
என்னாது 1962 ஆம் ஆண்டா? இந்தியாதான் 1947ல் சுதந்திரம் அடைந்ததே அப்புறம் எப்படி 1962னு கேட்பவர்களுக்கு முதலில் பதில் கூறிவிடுகிறேன். பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் தான் நாம் விடுதலை பெற்றோமே தவிர பாண்டி பிரஞ்சு அரசாங்கத்தின் கண்ட்ரோலில் தான் இருந்தது 1962 வரை. 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி பிரெஞ்சு அரசாங்கம் இந்த நாட்டை இந்தியாவுக்கு விட்டு கொடுத்த போது அங்கிருந்த அனைவரிடமும் கேட்கபட்ட ஒரே கேள்வி – பிரெஞ்சு நாட்டினராய் பிரெஞ்சு பாஸ்போர்ட்டுடன் இருக்க வேண்டுமா அல்லது இந்திய பாஸ்போர்ட் வேண்டுமா என்று அதனால் தான் இன்று வரை பல பாண்டி நண்பர்கள் பிரெஞ்சு குடியுரிமையில் இருக்கின்றனர்.
1954ல் நாட்டை விட்டு கொடுத்தாலும் இந்தியாவின் கான்ஸ்டிடியூஷனுக்கு வந்தது என்னமோ 1962 ஆம் ஆண்டு தான். அவர்களின் குடியரசு தினம் 16 ஆகஸ்ட் – சுதந்திர தினம் நவம்பர் 1 என்பதாகும். இதுக்கிடையில் பல கோணங்களில் யோசித்து அருமையாக வடிவமைக்கபட்ட பாண்டியில் பல தெருக்கள் ஏன் பீச் முனை கூட நேர் வகிடு எடுத்து வாரினால் போல் ஒரே நேர் கோட்டில் தான் இருக்கும். முதல் வீட்டில் இருந்து பார்த்தால் கடைசி வீடு கரெக்டாய் கோடு கிழித்த மாதிரி இருக்கும் அனேக தெருக்கள்.
ஒரு வீடு கூட ஆக்கிரமிப்பில் கொஞ்சம் முன்னாடி ரோட்டை ஆக்ரமிச்சி அல்லது கொல்லை புறத்தை ஆக்ரமிச்சி கட்டினது இல்லை. அவர்களின் ட்ட்ரெயினேஜ் என்னும் கழிவு நீர் வெளியேற்றம் இன்னும் பர்ஃபெக்ட்டாய் கடலில் கொண்டு சேர்க்கும் அளவுக்கு உள்ளது. ஆக்ரமிப்பு அலட்சியம் என்ற ஒன்றே புது பாண்டி குடியிருப்புகளீல் மற்றும் தமிழக நகரங்களில் வெள்ளத்தை உண்டு பண்ணிய உண்மை காரணம். இப்ப தெரியுதா யார் தப்புனு?
இன்னொரு தகவல் :தமிழை தாய் மொழியாய் கொண்ட இரண்டாவது மாநில பெருமை பாண்டிக்கு உண்டு.
0 comments:
Post a Comment