Monday, December 28, 2015

ஈட்டி, பூலோகம் -பாடுபட்டு உழைத்தால் வெற்றியைத் தருவோம்

2015 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான இரண்டு படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆச்சர்யத்தை அளித்துள்ளன. மைக்கேல் ராயபபன் தயாரிப்பில், ரவி அரசு இயக்கத்தில் அதர்வா நடித்த ஈட்டி, ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த பூலோகம் ஆகிய படங்கள்தான் அவை. இந்த இரண்டு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு... இரண்டுமே விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள். இவ்விரு படங்களின் வெற்றிக்கும், அப்படங்களின் கதை இன்னும் பிற அம்சங்கள் காரணமாக இருந்தாலும், ரசிகர்களை பளிச்சென ஈர்த்த விஷயம் ஒன்றும் உள்ளது.

அது... அதர்வா, ஜெயம்ரவி இருவரது கடுமையான உழைப்பு. எல்லாப் படங்களிலும் உழைப்பு உண்டு என்றாலும், விளையாட்டை மையப்படுத்திய ஈட்டி, பூலோகம் படங்களில் ஹீரோக்களின் உழைப்பு கண்முன் தெரிந்தது. அதை நடிப்பு என்று சொல்ல முடியாத அளவுக்கு அவர்கள் கடுமையாக உழைத்திருந்தது ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக ஈட்டி படத்தில் தேசிய போட்டிக்காக அதர்வா பயிற்சி பெறும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தன.

பூலோகம் படத்திலும் குத்துச்சண்டைபோட்டிக்காக ஜெயம்ரவி தயாராகும் காட்சியில் சிரத்தை எடுத்து உழைத்திருந்தார். இவ்வளவு பெரிய உழைப்பைக் கொடுத்த ஹீரோக்களுக்கு நாம் வெற்றியைக் கொடுப்போம் என்ற தார்மீக எண்ணத்திலேயே ஈட்டி பூலோகம் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கி இருக்கிறார்கள் மக்கள். இதன் மூலம் மக்கள் ஒரு உண்மையையும் புரிய வைத்துள்ளனர். பாடுபட்டு உழைத்தால் வெற்றியைத் தருவோம் என்பதே அது.

0 comments:

Post a Comment