
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிறர் அளிக்கும் நிவாரணப் பொருட்களில் அம்மா ஸ்டிக்கரை ஒட்டும் அதிமுகவினரை மக்கள் சமூக வலைதளங்களில் காரித் துப்பி வருகிறார்கள்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து லாரி, லாரியாக நிவாரணப் பொருட்கள் வந்து கொண்டிருக்கிறது. நிவாரணப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை அதிமுகவினர் தடுத்து நிறுத்தி மிரட்டி பொருட்கள் உள்ள பைகளில் அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டி அனுப்புகிறார்கள்.அதிமுகவினரின் அடாவடி தாங்க முடியாமல் நிவாரணப் பொருட்களை கொண்டு வருவோரும் ஸ்டிக்கர் ஒட்ட சம்மதிக்கிறார்கள். இந்நிலையில் நிவாரண பணியை மேற்கொள்ளாமல் நல்ல மனதோடு உதவுவோருக்கு...