Thursday, December 3, 2015

உப்பு நிறைந்த உணவுகள் எப்படி உங்கள் குழந்தையைப் பாதிக்கிறது என்று தெரியுமா?

இன்றைய தலைமுறைக் குழந்தைகள் அதிக அளவில் உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அப்படியானால் குழந்தைப் பருவத்திலேயே சோடியம் உடலில் அதிகமாகிறது என்று பொருள். இது மிகவும் ஆபத்தான மற்றும் கவலை தரக்கூடிய விஷயம். ஏனென்றால் உப்பினால் உடல் நலனுக்கு விளையும் கேடுகளை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

இன்றைய குழந்தைகள் பாப்கார்ன், நொறுக்குத்தீனிகள், சிப்ஸ் போன்ற பல உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணுகிறார்கள். இவை பொதுவாக பெற்றோர்களுக்கு சாதாரணமாக தோன்றினாலும் அவர்கள் வளர வளர இது போன்ற உணவுகளுக்கு அடிமையாகி இது ஒரு பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளது.

உப்பின் மூலம் விளையும் பாதிப்புகள் உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றையும் தாண்டி பல உடல் நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும். அதனால் தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் இளம் பருவத்தில் உப்பைக் குறைத்து அல்லது உப்பற்ற உணவுகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகள் உப்புச் சுவைக்கு ஈர்க்கப்பட்டு அதற்கு வாடிக்கையை வளர்த்துக் கொள்வதை தவிர்க்க முடியும்.

நல்ல பழக்கங்களோ அல்லது தீய பழக்கங்களோ சிறுவயதில் இருந்து தான் தொடங்குகின்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். இதனை நாம் குழந்தைப் பருவத்தில் செய்யத் தவறினால் பிற்காலத்தில் வருந்த நேரிடும்.

சென்னையில் ஃபேஸ்புக் சேஃப்டி செக் அம்சம் அறிமுகம்..!

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் சேஃப்டி செக் எனும் பாதுகாப்பு உறுதி செய்யும் தகவல் அனுப்பும் சேவையை சென்னைவாசிகளுக்கு செயல்படுத்தியுள்ளது. இன்று காலை செயல்படுத்தப்பட்ட இந்த சேவை மூலம் ஃபேஸ்புக் வாசிகள் தாங்கள பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதோடு அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பாதுகாப்பு குறித்த தகவல்களையும் அறிய முடியும்.

ஃபேஸ்புக் சேஃப்டி செக் அம்சமானது பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தும் தகவல்களை அனுப்பி வருகின்றது. இந்த தகவல் கிடைத்ததும் "Yes, let my friends know" என்ற பட்டனை க்ளிக் செய்தால் குறிப்பிட்ட பயனாளி பாதுகாப்பாக இருப்பதை ஃபேஸ்புக் அவர்களது நண்பர்களுக்கு தெரியப்படுத்தும்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னையில் ஃபேஸ்புக் தளத்தின் இந்த அம்சம் பெரும்பாலானோருக்கு உதவியாக இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

பகல் கொள்ளை அடிப்பவர்களுக்கு நடுவே இப்படியும் ஒரு பஸ் டிராவல்ஸ்: சல்யூட் அடிக்கலாமே!

வெள்ளத்தை காரணமாக வைத்து பகல் கொள்ளை அடிக்கும் நபர்களுக்கு மத்தியில் ரதி மீனா டிராவல்ஸ் தனது இரக்கத்தால் மக்கள் மனதில் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது.

நேற்று முன்தினம் சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டி வெள்ளக்காடானது. இதனால் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் ரத்து செய்யப்பட்டு கோயம்பேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டன.

பேருந்துகள் திடீர் என்று ரத்து செய்யப்பட்டதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரம் செல்லவிருந்த 25 பயணிகள் குழந்தைகளுடன் செய்வது அறியாது தவித்தனர். அவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள ரதிமீனா டிராவல்ஸை அணுகி சிதம்பரத்திற்கு ஒரு பேருந்தை இயக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் பரிதாப நிலையை பார்த்த அலுவலக அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் பேசி பேருந்தை இயக்க அனுமதி பெற்றனர்.


இதையடுத்து மாலை 4 மணிக்கு 25 பேருடன் ரதி மீனா பேருந்து சிதம்பரத்திற்கு கிளம்பியது. மகாபலிபுரம் சாலை வெள்ளக்காடானதால் பேருந்துகள் எல்லாம் திண்டிவனம் - செங்கல்பட்டு சாலைக்கு திருப்பிவிடப்பட்டது. இதனால் ரதி மீனா பேருந்து செங்கல்பட்டு சென்று அங்கிருந்து திண்டிவனத்தை அடைய இரவு 10 மணி ஆனது.

வெள்ளத்தை பார்த்து பயத்தில் இருந்த பயணிகளை பேருந்து ஓட்டுநர்கள், கிளீனர்கள் தேற்றியதோடு மட்டும் அல்லாமல் குழந்தைகளுக்கு பால், பிஸ்கெட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்களை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

மேலும் பயணிகளை உணவகத்திற்கு அழைத்துச் சென்று நிறுவன செலவில் உணவு வாங்கிக் கொடுத்துள்ளனர். உணவுக்கு பிறகு கிளம்பிய பேருந்து புதுச்சேரி, கடலூர் வழியாக சென்று இரவு 1 மணிக்கு சிதம்பரத்தை அடைந்துள்ளது.

வெள்ளத்தை காரணம் காட்டி ஆம்னி பேருந்துகள் பகல் கொள்ளை அடிக்கையில் ரதி மீனா டிராவல்ஸ் சென்னையில் இருந்து சிதம்பரம் செல்லும் கட்டணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு பயணிகளுக்கு உணவும், தைரியமும் கொடுத்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளது பாராட்டுக்குரியது.

சென்னையில் வெள்ளம் சூழ்ந்த சாலைகளை காட்டும் 'லைவ் மேப்' வசதி!

சென்னையில் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தண்ணீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகள் தனித்தனி தீவுகளாக மாறிவிட்டன. வீட்டில் சிக்கியவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கூட வெளியேற முடியாத அவல நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில், மீட்புப் பணிகளில் முப்படைகளும் களமிறக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தாண்டி தன்னார்வம் கொண்ட இளைஞர்களும் மீட்புப் பணிகளில் இறங்கியிருக்கின்றனர். ஒட்டுமொத்த தமிழகமும் தற்போது சென்னை மற்றும் கடலூர் பகுதிகளில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களையும், உதவிகளையும் அவசர கதியில் துவங்கியுள்ளன.

Chennai Live Map இந்தநிலையில், சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட சாலைகள் குறித்த தகவல்களை 'லைவ் மேப்' எனப்படும் நிகழ்நேர வரைபடம் உதவியுடன் அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதில், வெள்ளம் பாதித்த சாலைகள் குறித்த சாலைகள பதிவு செய்யவும், அவற்றை அறிந்து கொண்டு தவிர்ப்பதற்குமான வசதியாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

உறவினர்களையும், நண்பர்களையும் தெரிந்து கொள்ள அல்லது அழைத்து வரச் செல்வோர்க்கு இது உதவிகரமாக இருக்கும் என்று நம்பலாம்.

லைவ் மேப்பை காண இங்கே க்ளிக் செய்க.