
பாலா படங்களின் ஹீரோக்களுக்கென்று தனி அடையாளம் உண்டு. அழுக்கு உடை, கரைபடிந்த பற்கள், நீண்ட தலைமுடி, ஆக்ரோஷமான கோபம். இதுதான் பாலா பட ஹீரோக்களின் தோற்றம். பாலாவின் ஹீரோ பாத்திர படைப்புகள் யதார்தத்திலிருந்து விலகி நிற்பவை என்ற விமர்சனம் உண்டு.
சேது படத்தில் தலையில் அடிபட்டு மனநோயால் பாதிக்கப்பட்ட ஹீரோவாக விக்ரம் நடித்தார், அதன் பிறகு பிதாமகன் படத்திலும் அழுக்கு உடை கறைபடிந்த பற்களுடன் வெட்டியானாக நடித்தார். நந்தா படத்தில் சூர்யா பூனைக்கண் குட்டை தலைமுடியென தாதாவாக நடித்தார். நான் கடவுள் படத்தில் ஆர்யா நீண்ட சடாமுடி, கஞ்சா புகைக்கும் வாய், அழுக்குப்படிந்த முகம் என அகோரியாக நடித்தார். பரதேசி படத்தில் அதர்வா இதுவரை யாரும் வைத்திராத சிகை...