Thursday, December 31, 2015

நாய்க்கு எப்படி பேண்ட் போடணும்.... நெட்டைக் கலக்கும் ஒரு 'அடடே.. அயயே' விவாதம்!

நாய்க்கு எப்படி பேண்ட் போட வேண்டும் என்பது தான் தற்போது இணையத்தில் 'பயங்கர' பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் கருத்து என்றால் நம்புவீர்களா..? நீங்கள் நம்பாவிட்டாலும் அது தாங்க உண்மை... பேசாம நம்பிருங்க.

ரோம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் எனச் சொல்வதுண்டு. அதுபோல், நாட்டில் எத்தனையோ விஷயங்கள் இருக்கும் போது, சமயங்களில் அவற்றில் இருந்து விலகி நெட்டிசன்கள் வித்தியாசமாக எதையாவது பேசி, வாதம் (சில நேரங்களில் வதம்) செய்து கொண்டிருப்பார்கள்.

இப்போதும் அப்படித்தான், நான்கு கால்களைக் கொண்ட நாய்க்கு எப்படி பேண்ட் போட்டு விடுவது என்பது அவர்களது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

செல்லப்பிராணி...

நான்கு கால் உயிரினமான நாய், பல வீடுகளில் செல்லப்பிராணிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறது. மனிதர்களை விட நாய்க்கு பலர் முக்கியத்துவம் அளிப்பதும் உண்டு.

ஆடை அணிவித்து...

செல்லப் பிராணிகள் மீது கொண்ட அளவில்லாத பாசத்தால் அதற்கு உடை போட்டுப் பார்த்து அழகு பார்ப்பவர்களும் உண்டு. அவர்களுக்குத் தான் தற்போது இந்த முக்கியமான சந்தேகம் வந்துள்ளது.

நாலு காலுக்கும்...

அதாகப் பட்டது, நாய் நான்கு கால் உயிரினம் தான். எனவே, அதன் நான்கு கால்களுக்கும் சேர்த்து பேண்ட் அணிவிக்க வேண்டும் என்கிறது ஒரு குரூப்.

2 காலுக்குப் போதும்...

ஆனால், நான்கு கால் உயிரினமாக இருந்தாலும் நாய் மனிதர்களைப் போலவே பின்னங்கால்களால் நேராக நடக்கும் திறமை கொண்டது. எனவே அதன் பின்னங்கால்களுக்கு மட்டும் பேண்ட் போட்டால் போதும் என்கிறது மற்றொரு குரூப்.

புதிய போட்டோக்கள்...

இப்படியாக அனல் பறக்கும் விவாதம் ஒன்று இணையத்தில் நடந்து வருகிறது. நாயை செல்லப்பிராணியாக வளர்த்து வருபவர்கள் சிலர் தங்கள் நாய்க்கு ஆடை அணிவித்த புகைப்படங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இப்படிப் போட்டா...

அதில் ஒருவர் கமெண்ட் பகுதியில் மனிதனுக்கு பேண்ட் எப்படிப் போடுவீங்க. அதுபோலத்தான் நாய்க்கும் என்று படத்தோடு போட்டு கலகலப்பைக் கூட்டியுள்ளார்.

அடிக்கடி ஆய் போனா..

இன்னொருவர் உங்க நாய் அடிக்கடி ஆய் போவதாக இருந்தால் இப்படிப் போட்டா பெஸ்ட் என்று பேன்ட்டை சற்று பின்னால் இறக்கியபடி படம் போட்டு காட்டி பயமுறுத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment