தலைப்பை பார்த்தவுடன் நடிகை அமலாபால் அம்மாவாக போகிறார் என்று எண்ணிவிடாதீர்கள். ஒருபடத்தில் அவர் அம்மாவாக நடிக்க உள்ளார். நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலான பிறகு நடிக்க மாட்டார் என்றுதான் முதலில் கூறப்பட்டது. விஜய்யும் அதைத்தான் கூறிவந்தார். ஆனால் அமலாபால் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். முன்புபோல் இல்லாமல் அழுத்தமான கேரக்டர் உள்ள படங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். குழந்தைகள் படம் என்பதாலும், சூர்யா கேட்டுக் கொண்டதாலும் பசங்க 2 படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் சூர்யாவின் மனைவியாகவும், ஆசிரியையாகவும் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற டிசம்பர் 24ம் தேதி வெளிவருகிறது.இந்த நிலையில் அவர் இந்தி ரீமேக் படமொன்றில் நடிக்க இருக்கிறார். இந்தியில் வெளியாகி பல விருதுகளை வென்ற நில் பட்டே சனட்டா என்ற படம் தமிழில் ரீமேக்காக இருக்கிறது. இது அம்மாவுக்கும் மகளுக்குமான பாசப்போராட்டத்தை சொல்லும் படம். இதில் நடிகை அமலாபால், அம்மா கேரக்டரில் நடிக்கிறார், அவரது மகளாக புதுமுகம் ஒருவர் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்புகள் ஜனவரி முதல்வாரத்தில் துவங்க உள்ளது.
தொடர்ந்து நல்ல நல்ல கேரக்டரில், நடிப்பேன் என்று அமலாபால் கூறியது, இப்போது அவர் தொடர்ந்து நடித்து வரும் படங்களின் மூலம் நிரூபணமாகிறது.
10:51 PM
மகிழ்








