நாம் சாப்பிடும் மூன்று வேளை உணவுகளையும் ஆரோக்கியம் உள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.எந்த நேரத்தில் எவ்வகை உணவுகள் சாப்பிடலாம் என்பதை தெரிவு செய்து சாப்பிட வேண்டுமே தவிர, அதனை விட்டுவிட்டு இஷ்டத்திற்கு ஏதேனும் உணவுகளை எடுத்துக்கொண்டு உடல்நல உபாதைகளுக்கு ஆளாகக்கூடாது.குறிப்பாக இரவு உணவில் கவனம் செலுத்தாவிட்டால் செரிமானப்பிரச்சனைக்கு ஆளாகி இரவு தூக்கத்தை தொலைக்க நேரிடும்.சாப்பிட வேண்டிய உணவுகள்காலையில் எல்லா சத்துக்களும் நிரம்பிய தானியங்கள், பழங்கள், காய்கறிகள் கலந்த உணவை சாப்பிட வேண்டும்.மதியம் நிறைய காய்கறிகள் கொஞ்சம் சோறு, இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, எளிதான உணவை மிகக் குறைவாக சாப்பிட வேண்டும்.மாறாக நாம் காலையில் சாப்பிடாமல், ஒரு நாளை ஆரம்பிக்கிறோம். இரவில் கொழுப்புச்சத்து நிரம்பிய வறுத்த, பொரித்த உணவுகளை அதிக அளவில் உண்டு விடுகிறோம்.பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், பரோட்டா தான் இன்றைக்கு பெரும்பாலானோரின்...
Wednesday, December 2, 2015
இளையராஜாவின் மலரும் நினைவுகள் - ஜனனி ஜனனி பாடல் எப்படி உருவானது?

இளையராஜாவின் ஒவ்வொரு பாடல்களுக்குப் பின்னும் அது உருவான வரலாறு உள்ளது.இளையராஜா என்ற இசை ஆளுமையின் திறமையை, ஞானத்தை வெளிப்படுத்தும் சரித்திரங்கள் அவை. அவ்வப்போது ஊடகங்களில் தனது பாடல்கள் உருவானது பற்றி இளையராஜா பேசியிருக்கிறார்.இளையராஜாவின் முக்கியப் பாடல்களில் ஒன்றான, ஜனனி ஜனனி பாடல் எப்படி உருவானது? அதனை இளையராஜாவே பாடும்படியான சூழல் எப்படி அமைந்தது? இளையராஜாவின் வார்த்தைகளில் கேட்போம்.டைரக்டர் கே.ஷங்கர் என்னிடம் 'தாய் மூகாம்பிகை' படத்திற்கென ஒரு சிச்சுவேஷன் சொல்லியிருந்தார். அந்த சமயங்களில் இரவு இரண்டு மணிவரை எனக்கு கம்போஸிங் இருக்கும்.
மீண்டும் காலையில் ரெக்கார்டிங் இருக்கும். இவர்களுக்கு கம்போஸிங்கிற்காக எனக்கு நேரம்...
வெள்ளப்பாதிப்பால் தமிழக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு இலவச தொலைப்பேசி சேவை
வெள்ளப்பாதிப்பை அடுத்து தமிழக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இலவசமாக இன்று முதல் ஒருவராத்திற்கு தொலைப்பேசி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய தொலைத்தொடர்புதுறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.சென்னையில் வரலாறு காணாத கனமழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். செம்பரப்பாக்கம், புழல், பூண்டி, மதுராந்தகம் ஏரிகளில் இருந்து தொடர்ந்து பல ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சென்னையில் கனமழையினால் தற்போது போக்குவரத்து, ரயில் சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் கட்டணம் கட்டவில்லை என்பதால் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருக்குகம் தற்போது கனமழையின் காரணமாக தொடர்பு துண்டிக்கப்படாது என்றும் தமிழகத்தில் வெள்ளப்பாதிப்பை...
சென்னை வாசிகளுக்கு இலவச டாக்டைம், ஏர்டெல் அறிவிப்பு..!!

சென்னையில் பெய்து வரும் கனமழையில் மக்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் ஏர்டெல் நிறுவனம் விசேஷ சலுகைகளை அறிவித்துள்ளது. அதன் படி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.30 வரை டாக்டைம் வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.மேலும் மழையின் காரணமாக தற்காலிகமாக தடைப்பட்டிருக்கும் ஏர்டெல் சேவைகளை சரி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதோடு இடைவிடாத மழை மற்றும் வெள்ளம் சேர்ந்து சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கியிருப்பதால், ஏர்டெல் வாடிக்கையாளர்களின் நலன் கருதி இச்சலுகை அறிவிக்கப்பட்டிருப்பதாக ஏர்டெல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.30 டாக்டைம் வரை பெற...
வெள்ளத்தில் மூழ்கிய சாமி சிலை தலை மீது ஏறி தப்பிய பாம்பு.. வைரலாகும் போட்டோ

மழையால் கோயிலில் வெள்ளம் புகுந்த நிலையில் சாமி சிலை தலைமீது பாம்பு ஏறி உட்கார்ந்து தன்னை காத்துக்கொண்டதாக எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக பரவிவருகிறது.சென்னையடுத்த மகாபலிபுரம் பகுதியில் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. கடந்த இரு நாட்களாக பெய்துவரும் கனமழையால், கோயிலுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு வெளியில் நின்ற சாமி சிலையின் கழுத்து அளவுக்கு நீர் ஓடிக்கொண்டுள்ளது.இந்நிலையில், சாமி சிலை தலை மீது பாம்பு ஒன்று ஏறி உட்கார்ந்தபடி வெள்ளத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொண்டுள்ளது. இந்த படம், வாசுதேவன் என்பவரால் எடுக்கப்பட்டு, டிவிட்டரில் பதியப்பட்டு, தற்போது வைரலாக பரவி வருகிறது.பாம்பு தன்னை காத்துக்கொள்ளும்போது, மனிதர்களாக நாம் நம்மை காப்பாற்ற...
மழை எச்சரிக்கை..!! ரமணன் ரகசியம் இது தானா..??

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்து நகரமே நீரில் தத்தளிக்கின்றது. மழை பாதிப்பில் தவிக்கும் மக்கள் ஒரு பக்கம், பள்ளி, கல்லூரி விடுமுறைகளை கொண்டாடும் மாணவர்கள் ஒரு பக்கம் என அனைவரும் தற்சமயம் ஆவலோடு காத்திருந்து, அவ்வப்போது பார்ப்பது செய்திகளை தான்.இது வரை செய்திகளை பார்க்காதவரையும் கூட இந்த மழை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்க வைத்திருக்கின்றது. ஊர் முழுக்க பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் மழை சார்ந்த அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திகளின் வாயிலாக மக்களுக்கு அடிக்கடி அறிவித்து வருகின்றது.
வானிலை நிலவரங்கள் சார்ந்த அறிவிப்புகளை அறிவிக்கும் ரமணன் பள்ளி குழநை்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் தெய்மாக பார்க்கப்படுகின்றார்...
10 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கமல்-இளையராஜா
கமல் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தொடங்கி தயாரித்த ராஜபார்வை படத்திலிருந்து, 2005-ம் ஆண்டு அவர் தயாரித்து நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் வரை அனைத்துப் படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைத்துள்ளார்.
அதன் பிறகு உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம், விஸ்வரூபம் 2 நான்கு படங்களுக்கும் ஜிப்ரான்தான் இசை அமைத்தார்.
தற்போது கமல் அடுத்து தயாரித்து நடிக்கும் புதிய படமான அப்பா அம்மா விளையாட்டு படத்திற்காக மீண்டும் இளையராஜா இசையமைக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ள...
மறக்க முடியுமா - முதல்வன் உருவான கதை

அறுபது வயது முதியவரிடம் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அறுபது வருட அனுபவம் உள்ளவரிடம் பேசுகிறோம் என பொருள். வாழ்ந்து கிடைக்கிற அனுபவங்களைவிட, இப்படியான அனுபவசாலிகளிடம் பேசி, அவர்களின் அனுவங்களை பெறுவது என்பது ஒரு கலை. ஒருவரது அறுபது வருட அனுபவத்தை அரைமணி நேர பேச்சில் அள்ளிக் கொள்ளலாம்.
திரையுலகில் இப்படியான அனுபவங்கள் பெருமளவில் கை கொடுக்கும். திரைப்படம் சார்ந்த சில பழைய நினைவுகள் இன்று புதிதாக வரும் இளைஞர்களுக்கு தெரியாதவை, ஆனால், அவர்களுக்கு உத்வேகம் தரக்கூடியவை.
இயக்குனர்கள் இன்று கதைக்காக முட்டி மோதுகிறார்கள். கதைக்கா எங்கும் ஓட வேண்டியதில்லை. நம்மைச் சுற்றி கதைகள்...
லை-பை இணையப் பயன்பாடு அறிமுகமாகிறது

அதி விரைவான இணைய பயன்பாடு அனுபவத்தை வழங்கும் லைஃபை (Li Fi) தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கண்ணுக்கு புலப்படும் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தி, இணையத்தை பயன்படுத்துவதற்கான ஒரு புதிய தொழில் நுட்பமே லைஃபை என அழைக்கப்படுகிறது.இது வைஃபை ஐ (Wi-Fi) விட 100 மடங்கு வேகமாக செயற்படக் கூடியது . வைஃபையில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைவரிசைகளை விடவும், லைஃபை 10 000 மடங்குகள் பெரியதாகும்.லைஃபை இணைய வசதியைப் பெறுவதற்கு சாதாரண LED மின்குமிழ், இணைய இணைப்பு, மற்றும் போட்டோ டிரக்டர் ஆகியன போதுமானவை.வினாடி ஒன்றுக்கு 1 Gb (கிகாபைட்) வரையான வேகத்தில் இணைய பயன்பாட்டைப் பெற லைஃபை தொழில்நுட்பம் வகை செய்கிறது.ஓளிக்கற்றை வாயிலான இந்த லைஃபை இணையப் பாவனை தொழில்நுட்பம்....
காமன்வெல்த் வீரர்களுடன் மோதிய அதர்வா..!

அதர்வா நடிக்கும் ‘ஈட்டி’ படத்தை ரவி அரசு என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் தடை ஓட்ட பந்தய வீரராக நடித்திருக்கிறார்.முறையான பயிற்சி இல்லாமல் தடை ஓட்ட பந்தய வீரராக நடிக்க முடியாது என்பதற்காக அதர்வா, இப்படத்தில் நடிப்பதற்கு முன் சுமார் மூன்று மாதங்கள் நாகராஜ் என்பவரிடம் பயிற்சி எடுத்து கொண்டிருக்கிறார். நாகராஜ் காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்ட இந்திய தடை ஓட்டப் பந்தய வீரர்களுக்கு பயிற்சி அளித்தவராம். இப்படத்தில் இறுதி காட்சியில் நடைபெறும் தடை ஓட்ட போட்டியை பெங்களூரில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ரவி அரசு.இந்த போட்டியில் அதர்வாவுடன் ஓடிய சக வீரர்களாக காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்ட நிஜ வீரர்களையே நடிக்க வைத்துள்ளனர். இந்த காட்சி...
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன்
உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ரெயிலில் பயணம் செய்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கி சோதித்து கையெழுத்து போட்டார். ஐன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டு பைக்குள் கையை விட்டார். டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் அவரை உற்று பார்த்தார். அவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். “பரவாயில்லை…ஐயா, டிக்கெட்டைத் தேட வேண்டாம்”என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்தார்.அபொழுதும் தனது சூட்கேசைத் திறந்து ஐன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறி...
எந்திரன்-2 அறிவிப்பு எப்போது, பட்ஜெட் எவ்வளவு? வெளிவந்த தகவல்

கபாலி படத்தை ரஜினி ஒப்புக் கொள்வதற்கு முன்பிருந்தே பேசப்பட்டு வரும் விஷயம், ஷங்கர் இயக்கத்தில் அவர் எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார் என்பது.ஆனால் எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர். காரணம், அதற்குள் கபாலி படம் தொடங்கிவிட்டார் ரஜினி. இந்தப் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியாகும் போது எந்திரன் 2 ஐ அறிவிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.ஆனால் ரசிகர்கள் காத்திருப்பதாக இல்லை. இந்தப் படம் குறித்து மீடியாவில் வெளியாகும் செய்திகளைப் பகிர்ந்து மகிழ்ந்து வந்தனர். ஒருமுறை ஷங்கரே, 'அவசரப்பட வேண்டாம். நாங்களே அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்' என்று மீடியாவுக்கும் ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.இந்த நிலையில், எந்திரன் 2-ன் மேக்கப்...
டெங்குவை விரட்டும் தற்காப்பு முறைகள்

மழைநீர் தேங்கி அதிக தொற்று நோய்களை ஏற்படுத்தும். டெங்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தைத்தான் முதலில் தள்ளிவைக்க வேண்டும்.நாம் வீட்டைச் சுற்றி மழை நீர் தேங்க விடாமல் பார்த்துக்கொள்வது, கொசுக்களை ஒழிக்கத் துளசி, நொச்சிச் செடிகளை வளர்ப்பது, மழைக் காலங்களில் காய்ச்சிய குடிநீரைப் பயன்படுத்துவது, சுகாதாரமற்ற உணவு உண்பதைத் தவிர்ப்பது போன்ற செயல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.டெங்குடெங்கு ஒன்றும் தீர்க்க முடியாத நோயல்ல. நோய் வராமல் தடுக்கும் தற்காப்பு முறைகளாக, நிலவேம்புக் குடிநீர் குடித்துவரலாம். இதனுடன் பப்பாளி இலை சாறு, மலைவேம்பு சாறும் பருகலாம்.நிலவேம்புநிலவேம்பு குடிநீரை 30-50 மி.லி.., குடிக்க வேண்டும். கசப்பு சுவையைக் குறைக்கச்...
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்காக படம் பார்ப்பது மிகவும் அரிது. அதை முறியடித்த சில நடிகைகளில் அனுஷ்காவும் ஒருவர். சோலோ ஹீரோயினாக அருந்ததி, பஞ்சமுகி, ருத்ரமாதேவி என ஹாட்ரிக் ஹிட் அடித்து அடுத்து இஞ்சி இடுப்பழியாக களம் இறங்கியுள்ளார்.கமல்ஹாசன், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் தான் படத்திற்காக உடலை ஏற்றி, இறக்கி நடிப்பார்கள். அவர்களுக்கே சவால் விடும் வகையில் அனுஷ்கா இப்படத்திற்காக 25 கிலோவிற்கு மேல் ஏற்றியுள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கில் சுமார் 1500 திரையரங்குகளில் வெளிவந்துள்ளது.கதை :தான் எப்படி இருக்கிறாரோ அதுவே சந்தோஷம் என வாழ்ந்து வரும் ஸ்வீடி அனுஷ்காவிற்க்கு ஆர்யாவுடன் ஒருதலை காதல் தோல்வியினால் மனமுடைந்து தன்...