
வெள்ளத்தில் தத்தளிக்கிறது சென்னை. வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றிருந்தபோது செல்வா ஆதீஸ்வரி தம்பதியைச் சந்திக்க நேர்ந்தது.மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் இல்லத்துக்குப் பின்புறம் உள்ள கோபு சாலையில் வரிசையாக இருக்கின்றன குடிசை வீடுகள். அதில் இரண்டு ஆட்கள் நின்று பேசும் அளவுக்கான உயரத்தில் மூன்று பேர் அமர்ந்து பேசும் அகலத்தில் ஒரு குடிசை வீடு."இது வீடில்லைங்க. எங்க இஸ்திரி கடை. எங்க வீடு தண்ணீல போய்டிச்சி. இப்ப இங்கதான் நாங்க இருக்கோம்" என்கிறார் செல்வா."பூனைங்க எல்லாம் உங்களுதா..?""ஆமாங்க. நாங்களே வளக்குறோம். இதுங்க நம்ம கொழந்தைங்க மாதிரி" ஆதீஸ்வரி."உங்களுக்குக் குழந்தைங்க இருக்கா..?""நாலு பேருங்க..." ஆதீஸ்வரி."சரி......