
பீப் பாடலுக்காக செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டு, போலீசாரிடமிருந்து தப்பிக்க எனக்கும் அந்தப் பாட்டுக்கும் சம்பந்தமில்லை என்று பொய் சொல்லிக் கொண்டுள்ள அனிருத்துக்கு, இந்த மாதிரி சர்ச்சைகள் புதிதல்ல.ஏற்கெனவே இருமுறை ஆபாச சர்ச்சைகளில் சிக்கி மன்னிப்புக் கோரியவர் இந்த அனிருத்.ரஜினியின் நெருங்கிய உறவினர் என்பதால் அனிருத்து சினிமா உலகில் ஸ்பெஷல் மரியாதை. பெரிய வாய்ப்புகள். அவரை திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர்கள் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் மருமகன் தனுஷும்தான். இன்று வரை தனுஷின் படங்களுக்கு அனிருத்தான் ஆஸ்தான இசையமைப்பாளர்.அனிருத்தை தன் தம்பி என்று கொண்டாடி வருகிறார் தனுஷ்.ஆனால் அந்த அனிருத் செய்யும் வேலைகள் பெரும்பாலும் சில்லியானவை. பரபரப்பான இசையமைப்பாளராக...