பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் சேஃப்டி செக் எனும் பாதுகாப்பு உறுதி செய்யும் தகவல் அனுப்பும் சேவையை சென்னைவாசிகளுக்கு செயல்படுத்தியுள்ளது. இன்று காலை செயல்படுத்தப்பட்ட இந்த சேவை மூலம் ஃபேஸ்புக் வாசிகள் தாங்கள பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதோடு அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பாதுகாப்பு குறித்த தகவல்களையும் அறிய முடியும்.ஃபேஸ்புக் சேஃப்டி செக் அம்சமானது பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தும் தகவல்களை அனுப்பி வருகின்றது. இந்த தகவல் கிடைத்ததும் "Yes, let my friends know" என்ற பட்டனை க்ளிக் செய்தால் குறிப்பிட்ட பயனாளி பாதுகாப்பாக இருப்பதை ஃபேஸ்புக் அவர்களது நண்பர்களுக்கு தெரியப்படுத்தும்.
வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னையில் ஃபேஸ்புக் தளத்தின் இந்த அம்சம் பெரும்பாலானோருக்கு உதவியாக இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
11:25 PM
மகிழ்
Posted in:
0 comments:
Post a Comment