Monday, December 28, 2015

வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் தஞ்சமடைந்த டி.ராஜேந்தர் - என்ன கொடுமை சார்..?

பெண்களை அவமதிக்கும் வகையில் நடிகர் சிம்பு எழுதி, பாடிய பீப் சாங் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது மகளிர் அமைப்புக்கள் சார்பில் கோவை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதே விவகாரம் தொடர்பாக சென்னையில் சிம்பு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை போலீசார் அனுப்பிய சம்மன் தொடர்பாக நேரில் ஆஜராக ஒருமாதம் அவகாசம் கேட்கப்பட்டுள்ள நிலையில், சிம்புவை கைது செய்ய தடையில்லை என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

பீப் சாங் விவகாரத்தில் இருந்து சிம்புவை விடுவிக்க வேண்டும் என சிம்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜனவரி 5ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையில் சிம்புவை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது. பீப் சாங் விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து எழுந்துள்ள பிரச்னைகளில் இருந்து சிம்பு விடுபடுவதற்காக அவரது தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் இன்று காலை 10 மணியளவில் சிறப்பு யாகமும், சிறப்பு பூஜையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளார். சிக்கலான வழக்குகளில் இருந்து விடுபடுவதற்கு பரிகாரம் செய்வதற்கு புகழ்பெற்றது இந்த வழக்கறுத்தீஸ்வரர் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment