Monday, December 21, 2015

பில்கேட்ஸ் பணக்காரர் ஆவதற்கு காரணம் யார்? கசிந்த தகவல்

மைக்ரோசொப்ட் அதிபரும், உலகின் பெரும் பணக்காரருமான பில்கேட்ஸ் பணக்காரர் ஆவதற்கு யார் காரணம் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.பில்கேட்ஸ் 20 வருடங்களுக்கு முன்னர் மைக்கேல் லார்சன் (Michel Larson) என்பவரை பணியில் அமர்த்தியுள்ளார். அப்போது, பில்கேட்ஸின் சொத்து மதிப்பு வெறும் 5 பில்லியன் அமெரிக்க டொலர்தான்.ஆனால், சுறுசுறுப்பும், கணிப்பு திறனும் இயற்கையாகவே கொண்ட லார்சன், பில்கேட்ஸின் சொந்த முதலீட்டு நிறுவனமான கேஸ்கேட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தை உச்சிக்கு கொண்டு சென்றார்.ஒருநேரத்தில், பில்கேட்ஸின் சொத்து மைக்ரோசொப்டை மட்டுமே நம்பியிருந்தது.‘ஆனால், லார்சனின் திறமையால் முதலீட்டு நிறுவனத்தில் வருமானம் கணிசமாக அதிகரித்தது. அதில் வந்த வருமானத்தை லார்சன் புத்திசாலித்தனமாக டெக்னாலஜியில் மட்டுமே முதலீடு செய்து வந்த முறையை மாற்றி ரியல் எஸ்டேட், கனடியன் ரெயில்வே கம்பெனி, ஆட்டோ நேஷன், ரிபப்ளிக் சர்வீஸஸ்...

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்?

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள் என்பதற்கு பல சுவாரஸ்யமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் எட்டு:1. ரிமோட் கண்ட்ரோல் என்பது ஆண்களுக்கு ஒரு விதமான சக்தி தருகிறது. 'நான்தான் குடும்பத் தலைவன். எனக்குக் கீழ்ப்படிந்துதான் டி.வி. உள்பட எல்லாரும் இயங்க வேண்டும்' என்கிற ஆணாதிக்கச் செயல் என்கிறார்கள்.2. ஒரு மனைவியின் கூற்றின்படி... 'என் கணவரால் என்னை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. ரிமோட் கண்ட்ரோலை இம்சை செய்கிறார்.'3. ஆண்களின் ஆதிகால வேட்டையாடும் குணத்தின் நவீன வடிவம் இது. கையில் ரிமோட் வைத்திருக்கும் ஆண் சுவாரஸ்யமான இரைகளைத் தேடும் வேட்டை மிருகம்.4. ஆண்களுக்கு உடனடியாக காரியம் நடக்க வேண்டும். மேலும் கொஞ்சம் சந்து கிடைத்தால் 'அங்கே என்ன ஓடிக்கொண்டிருக்கிறது... அதைத் தவறவிடக்கூடாது' என்கிற எட்டிப் பார்க்கும் ஆசையும் உண்டு.5. எப்போதுமே ஆண்களுக்குக் கொஞ்சம் அலையும் ஆசையும், இருக்கிறதை விட்டுப்...

பிரபலங்களின் இருண்ட ரகசியங்கள்!

பிரபலங்கள் பிரபல நடிகர்கள் உலகப் புகழ் பெற்ற பணக்கார மக்கள்.... இவர்கள் ஒவ்வொருவருள்ளும் ஒளிந்திருக்கும் நம்ப முடியாத இருண்ட இரகசியங்கள். சார்லீஸ் தெரோன்- ஒரு தென்னாப்பிரிக்க நடிகை ஆடை அலங்கார மாடல். அவரது அப்பாவை கொன்றது அவளது அம்மாவே என்பதை பல வருடங்கள் மறைத்திருந்தார் லெய்டன் மீச்ட்டர்- அமெரிக்க (Star-show) நடிகையும் பாடகியுமான இவர் பிறந்து சிறைச்சாலை பலருக்கும் தெரியாதது அவள் அம்மா ஒரு போதை மருந்து கடத்தல்காரி. ஓப்ரா வின்ப்ரே- அமெரிக்க செய்தி ஊடகம் உரிமையாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகை, தயாரிப்பாளர், தனக்குப் பிறந்த குழந்தையை பதினான்கு ஆண்டுகள் மறைத்து வைத்திருந்தார். வுடி ஆலன்- அமெரிக்க திரைக்கதை இயக்குனர், நடிகர், காமெடியன், எழுத்தாளர், நாடக ஆசிரியர், இசைக்கலைஞர். அவர் மணந்து கொண்டது தன் வளர்ப்பு மகளையே. தேரி லின் ஹாட்சர்- அமெரிக்க நடிகை, எழுத்தாளர், தொகுப்பாளர். உறவினர்...

அண்ணனிடம் அடி வாங்கிய இளையராஜா

அண்ணன் இல்லாத நேரத்தில், அவருடைய ஆர்மோனியத்தை இளையராஜா எடுத்து வாசித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் பாவலர் வரதராஜன், பிரம்பை எடுத்து இளையராஜாவை விளாசினார்.பாவலரின் கச்சேரிகளில் பெண் குரலில் பாடி அசத்திய இளையராஜாவை, திடீரென்று "நீ பாடவேண்டாம்'' என்று பாவலர் கூறிவிட்டார். அதற்குக் காரணம் இளையராஜாவின் குரலில் ஏற்பட்ட மாற்றம்தான்.இதுபற்றி இளையராஜா கூறுகிறார்:"நாளொரு கச்சேரி, பொழுதொரு ஊர் என்று போய்க்கொண்டிருந்த அந்த உற்சாக நாட்களில், ஆண்களுக்கு பருவ வயதில் வரும் "மகரக்கட்டு'' எனக்கு வந்துவிட்டது. அதாவது குரல் உடைந்து, ஆண் குரலாக மாறுவதை "மகரக்கட்டு'' என்பார்கள். என் குரல் பெண் குரல் போல் இல்லாததால், என்னை விட்டு விட்டு தம்பி அமரனை (கங்கை அமரன்)...

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

"கருங்காலி" என்ற சொல்லின் தோற்றம் இன்று வரை விவாதத்திற்கு உட்பட்டதாகவே இருந்துவருகிறது. ஆங்கில மொழி வல்லுனர்களுக்கும் தமிழ் மொழி வல்லுனர்களுக்கும் இடையில் ஒரு அர்த்தம் செறிந்த சொல் யுத்தம் பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. நம்பிக்கை துரோகிகளைக் குறிக்கப் பயன்படும் ஆங்கில சொல்லான “Black Legs” என்பதன் நேரடி மொழி பெயர்ப்புதான் நாம் தமிழில் பயன்படுத்தும் கருங்காலி என்ற சொல்லாகும் என்பது ஆங்கில மொழி வல்லுனர்களின் வாதமாகும். இதை நிரூபிக்க அவர்கள் வரலாற்றிலிருந்து ஒரு சம்பவத்தை நினைவு படுத்துகிறார்கள்.ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு பின்பு, காரல் மார்க்ஸின் சிந்தாந்தம் அங்கே வேகமாக பரவத்தொடங்கியது. தொழிலாளர்களுக்கென்று சங்கங்கள் உருவாகத்தொடங்கின. அப்படிப்பட்டதொரு காலகட்டத்தில் அங்கே ஒரு நிலக்கரி தொழிற்சாலையில் வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கியது. இப்போது செய்வதைப் போலவே அப்போதும் முதலாளித்துவம்...

இரவில் பாதுகாப்பான டிரைவிங்குக்கு சில டிபஸ்...

பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது வேகத்தையும்,தூரத்தையும்கணிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன.தவிர,எதிரே வரும் வாகனங்களின்ம முகப்புவிளக்குகளின் வெளிச்சம் நம் கண்களை சில வினாடிகள் இருளாக்கி விடும்.இதனால்,இரவுநேரங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன.பகல் நேரத்தைவிட இரவு நேரத்தில்,விபத்துக்கள் மூன்று மடங்கு அதிகம் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும்,பார்வைதிறனும் கிடைப்பதில்லை.வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமேவெளிச்சத்தை தருகின்றன.இதனால்,இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்துஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே,இரவு நேர பயணங்களில் டிரைவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள்...•கார்களில் இரவு நேர பயணம் செல்வதை பெரும்பாலும்,தவிர்த்து விடுங்கள்.தவிர்க்க...

ஏமி ஜாக்சனுக்கு எதிராக மீசை முறுக்கிய வைரமுத்து

 தமிழர்களின் கலை என்ன, பாரம்பரியம் என்ன என்பது தெரியாத ஏமி ஜாக்சன் போன்ற ஃபேண்டஸி பாவைகள், ஜல்லிக்கட்டு கூடாது என்று பரப்புரை செய்து வருகிறார்கள். அந்த ஃபேண்டஸி பாவைகளுக்கு தன்னுடைய தமிழால் பதிலடி தந்துள்ளார் வைரமுத்து.மணப்பாறையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,"மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு என்பதெல்லாம் பிற்காலச் சொல். ஏர்தழுவுதல் என்பது தான் தமிழ். இந்த வீர விளையாட்டுக்கு வழங்கிய பழம் பெயர். ஏறு என்பது அங்கே தழுவப்படுகின்றது. தழுவப்படுகின்ற போது ஏறுகள் காயப்படுத்தப்படுவதில்லை.தழுவுதல் என்ற சொல்லே மென்மையானது அது விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கின்ற விளையாட்டு அல்ல. விலங்குகளை...

தங்க மகன் - பாசத்துக்கு முன்னால் பணமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை

 பாசத்துக்கு முன்னால் பணமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று வாழும் ஒரு தங்கமான மகனின் கதை.தனுஷ், எமி ஜாக்சன் இருவரும் காதலிக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை குறித்த கருத்து வேறுபாட்டால் காதல் முறிகிறது. பெற்றோர் தனுஷுக்கு சமந்தாவைத் திருமணம் முடிக்கிறார்கள். எமி, தனுஷின் அத்தை மகன் ஆதிக்கை மணந்துகொள்கிறார்.அப்பா பணியாற்றும் அலுவலகத் திலேயே வேலைக்குச் சேருகிறார் தனுஷ். புதுமண வாழ்க்கை, பாசமான பெற்றோர், ஒட்டித் திரியும் நண்பன் சதீஷ் என எல்லாம் சரியாக அமைந்துவிட்ட தனுஷின் வாழ்க்கையை அவரது அப்பா ரவி குமாரின் திடீர் தற்கொலை புரட்டிப்போடுகிறது. தனுஷுக்கும் வேலை பறிபோகிறது. அப்பா மீது அலுவலகம் சுமத்திய களங்கமே அவரது தற்கொலைக்குக் காரணம்...

பிரேமம் மீது ஏன் இத்தனை காதல்?

கடந்த வாரம் சென்னையில் 200வது நாள் கொண்டாடி இருக்கிறது பிரேமம் என்கிற மலையாளப்படம். அப்படி என்னதான் இருக்கு இதில் இருக்கு என்றுதான் கதையை கேட்ட எல்லாருக்கும் தோணும். ஆண்டாண்டு காலம் அடிச்சுத்துவைச்ச 'பப்பி, பெப்பி, கப்பி' லவ் தான் கதை. சமீப காலத்தில் ஒரு படத்தை இந்தளவு சிலாகிச்சு உரிமை கொண்டாடி சண்டை போட்டு நம் மக்கள் மூச்சையும் ஆவியையும் தொலைத்தது வேறெந்தப் படத்துக்கும் இல்லை என்பதே உண்மை. படம் பெயரோ, ஹீரோவோ, டைரக்டரோ எதுவும் சொல்லத்தேவையில்ல. ஒரே ஒரு வார்த்தை போதும், உங்க உதட்டில் மைக்ரோ, மிக மைக்ரோ புன்னகை வர வைக்க. அந்த வார்த்தை... "மலர் டீச்சர்".வரலாற்றை சற்றே கிளறிப்பார்த்தால் கேரளாவோட தொடர்பிருக்கிற மாதிரி எடுக்கப்பட்ட (நல்ல) படங்கள்...

சர்க்கரை நோயாளிகள்-’40 சதவீத’ வித்தியாசம் அதிகமானால்…

பெரும்பான்மையான சர்க்கரை நோயாளிகள், அறியாமையால், ‘எனக்கு சர்க்கரை அளவு கட்டுப் பாட்டில் இருக்கிறது. ஒரு தடவை 180 சதவீதம் ஆகியது. உணவு, உடற் பயிற்சியால் சர்க்கரை 140 ஆகக் குறைத்து விட்டேன்’ என்பர். இவரது பரிசோதனை அறிக்கையைப் பார்த் தால், மூன்று மாதத்திற்கு முன் எடுத்த பரிசோதனையாக இருக்கும். அதுவும், ‘ரேண்டமாக,’ சாப்பிட்டு 3 மணி நேரம் கழித்து, பரிசோதனை செய்து இருப்பார். ஏஞஅ1ஞி பரிசோதனை, சர்க்கரையின் மூன்று மாத கட்டுப் பாட்டைக் காட்டும் பரிசோதனை; இதை செய்து இருக்க மாட்டார்கள். ‘உங்கள் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது’ என்று கூறினால், ‘வீட்டில் விசேஷம்; நிறைய இனிப்பு பலகாரங் கள் சாப்பிட்டேன். அதனால், தான் சுகர் அதிகமாக உள்ளது’ என்பர். ஒருமுறை சர்க்கரை அளவு 120 முதல் 140 வந்து விட்டால், தனக்கு சர்க்கரை வியாதி குணமாகிவிட்டது என்று நினைத்து கொண்டு, மருந்துகளை சாப்பிட மாட் டார்கள். ஒரு நாளைக்கு ரத்தத்தில்...

சர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான்…!

சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்று காணப்படும். மலையைச் சார்ந்த காடுகளில் இது அதிகம் வளர்கிறது. இத்தகைய தாவரங்களுக்கு சர்க்கரை கொல்லிகள் என்று தமிழில் சொல் வழக்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. இலைகள், விதைகள், வேர் மருத்துவ குணம் கொண்டவை. சர்க்கரைக் கொல்லி : சமீப காலமாக இந்தியா மற்றும் ஜப்பானில் ஜிம்னீமா தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக நீரிழிவு நோயினை இயற்கையாக கட்டுப்படுத்த ஜிம்னிமா இலைகள் பெரிதும் பயனுள்ளவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ ஆய்வுகளில் நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு குறைவான இன்சுலின் தேவைப்படுவது தெரியவந்துள்ளது. இலைகள் நாக்கின் இனிப்பு சுவைமொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்து அதற்கான...

சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்!

சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்! “மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவை, சர்வதேச நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். காபி, டீ மற்றும் சில வகை பானங்களை சூடாக சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர். சிலர் தான், நன்றாக சூடு ஆறிய பின் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது ஒரு வகையில் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிகிறது. தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ் நாட்டில் தான் காபி குடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எடுத்துக்கொண்டால், எவருமே டீ குடிப்பதை தான் விரும்புகின்றனர். காலையிலும் டீ குடித்தால் தான் பத்திரிகையையே படிக்க தோன்றும் சிலருக்கு; இன்னும் சிலருக்கு படுக்கையிலேயே...

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒத்துவரக் கூடிய மற்றும் ஒத்துவராத உணவு வகைகள் - ஒரு நீண்ட கட்டுரை!

நம் உடம்பிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தண்ணீர் என நான்கு வகையென நாம் தெரிந்து கொண்டோம். அடுத்த கட்டமாக இந்த நான்கு ஊட்டச்சத்துகளில் இருந்து என்ன அடிப்படையில் நமக்குத் தேவையான உணவை தேர்வு செய்ய வேண்டும் என இப்பொழுது பார்ப்போம். நம் உடம்பிற்கு முக்கியமாக தேவைப்படுகின்ற ஊட்டங்கள் ஏழு ஆகும். ஆகவே இந்த ஏழு ஊட்டச் சத்துக்களை வழங்கும் உணவு வகைகளைத்தான் நாம் உட்கொள்ள வேண்டும் என்றாகின்றது. அந்த ஏழு ஊட்டச் சத்துக்கள் முறையே விட்டமின்கள், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், நார்ச்சத்து, என்சைம்கள் எண்ணெய் மற்றும் தண்ணீராகும். விட்டமின்கள்: நம் உடம்பில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களுக்கு தேவையான எனர்ஜியை வழங்குகின்றன. மேலும் நாம் உண்கின்ற உணவு சரியாக பயன்படவும் உதவுகின்றன. உதாரணமாக விட்டமின் அ, ஆ காம்ளக்ஸ் விட்டமின் மற்றும் விட்டமின் ஈ ஆகியவற்றைச் சொல்லலாம். தாதுக்கள்:...

உலகம் அழியாமல் போனதுக்கு இப்போதுதான் சரியான காரணம் கிடைத்துள்ளது!!

பல வருடங்களாக ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருந்த மாயன் காலண்டரின் அடுத்த பகுதி தென்னமெரிக்காவின் வேறொரு பகுதியில் கண்டு எடுக்கப்பட்டுள்ளது. பழைய காலண்டரின் தொடர்ச்சியாக அது அமைந்ததே அதிசயமான ஒன்று அதே நேரத்தில் உலகம் அழியாமல் போனதுக்கு இப்போதுதான் சரியான காரணம் கிடைத்துள்ளது. அந்த காலண்டரில் 2032-ம் வருடத்தில் மார்ச் மாதம் 16-ம் தேதிக்கு பின் தொடர்ச்சியாக 21 நாட்கள் இடைவெளி விடப்பட்டிருக்கின்றனவாம். அந்த காலகட்டத்தில்தான் டுபிரு என்ற வால்நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் வரும் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதே நேரத்தில் சூரியன், வியாழன் போன்றவையும் பூமியுடன் நேர்கோட்டில் இருக்கும். அதனால் ஏற்படும் கடுமையான ஈர்ப்பு விசையின் காரணமாக பூமியின் சுழற்சி தடைப்படலாம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அப்படி நடக்குமானால் உலகம் அழிவு நிச்சயம். ஆனால் அப்படி நடக்கும் போது பல தப்பி பிழைத்துக் கொள்வதற்கும்...

பழங்களை எப்போது எப்படி சாப்பிடணும்?

நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும். சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும். உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும். பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு. பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும...

பீப்புக்கு ஒரு ஸ்டாப் வை என் நாட்டு அதிகாரமே!

‘தலைவலியும் திருகு வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்கிற பழமொழியெல்லாம் சிம்பு அனிருத்துக்கு மட்டும் செல்லாது. செல்லவே செல்லாது! மருந்தை தேடி மற்றவர்கள் போனால், வலியைத் தேடி போகிற வழக்கம் இருக்கிறது இருவருக்கும். அந்த வழுக்கல்தான் கடந்த நான்கு நாட்களாக அவர்களும், அவர்களால் ஜனங்களும் அனுபவித்துக் கொண்டிருப்பது! அருவா வியாபாரி, ‘சொருவ’ இடம் தேடி சுத்துற மாதிரியாகிருச்சு ரெண்டு பேரோட இசைப்புலமையும்!தமிழ்சினிமா இப்போதெல்லாம் ‘பொயட்டு’களின் ஆதிக்கத்திற்குள்தான் அடங்கிக் கிடக்கிறது. ‘டங்காமாரி ஊதாரி’ போல ஒரு பாட்டு இருந்தா, அவ்ளோ யூத்தும் தியேட்டருக்குள்ளதான் என்று தவியாய் தவிக்கிறார்கள் இயக்குனர்கள். அப்படிப்பட்ட பாடல்களை எழுதுகிற புலவர்களை எல்லாம் ‘பொயட்டு’ என்ற வகைக்குள் அடக்கிக் கொள்கிறது சினிமா. அனிருத்தின் வாழ்வை தொடங்கி வைத்தவர் ‘பொயட்டு’ தனுஷ்தான். இந்த பொயட்டும் அந்த மியூசிக் ரவுடியும்...