
சூர்யா குடும்பம், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நிதி கொடுத்தார்கள். அப்போது நடிகர் ரஜினியும் தன் பங்காக பத்துஇலட்சம் ரூபாயைக் கொடுத்தார். அதன்பின் அவர் கோவாவில் நடக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார்.
ரஜினிகாந்த் இன்னும் சென்னைக்கு வரவில்லை. அதற்குள் அவர் வெள்ளநிவாரணநிதியாக பத்துகோடி கொடுத்தார் என்கிற செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக ரஜினி தரப்பில் கேட்டபோது, அந்தச் செய்தி உண்மையில்லை என்று சொல்கிறார்கள். ரஜினி கோவாவில் இருந்துவந்ததும் அடுத்தகட்டம் பற்றி முடிவுசெய்வார் என்றும் சொல்கிறார்கள்.
0 comments:
Post a Comment