
மாரி படத்தில் தனுஷ் அடிக்கடி சொல்லும் அந்த பஞ்ச் டயலாக், “செஞ்சுருவேன்”! கொடுமை என்னவென்றால், இந்த ‘செஞ்சுருவேன்’ டயலாக்கை சின்னக் குழந்தைகள் கூட அடிக்கடி உச்சரிப்பதுதான். நேற்று வசமாக சிக்கிய தனுஷிடம், பத்திரிகையாளர்கள் கேள்வி மேல் கேட்க, அவர்களுடன் படு கேஷுவலாக அரட்டை அடிக்க ஆரம்பித்துவிட்டார் தனுஷ்!
“சார்… ‘மாரி’ மாதிரியான படத்தை நான் இப்ப பண்ண மாட்டேன். நடுவில் விதவிதமான கேரக்டர்களில் நடிச்சுட்டு மறுபடியும் மாரி பார்ட் 2 எடுப்பேன். அப்ப நீங்க சொன்ன இந்த விஷயத்தை மனசுல வச்சுக்குறேன். சின்னக்குழந்தைகளைல்லாம் அந்த டயலாக்கை சொல்றாங்கன்னு நானும் கேள்விப்பட்டேன். நம்மள மாதிரி இருக்கிற சுமார் மூஞ்சி குமார்கள் ஏதாவது செஞ்சுதான் ரசிகர்களை கவர வேண்டியிருக்கு....