தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக இணைந்த இளைஞர் அணி தற்போது தங்களது பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஒரு படத்தில் இணைந்து நடித்து அதன் மூலம் வரும் லாபத்தை நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக உதவுவதாக கூறியிருந்தனர்.இந்நிலையில் தற்போது அதற்கான பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 1990ஆம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ‘இணைந்த கைகள்’ படத்தை ரீமேக் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் இந்தி மற்றும் தெலுங்கிலும் அப்போது ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி ஹிட்டடித்தது.
ஆபாவாணன் தயாரித்த இப்படத்தை என் கே விஸ்வநாதன் இயக்கியிருந்தார். இப்படத்தில் ராம்கி, அருண்பாண்டியன், நிரோஷா, ஸ்ரீவித்யா, சார்லி மற்றும் முக்கிய வேடத்தில் நாசர் நடித்திருந்தார்.
இப்படத்தின் உரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறதாம். எனவே விரைவில் இதற்கான அனுமதி கிடைத்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
10:39 PM
மகிழ்
Posted in:
0 comments:
Post a Comment