Thursday, December 31, 2015

மாபெரும் தோல்விகளுக்குப் பிறகும் எழுந்து நிற்கும் சூர்யா

தமிழின் முன்னணிநாயகர்களில் ஒருவரான சூர்யாவுக்கு 2015 ஆம் ஆண்டு கலவையான ஆண்டாக அமைந்திருக்கிறது. நடிகராக அவருக்கு இந்தஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்த மாசுஎன்கிறமாசிலாமணி (மே 29, 2015) படம் மட்டும்தான் வெளியானது.

அந்தப்படத்தில் அவருக்கு இரட்டைவேடம், அவற்றில் ஒன்று ஆவி என்று சமகாலத்திற்கேற்ற கதையாக அமைந்தும் அந்தப்படம் எதிர்பார்த்தபடி போகவில்லை. சிலபடங்கள் நல்லவிமர்சனங்களைப் பெறும், வசூலில் குறைவாக இருக்கும். இந்தப்படம் விமர்சனரீதியாகவும் சரியாக இல்லை. இதற்கு முந்தைய படமான 2014 இல் வெளியான அஞ்சான் (ஆகஸ்ட் 15, 2014) படமும் அவருக்குக் கைகொடுக்கவில்லை.

இப்படி தொடர்ந்து இரண்டுபடங்கள் பெரிதாகப் போகவில்லை என்பது ஒரு நாயகனாக சூர்யாவுக்கு இது வருத்தத்தைத் கொடுத்திருக்கும் என்பதில் மாற்றமில்லை. அதுவும் அவை இரண்டும் மிகப்பெரிய செலவில் எடுக்கப்பட்ட படங்கள் என்பதால் பொருள் இழப்பும் பெரிதாக இருந்திருக்கும். ஆனால் இவ்விரு பெரியதோல்விகளையும் அவரும் மறந்து மக்களும் மறக்கிற வகையில் தயாரிப்பாளராக 2015 இல் பெரியவெற்றியையும் மிகுந்த மரியாதையையும் பெற்றிருக்கிறார் என்று சொல்லலாம்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜோதிகா திரும்பவும் நடித்த 36 வயதினிலே மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க2 ஆகிய இரண்டுபடங்களையும் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. இவ்விரு படங்களுமே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் வெற்றி பெற்றன என்கிறார்கள். குடும்பத்துப்பெண்களின் உணர்வுகளையும் அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் ஊக்கத்தையும் கொடுத்தவகையில் 36 வயதினிலே படமும், கல்விமுறையை விமர்சனம் செய்வதோடு நகரமக்களின் வாழ்க்கைமுறையையும் விமர்சனம் செய்த படமாக அமைந்தது.

திரைப்படக்கலையை வியாபாரமாக மட்டும் பார்க்காமல் அதன்மூலம் நம்மாலியன்ற நல்லகருத்துகளைச் சொல்லவேண்டும் என்கிற எண்ணத்தினால் சூர்யா மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார். அதேசமயம் அவர் கதாநாயகனாக நடிக்கும் படங்களிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால் நல்லது என்கிறார்கள். 

0 comments:

Post a Comment