரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு படங்களையும் முடித்து வெளியிட்டு வந்தது. ஜெயம்ரவிக்கு மார்க்கெட் இல்லை என்பதால் பூலோகம் படத்தை முடிக்கவும்... வெளியிடவும் ஆர்வம் காட்டவில்லை. அதன் காரணமாக ஏறக்குறைய நான்கு வருடத்துக்கும் மேலாக பூலோகம் படம் வெளியாகாமலே கிடந்தது. ஃபர்ஸ்ட்காப்பி ரெடியானநிலையிலும் இரண்டு வருடங்கள் பூலோகம் படம் கேட்பாரற்று கிடந்தது. இந்நிலையில் ஒருவழியாக சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது பூலோகம் படம்....

எந்தெந்த காய் கனிகளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?

எந்தெந்த காய் கனிகளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்? பழங்கள்: திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒரு மாதம் சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள் அன்னாசி (முழுசாக) 1 வாரம் (வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள் காய்கறிகள்: புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள் முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள் வெள்ளரிக்காய் ஒரு வாரம் தக்காளி 1-2 நாட்கள் காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம் காளான் 1-2 நாட்கள் அசைவ உணவுகள்: வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள் சமைத்த மீன் 3-4 நாட்கள் பிரஷ் மீன் 1-2 நாட்க...

2016-யை அதிர வைக்கும் விஜய் சேதுபதி!

2016-ம் ஆண்டு 7.3% மற்றும் 2017-ல் 7.5% என்ற விகிதங்களில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி யடையும் என்று ஐநா ஏற்கெனவே கணித்துள்ள நிலையில் .2030-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கும் என இங்கிலாந்தின் பிரபல பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான சி.இ.பி.ஆர் (Centre for Economics Business and Research) தெரிவித்துள்ளது. முன்னதாக“வரும் பத்தாண்டு காலக்கட்டத்தில் அதிவேகமாக வளரும் ஆற்றல் இந்திய பொருளாதாரத் துக்கு உள்ளது. அதாவது 7% என்ற சீரான பொருளாதார வளர்ச்சி எதிர்ப்பார்க்கப் படுவதால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா அதிவேக வளர்ச்சி பொருளாதார நாடாக உயர்வடைய வாய்ப்புள்ளது” என்று ஹார்வர்டு பல்கலைக் கழக பன்னாட்டு வளர்ச்சி மைய ஆய்வாளர்கள்...

அடிக்கடி தண்ணீர் குடிக்கலாமா?

ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் இருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் வெளியேறும்போது எரிச்சல் ஏற்படும். ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு தினமும் இரண்டு லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால் இயல்பு நிலை. இதயநோய், சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குடிநீரின் அளவை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும்.ஒருநாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதேபோல் சிறுநீர் அடிக்கடி வெளியேறக்கூடாது.ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தான் சிறுநீர் கழிக்க வேண்டும். இதற்கு குறைந்த நேரத்தில் சிறுநீர் கழித்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்.சிறுநீரகத்தில் பிரச்சினை, மது குடித்தல், புகைப்பழக்கம், சிறுநீர் தொற்று, முதுமை என அடிக்கடி...