
கிட்டதட்ட 65 நாட்களுக்கான படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து முடிந்துவிட்டது. இன்னும் 45 நாட்கள் சென்னையில் எடுக்கப் போகிறார்களாம். மலேசியா ஷுட்டிங்கின் போது யூசர் பிரண்ட்லியாக இருந்த ரஜினி, சென்னையில் சற்று இறுக்கமாகவே காணப்பட்டாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் அங்கு ரசிகர்கள் குவிந்தாலும் சந்தோஷம். குடும்பத்தோடு வந்து நின்று கும்பிட்டாலும் சந்தோஷம். இங்கு அப்படியா? நெர்வஸ்… நெர்வஸ்…! முக்கியமாக ரஜினியை வைத்துக் கொண்டு அவுட்டோர் காட்சிகளை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.அது ஒரு பக்கம் இருக்கட்டும்… இந்த படம் வயதான கெட்டப் ரஜினியில் ஆரம்பித்து இளமையான ரஜினியில் வந்து முடிகிறது. கபாலி யார்? அவரது கம்பீரம் என்ன? என்பதுதான் படத்தின் டிராவலாம். டைரக்டர்...