
செஞ்சோற்று கடனையாவது வடிச்சுக் கொட்டி கழிச்சுடலாம்! நான்தான் மார்க்கெட்டை தூக்கிவிட்டேன்னு சொல்ற கடன் இருக்கே? அதை எந்த ஹீரோவாலும் அடைக்க முடியாது. அப்படிதான் ஒரு பெரும் சுழலில் சிக்கியிருக்கிறார் சூர்யா. நந்தா வெளியாகிற வரைக்கும் சூர்யாவை ஒரு வெந்து முடியாத வெந்தயத் தோசை போலவே பாவித்து வந்தது திரையுலகம். அந்த பால் வடியுற முகத்துக்கு ஆக்ஷன் செட்டாவாதே என்று முடிவெடுத்த இயக்குனர்கள், அதற்கேற்ற ரோல்களையே கொடுத்து வந்தார்கள். நல்லவேளை… ராமராஜன் பால் கறந்த மாதிரி கேரக்டர்களில் அவர் நடிப்பதற்கு முன் பாலாவின் பார்வை பட்டது. நந்தா வந்தது.
கட்… அதற்கப்புறம் சூர்யாவே நினைத்தாலும், ஆக்ஷன் குறைவான வேடங்களில் நடிக்க முடியாதோ என்கிற அளவுக்கு அவரை தள்ளிக்...