
அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான "நமது எம்.ஜி.ஆர்." இணைய தளத்தில் சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்பதாக கருத்து கணிப்பு வெளியாகி பரபரப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் தங்களது இணைய பக்கத்தை சமூக விரோதிகள் ஹேக் செய்து இதுபோன்ற கருத்து கணிப்பை வெளியிட்டதாக நமது எம்.ஜி.ஆர். இணையதளம் தெரிவித்துள்ளது.சென்னை வெள்ளம் தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது அரசு மீதும் முதல்வர் மீதும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கருதி முன்னாள் டிஜிபி நட்ராஜ், அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர்தான் வேறு ஒரு நட்ராஜின் பேட்டிக்கு தொலைக்காட்சி நிர்வாகம் தவறாக முன்னாள் டிஜிபி படத்தைப் போட்டது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து நட்ராஜ்...