
இசை என்பது ஒரு வரம், இசை என்பது என்பது ஒரு தெய்வீகம், இசை என்பது ஒரு கடவுள் என்று இசையைப் பற்றிப் போற்றிப் பேசுபவர்கள்தான் அதிகம். நல்ல இசை என்பதுதான் நம்மையும், நம் குணத்தையும் பேணிப் பாதுகாக்கும். அப்படி ஒரு இசைதான் 'தாரை தப்பட்டை' படத்தில் உள்ளதாக இளையராஜாவின் அனேக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல திரையுலகில் உள்ள பலரும் இந்தப் படத்தின் பாடல்கள் மீண்டும் தமிழ் மண்ணின் இசை மீது ரசிகர்களை திரும்ப வைக்கவும் உதவும் என்கிறார்கள்.
சமீபத்திய சில இளம் இசையமைப்பாளர்கள் கரடு முரடான பாதையில்தான் நடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம்மை சாந்தப்படுத்தும், நெகிழ வைக்கும் இசைதான் நீண்ட நாட்கள் நிலைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறது என்று பலரும் தெரிவிக்கிறார்கள்.
இளையராஜாவின் 'தாரை தப்பட்டை' படத்தின் பாடல்களைப் பற்றி அவரின் தீவிர ரசிகரான நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார். “தாரை தப்பட்டை - மண்ணின் மனம் அதன் மிகச் சிறப்பில்...'பாருருவாயா...' என்னுடைய தேர்வு...தெய்வீகம் அதன் மிகச் சிறப்பில்...வின்டேஜ் ராஜா...ராஜா ராஜாதான்..” என தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment