Sunday, December 27, 2015

உலகிலேயே அதிக பொது விடுமுறை தினங்கள் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவே முதலிடம்!

நம் நாட்டில் அரசு ஊழியர்களுக்கு குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதோடு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வார விடுமுறையாக 104 நாட்களும், மத்திய, மாநில அரசு விடுமுறை, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட 164 நாட்கள் விடுமுறையாக கிடைக்கிறது. ஆண்டில் 196 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கின்றனர். பள்ளிகளில் 230 நாட்கள் வரை வேலைபார்க்கிறார்கள்.இதோடு தேர்தல் காலங்களில் தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்களின் மனுக்கள் அரசு அலுவலகங்களில் ஆண்டுகணக்கில் தேங்குகின்றன. அரசு ஊழியர்களால் மக்கள் பணியாற்ற முடியாமல் போகிறது.

இந்த சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பது மேற்கத்திய நாடுகளின் வழக்கம். அங்கு மக்களும் குறைவு, மக்கள் பிரச்னையும் குறைவு. இதனால் உடனுக்குடன் பிரச்னைகள் தீர்க்கப்படும்.பட்டா மனுக்கள் லட்சக்கணக்கில் நிலுவையில் உள்ளன. ஓட்டுநர் உரிமம், கட்டிட வரைபட அனுமதி, மின்சார இணைப்புகள், ஓய்வூதியம், கருணை வேலை மனுக்கள் உள்ளிட்டவை ஆண்டு கணக்கில் நிலுவையில் உள்ளன. மத்திய ஊதிய குழு கடந்த 24.3.2008ல் ஓர் அறிக்கையை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதில், தேசிய விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் அரசு அலுவலகங்கள் திறந்திருக்க வேண்டும். அரசிதழில் வெளியிடப்பட்ட விடுமுறை நாட்களை குறைக்க வேண்டும். விழாக்காலங்களில் மற்ற மதத்தினரும், விருப்பமுள்ளவர்களும் பணிக்கு வரலாம் என்று கூறியுள்ளனர். இதுக் குறித்து சில பொது நல வழக்குகளும் பல்வேறு மாநில கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் உலகிலேயே அதிக பொது விடுமுறை தினங்களை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது.

ஓர் ஆண்டுக்கு 21 நாட்களை பொது விடுமுறை தினங்களாக கொண்டுள்ள இந்தியா, ஒவ்வொரு மாநிலங்களிலும் கொண்டாடப்படும் பண்டிகைகளை கொண்டு கணக்கிட்டால் இன்னும் அதிகமாக கூட வரலாம். பிரபல ஆன்லைன் டிராவல் வெப்ஸைட் வீகோ நடத்திய ஆய்வில், பிலிப்பைன்ஸ், சீனா, ஹாங் காங், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் நாடுகளை காட்டிலும் இந்தியா அதிக விடுமுறைகளை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உலக நாடுகளின் விடுமுறை தின பட்டியல் இதோ:

இந்தியா – 21
பிலிப்பைன்ஸ் – 18
சீனா, ஹாங்காங் -17
தாய்லாந்து -16
மலேசியா, வியட்நாம் – 15
இந்தோனேசியா- 14
தைவான், தென்கொரியா-13
சிங்கப்பூர்-11
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து-10
செர்பியா, ஜெர்மனி-9
பிரிட்டன், ஸ்பெயின்-8
மெக்ஸிகோ-7

0 comments:

Post a Comment