
தென்னிந்தியத் திரையுலகில், ஏன் இந்தியத் திரையுலகிலேயே தங்களுடைய படைப்புகளால் உலகம் முழுவதும் உள்ள இந்தியத் திரைப்பட ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருபவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த ஷங்கர், இரண்டாமவர் தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். ராஜமௌலி.
ஷங்கர் தன்னுடைய முதல் படத்திலிருந்தே தனக்கென ஒரு தனி ஸ்டைலை பின்பற்றி வருகிறார். ராஜமௌலி, 'மகதீரா' படத்தை இயக்கிய பிறகு உச்சத்திற்குப் போனார். தற்போது 'பாகுபலி' படத்தின் வெற்றி மூலம் ஷங்கர் புரியாத ஒரு சாதனையையும் புரிந்துவிட்டார்.
இந்த இரண்டு ஜாம்பவான்களும் அடுத்தடுத்து தங்களது '2'ஆம் பாகத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியுள்ளார்கள். ஷங்கர்...