
ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்களும் காரணமா இல்லையா என்பது குறித்த பேச்சு பல காலமாக இருந்து வருகிறது. ஒரு படத்தின் வெற்றிக்கு அந்தப் பாடல்கள் நல்ல ஒரு ‘விசிட்டிங் கார்டு’ ஆக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இசையமைப்பாளர்களின் பின்னணி இசை அவர்களின் திறமைக்கு மணிமகுடமாக விளங்குகிறது.இன்றைய யு டியூப், சமூக வலைத்தள காலத்தில் ஒரு படத்தின் பாடல்கள் எளிதில் ரசிகர்களிடையே பரவி விடுகின்றன. நல்ல பாடல்களை அவர்கள் வரவேற்கவும் தயங்கியதில்லை, மோசமான பாடல்களை எதிர்க்கவும் அவர்கள் தயங்கியதில்லை.மொபைல் போன்கள் வரை பாடல்களின் பயன்பாடு அதிகமாகி விட்ட இந்தக் காலத்தில் நல்ல ‘ஹிட்’ ஆன பாடல்களைக் கொடுக்கும் இசையமைப்பாளர்கள் மட்டுமே...