Thursday, December 3, 2015

தாவரங்களில் நடைபெறும் ஒளிச்சேர்க்கையின் மூலம் மின்சாரம் தயாரிப்பு

தாவரங்களில் நடைபெறும் ஒளிச்சேர்க்கையின் மூலம் எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று ஸ்வீடன் நாட்டின் லிங்கோபிங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், தெரிவித்துள்ளனர். தாவரங்கள், தங்களுக்கு தேவையான உணவை சூரிய ஒளியின் உதவியுடன், இலைகளில் உள்ள Chlorophyll மூலம் Photosynthesis செயல்பாட்டின் மூலம் உணவை தயாரித்துக்கொள்கின்றன.

ஸ்வீடனின் பல்கலைகழக விஞ்ஞானிகள், ரோஜா தோட்டத்தி்ல் செடிகளின் அடியில், நீரில் கரையும் பாலிமர் கலந்த நீரை பாய்ச்சினர். தாவரங்கள், மண்ணில் உள்ள ஊட்டச் சத்துக்களை எடுத்துக்கொள்வதைபோல, இந்த பாலிமரும், தாவரத்தினுள் செல்கிறது. தாவரத்தினுள் பாலிமர், அதிலுள்ள அயனிகளின் உதவியுடன் மின் வயர்களாக உருமாற்றம் பெறுகிறது.

ஒளிச்சேர்க்கையின் போது இலைகளில் தயாரிக்கப்படும் உணவு, தாவரங்களில் உள்ள மற்ற பகுதிகளுக்கு சைலம் மற்றும் புளோயத்தின் மூலமாக கடத்தப்படுவது போல், தாவரத்தினுள் உருவாகியுள்ள பாலிமர் வயரின் மூலம், இலைகளில் உருவாகும் ஆற்றல் கடத்தப்படுகிறது. சுவீடன் நாட்டு விஞ்ஞானிகளின் இந்த அரிய ஆராய்ச்சி, எதிர்காலத்தில் தாவரங்களை கொண்டு மின்சாரம் தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகளுக்கு உறுதுணை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment