
கடந்த சில வருடங்களில் வெளியான படங்களில் சரிபாதி பேய்ப்படங்கள் என்று சொல்கிற அளவுக்கு ஏகப்பட்ட பேய்ப்படங்களை எடுத்துத்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
சூர்யா, நயன்தாரா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் கூட பேய்ப்படங்களில் நடித்தால் மினிமம் கியாரண்டி கிடைக்கும் என்ற நிலைக்குத்தள்ளப்பட்டனர்.
அதே நேரம் பல பேய்ப்படங்களை மக்கள் கண்டு கொள்ளவில்லை. எனவே ஒருஐ சில படங்கள் தவிர பல பேய்ப்படங்கள் தோல்வியடையத் தொடங்கின.
அதன் காரணமாக இனி பேய்ப்படங்களின் வரத்து குறைந்துவிடும் என்று எதிர்பார்த்த நேரத்தில்…
ஜனவரி 1 ஆம் தேதி அன்று பேய்கள் ஜாக்கிரதை என்ற படம் வெளிவரவிருக்கிறது.
இந்தப் படத்தை எஸ்கேப் மதன் வெளியிடுகிறார்.
ஜனவரி 29 அன்று சுந்தர்.சி இயக்கிய அரண்மணை-2 படம் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தை தேனாண்டாள் பிக்சர்ஸ் முரளி வெளியிடுகிறார்.
இவை தவிர சுந்தர் சி தயாரிப்பில் ஹலோ நான் பேய் பேசுறேன் என்ற படமும் வெளிவரத் தயாராகவிருக்கிறது.
இவற்றில் ஏதாவது ஒரு படம் வெற்றியடைந்தால் போதும்…
அடுத்த ஆண்டும் தமிழ்சினிமாவில் ஆவிகள் நடமாட்டம் அதிகரித்துவிட வாய்ப்பிருக்கிறது!
0 comments:
Post a Comment