Sunday, December 20, 2015

ஆண்களைவிட பெண்கள் மிக முக்கியமாக சாப்பிட வேண்டிய சாறு

கருப்பு திராட்சையில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதில் போலிக் அமிலம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.பலர் கர்ப்பகாலங்களில் சாப்பிடக்கூடாது, குழந்தை கருப்பாக பிறக்கும் என்பார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நீங்கள் சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது தாய்க்கும் நல்லது.தர்பூசணி பழத்தில் தண்ணீர்ச்சத்து அதிகம் இருக்கும். வைட்டமின் ஏ சத்து மற்றும் போலிக் அமிலம் அதிகம் காணப்படுவதால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. தாய்மார்கள் விரும்பிச் சாப்பிடலாம்.அத்திப் பழச்சாறு ஆண்களைவிட பெண்கள் மிக முக்கியமாக சாப்பிட வேண்டிய சாறு. ஏனெனில் பெண்களுக்கு ஏற்படும் சத்துக்குறைவு(இரத்தசோகை) பிரச்சனைகளை சரி செய்கிறது.உடலில் இரத்தத்தைச் சுத்திகரிக்கக் கூடியது. இதில் இரும்புச்சத்து அதிகம். பெண்கள் அதிகமாக சாப்பிட வேண்டும். சோர்வாக இருக்கும் போது சாப்பிட்டால்...

பெண்களுக்கு ஆதரவாதானே பாடுனேன். அது தப்பா? சிம்பு உருக்கம்!

“அந்த டேஷ் பாடல் பெண்களுக்கு ஆதரவான பாடல்தான். அதையேன் புரிஞ்சுக்காம என் மேல் கோபப்படுறீங்க” என்று குறிப்பிட்டிருக்கிறார் சிம்பு. பல நாட்களாக விளக்கம் ஏதும் கூறாமலிருந்த சிம்பு, பா.ம.க, மதிமுக, விடுதலைசிறுத்தைகள் போன்ற கட்சிகள் களத்தில் குதித்ததும் இந்த பிரச்சனையை இனிமேலும் வளர விடக் கூடாது என்று நினைத்தார் போலிருக்கிறது. இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தனது விளக்கத்தை அளித்திருக்கிறார். நடுநடுவே உருக்கமாக அவர் பேசியதை கேட்டால், “தம்பி… இன்னும் இது மாதிரி பாட்டு ஏதாவது இருந்தா சொல்லிடுப்பா…” என்று மக்களும் கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்திவிடுவார்கள். அப்படியொரு உருக்கம்…. கவலை அதில்!அட்றா அவள. கொல்றா அவளன்னு பாட்டு எழுதுனவனெல்லாம் விட்டுட்டீங்க. (போற போக்குல தனுஷையும் போட்டு தாக்கிட்டாரே) ஆனால் காதல் தோல்வியால் விஷம் குடிச்சு சாவாதே. வாழ்க்கையில உருப்படுற வேலைய பாரு. பெண்கள் பின்னால் சுத்தாதன்னு...

அஜினோ மோட்டோ….நல்லதா கெட்டதா? ஒரு விரிவான ஆய்வு..!

மனிதனைத் தவிர உயிரினங்கள் அனைத்தும் உணவை உயிர்வாழ்வதற்கான ஆதாரப் பழக்கமாக மட்டுமே கொண்டுள்ளன. ஆனால் மனிதன் மட்டுமே சுவைக்காகவும், சுகத்துக்காகவும் உணவருந்தும் பழக்கம் உள்ளவனாக இருக்கிறான்.இந்த பழக்கம் நவீன உலகில் இந்தியா போன்ற வளரும் நாடுகளை பெரும் சந்தையாக்கி இருப்பதால், சுவையின் பெயரால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வினோதப் பண்டங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரித்து இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றன.கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகி வரும் அஜினோமோட்டோ என்ற உப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். முன்பு சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் பிரபலமாக இருந்த மோனோ சோடியம் குளூட்டமேட் (Mono sodium glutamate) என்ற வேதிப்பெயரைக் கொண்ட இந்த விநோத உப்பு, தற்போது கிராமப்புற வீடுகளின் சமையலறைக் குள்ளும் புகுந்துவிட்டது.கண்ணைக் கவரும் வண்ணங்களில், வித்தியாசமான நறுமணத்துடன் சந்தைக்கு வரும் எந்த பொருளாக இருந்தாலும்...

2.O கதை என்ன?

பெரிய இயக்குனர்களோ, பெரிய நடிகர்களோ பங்கேற்கும் படம் என்றால் உடனே அந்தப் படம் குறித்து  பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கும். ஆனால் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் 2.O படப்பிடிப்பு ஆரம்பமாகி இத்தனை நாட்களாகிவிட்ட நிலையில் இன்னும் அந்தப் படத்தின் கதையை பற்றி யாரும் விவாதிக்கவில்லை. ஏற்கெனவே படப்பிடிப்பு நடைபெற்று வரும் ஈவிபி ஸ்டுடியோவில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எந்த விதத்திலும் அவர்களாக புகைப்படத்தை வெளியிடும் முன் தப்பித் தவறி எந்த புகைப்படும் வெளியாகாது என படக்குழுவினரே தெரிவிக்கிறார்கள்.சென்னையில் அடுத்த ஒரு மாதத்திற்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்கிறார்கள். 2.O படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என யாருமே...

பெண்களிடம் மன்னிப்பு கேட்டு டி.ராஜேந்தர் உருக்கமான பேட்டி!

கூடா நட்பிருந்தால் இதுபோன்ற பிரச்னைகளை சந்திக்கவேண்டிவரும் என்று பீப் பாடல் பற்றியான பிரச்னைக்கு டி.ராஜேந்தர் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.சிம்புவுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்துவதற்காக இப்படி செய்துவிட்டார்கள் என்று சொல்லமுடியவில்லை. இதை சதி என்று சொல்லவா இல்லை விதி என்று சொல்லவா? கூடா நட்பு இருந்துவிட்டாலே வாழ்க்கையில் இதுபோன்ற பிரச்னைகள் நிச்சயம் வரும்.என்ன வாழ வைத்த தமிழ் மொழி இது. சினிமாவில் கூட எந்த கதாநாயகியையும் தொட்டு நடிக்காத கதாநாயகனாக இத்தனை வருடம் வாழ்ந்திருக்கிறேன். எந்த விதமான கிசுகிசுகளுக்கும், முறைப்படி வாழக்கூடியவன். ஒரு தலை ராகத்தில் தொடங்கி இன்று வரையிலும் பெண்களுக்காவே படம் எடுத்தவன்.தாய்மார்களின் ஆதரவுடன் வளர்ந்தவன்...

எரிபொருளை மிச்சப்படுத்த எளிமையான சில யோசனைகள்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மடமடவென உலக சந்தையில் ஏகிறிக்கொண்டே செல்கின்றது. அதன் இருப்புகளும் தீர்ந்துகொண்டு தான் செல்கின்றது. சராசரி குடியானவன் என்ன செய்ய முடியும்? அதிகபட்சம் தான் சார்ந்திருக்கும் நிறுவனம், சங்கம், அமைப்புகள் மூலம் எதிர்குரல் கொடுக்க முடியும். அரசுக்கு நாம் படும் அவதிகளை சுட்டிக்காட்ட முடியும். அதனை அரசு ஏற்று அதை நடைமுறைபடுத்துகின்றாதா என்பது வேறு கதை. அடுத்த சந்தியினருக்கு நாம் விட்டு செல்வதெல்லாம் அவர்கள் நிம்மதியாக வாழ முடியாத வாழ்கை மட்டுமே. எத்தனை இயந்திரங்கள், நவீன கண்டுபிடிப்புகள் இருந்து என்ன பயன். நிம்மியாக சுவாசிக்க காற்றை நாம் விட்டு செல்லபோவதில்லை, குடிக்க குடிநீரை நிலத்தடியில் விட்டுவைக்கவில்லை, நீளும் இந்த பட்டியல்..சரி பெட்ரோல் விலை ஏறுகின்றது என்கின்ற எரிச்சலை தூரப்போட்டுவிட்டு அதனை சரியாக முறையாக எப்படி பயன்படுத்தி நாட்டுக்கும் வீட்டுக்கும் நமக்கும் எப்படி...

அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்? சிம்பு கேள்வி!

பீப் பாடல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சிம்பு அது குறித்து விளக்கமளித்துள்ளார்.இது குறித்து சிம்பு அளித்துள்ள பேட்டியில் , “ நான் பாடிய பாடல் தான். இதில் அனிருத்திற்கு எந்தவித சம்பந்தமில்லை. இது மாதிரி எத்தனையோ பாடலை பாடியிருக்கேன். இந்தப் பாடலில் பெண்களைப் பற்றித் தவறாக பாடவில்லை. இந்தப் பாடல் எந்தப் படத்திலும், எந்த சேனலிலும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத பாடல். யாரோ திருடி வெளியிட்டிருக்கும் இந்தப் பாடலுக்கு என்னை விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம் ?கடந்த  30 வருசமா இந்த சினிமாவில் இருந்துட்டுருக்கேன்.  அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல், யாரோ இணையத்தில் வெளியிட்டதற்கு, என் உருவபொம்மையை எரிக்கிறீர்கள். அப்படி என்ன தப்பு பண்ணிவிட்டேன். கற்பழிப்பு வழக்கில் கைதாகிறவர்கள் சுலபமாக வெளியே வந்துவிடுகிறார்கள். ஆனா இவ்வளவு வருசம் தமிழ் சினிமாவிற்காகவும், தமிழ் மக்களுக்காகவும்...

முக வடிவத்திற்கு ஏற்ற புருவம்

புருவம் இலேசாக மேலேற வெளிப்புறம் கொஞ்சமாகவே கீழிறங்க வேண்டும். பார்ப்பதற்கு, தூரத்தில் பறக்கும் பறவை மாதிரி இருக்கும். வெளிப்புறமாக இருக்கும் தேவையற்ற முடியை அகற்றி விடுங்கள். முடியுமிடத்தில் மிகவும் மெலிதாக இருக்கட்டும்.* சதுர முகம்: புருவ வளைவு அகன்று இருக்க வேண்டும். புருவ முடிகளின் வரிசையில் உள்பக்கமாக இருப்பவற்றைத்தான் அகற்ற வேண்டும். அதுதான் முகத்தின் சதுரத் தன்மையைத் குறைத்துக் காட்டும்.* வட்ட முகம்: புருவம் மிகவும் நீளம் குறைந்ததாய் இருக்க வேண்டும். பருமனாக ஆரம்பித்து, அடுத்தடுத்துக் குறுகிக் கொண்டே இருக்க வேண்டும். வெளிப்புற முடிவில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றி விடுங்கள்.* நீளமான முகம்: எவ்வளவுக்கெவ்வளவு நேராக, வளையாமல் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது. புருவத்தின் ஓரத்தில் மட்டும் மிகச்சிறு அளவு வளைந்து விடுங்கள்.* புருவம் தீட்டப் பொதுவாக ஐப்ரோ பென்சில்களைப் பயன்படுத்துவதே...

இருமலை கட்டுப்படுத்தும் நல்லெண்ணெய்

அனைவருக்கும் இருமல், தும்மல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கெல்லாம் நல்லெண்ணெய் எப்படி உதவுகிறது? என்பதை பார்க்கலாம்.* இதற்கு உபயோகப்படுத்தும் நல்லெண்ணெய் சுத்தமாகவும், தூய்மையாகவும் மற்றும் கலப்படமின்றியும் இருக்க வேண்டும்.* இருமல், தும்மல், காய்ச்சல் உள்ளவர்கள் ஆரம்பமானவுடனே 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் சளி கரையும். மேலும் தும்மல் நின்று, மூக்கில் தண்ணீர் வடிவதும் நின்று விடும். இப்படி செய்வதால் இருமலைக் கட்டுப்படுத்த முடியும்.* கடுமையான இருமலாக இருந்தால் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் போதும் இருமல் நிற்கும். எளிய முறையில் இருமலை விரட்டிவிடலாம்.* பெரும்பாலும் சிறு குழந்தைகளுக்கு மூக்கில் சளி வந்து கொண்டிருக்கும். அப்போது ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு, அதை தொட்டு எடுத்து மூக்கின் துவாரத்தில் அடிக்கடி தடவ வேண்டும். மூக்கை...

பெண் குரலில் இளையராஜா பாட்டு!- பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்

சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, பாடுவது பெண் என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர். கேரள முதல்- மந்திரி நம்பூதிரிபாடு, பாவலர் வரதராஜனை மேடைக்கு அழைத்து, தனது மந்திரிசபை அமையக் காரணமானவர் என்று பாராட்டியதால் அவர் ஒரே நாளில் புகழின் உச்சிக்குப் போய்விட்டார். இந்த சம்பவம்தான் நான் இசை உலகில் அதிகமாக கால்பதிக்க காரணமாக அமைந்தது என்கிறார் இளையராஜா. அவர் கூறுகிறார்:- கேரளாவில் நடந்த நிகழ்ச்சி மூலமாக பாவலரை அறிந்த கம்யூனிஸ்டு கட்சியினர் அவரை தங்கள் பகுதிகளிலும் பாட அழைத்தார்கள். அதில் முதல் அழைப்பு திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் கம்யூனிஸ்டு தொழிலாளர் மாநாட்டுக் குழுவிடம் இருந்து வந்தது. அண்ணனும்...

பீப் சாங் விவகாரம் : வருத்தத்தில் இளையராஜா குடும்பத்தினர்

 பீப் சாங் விவகாரம் குறித்து இளையராஜாவிடம் சமீபத்தில் பத்திரிக்கையாளர் கேள்வி கேட்ட விவகாரமும், அது சர்ச்சையாக்கப்பட்டதும் இளையராஜா குடும்பத்தினரை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. கிட்டதட்ட 75 வயதாகும் இளையராஜா, சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.உடல்நிலை சரியில்லாத நிலையிலும் சமீபத்தில் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை வழங்கினார். வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு தானே நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தன்னால் முடிந்த உதவிகளை தனது சொந்த பணத்தில் செய்தார். இதே போன்று எக்மோர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த...

ரோபோ சங்கரிடம் சான்ஸ் கேட்கும் டிவி காமெடியன்கள்

 விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டான்டப் காமெடி செய்து புகழ் பெற்றவர் ரோபோ சங்கர். அதையடுத்து பல சின்னத்திரை மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவர் சினிமாவிலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் பாலாஜிமோகன் இயக்கிய வாய்மூடி பேசவும் படம்தான் அவரை பேச வைத்தது. அந்த படத்தில் குடிகாரர்கள் சங்கத்தலைவராக நடித்த ரோபோ சங்கரை பின்னர் பல படங்களுக்கு புக் பண்ணினார். குறிப்பாக, மாரி, மாயா, ஸ்ட்ராபெர்ரி, திரிஷா இல்லன்னா நயன்தாரா, மய்யம் போன்ற பல படங்களில் காமெடியனாக நடித்தார். இதில் மாரி படத்தில் ஷோலோ காமெடியனாக நடித்திருந்தார்.அதையடுத்து, இப்போது ரஜினிமுருகன், வீர சிவாஜி உள்பட பல படங்களில் பிசியாக நடித்து...

பாஜிராவ் மஸ்தானி - திரை விமர்சனம் மொத்தத்தில்-மாஸ்டர்பீஸ்

பாகுபலி படத்திற்கு பிறகு சரித்திர படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்தவகையில் மராட்டிய மன்னர் பாஜிராவ், அவரது இரண்டாவது மனைவி மஸ்தானியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு வெளியாகியுள்ள சரித்திர காவிய திரைப்படம் பாஜிராவ் மஸ்தானி. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், திரைக்கு வந்துள்ள இந்தப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...பாஜிராவ் பலால் பட் எனும் ரன்வீர் சிங், போரில் பல வெற்றிகளை கண்டவர். அவரிடத்தில் மஸ்தானி எனும் தீபிகாவின் தந்தையும், அரசருமான சத்ரசால், முகலாயர்களிடமிருந்து தன் தாய்நாடான பண்டல்கண்ட்டை காப்பாற்றும்படி கேட்கிறார். மஸ்தானிக்காக, சத்ரசாலுக்கு உதவ முடிவு செய்கிறார் பாஜிராவ், கூடவே அவருடன் காதல்...

”இளையராஜாவின் இசையின் ரசிகன் நான்” - சொல்கிறார் ஜேம்ஸ் வசந்தன்

 கடந்த வியாழக்கிழமை அன்று, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது, தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர், சிம்பு மற்றும் அனிருத்தின் ’பீப் பாடல் வெளியானது குறித்து கேள்வி எழுப்பினார். இதில், எரிச்சலடைந்த இளையராஜா, ’எந்த நேரத்தில் வந்து என்ன கேள்வி எழுப்புகிறாய். உனக்கு அறிவு இருக்கிறதா?” என்று திட்டினார்.இதற்கு, இளையராஜாவிடம் இந்த மாதிரியான கேள்விகளை எழுப்பலாமா? என்று ஆதரவும், நிருபரை தாக்கியது தவறு என்று பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனமும் தெரிவித்தது.இந்நிலையில், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ”ஒளிந்து கொண்டிருந்த நிஜ சொரூபத்தை வெளிக்கொணர்ந்த அந்த இளம் பத்திரிகையாளனைப் பாராட்ட வேண்டும்” என்று ட்வீட் செய்தார்.இதற்கு,...

மூலிகைகளும், தீரும் நோய்களும்...!

நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே! அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும் ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம் ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம் நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம் முடக்கத்தான்...