Friday, December 11, 2015

நிலவேம்பு கஷாயத்தை தினந்தோறும் எத்தனை முறை பருக வேண்டும் தெரியுமா?


 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்படாதவர்கள்  நிலவேம்பு கஷாயத்தை தினந்தோறும் எத்தனை முறை பருக வேண்டும் என்பது குறித்து சித்த மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் பிச்சையகுமார்  விளக்கம் அளித்துள்ளார். 


சித்த மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் பிச்சையகுமார் கூறுகையில், "காய்ச்சல் கண்டவர்கள் தினந்தோறும் 2 முறை 30 மி.லி முதல் 50 மி.லி வரை 5 நாட்களுக்கு நிலவேம்பு குடிநீரினை பருகவேண்டும். மற்றவர்கள் தினந்தோறும் 1 முறை 7 நாட்களுக்கு பருகவேண்டும். நிலவேம்பு குடிநீரானது அனைத்து வைரஸ் காய்ச்சல்களையும் வராமல் கட்டுப்படுத்தவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கவும் உதவுகிறது" எனத் தெரிவித்தார்.


* மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும். 

உடல் எடையைக் குறைக்க சில புத்திசாலித்தனமான வழிகள் !!

உங்களால் உடல் எடையைக் குறைக்க முடியவில்லையா? எடையைக் குறைக்கும் மாத்திரைகள் மற்றும் இதர சிகிச்சைகளை மேற்கொண்டும் உடல் எடை குறையவில்லையா? முக்கியமாக உங்களால் எடையைக் குறைக்க டயட்டை பின்பற்ற முடியவில்லையா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்காகத் தான்.
உடல் எடையைக் குறைக்க டயட்டை மேற்கொள்ள முடியாவிட்டாலும், உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுப் பொருட்கள் அல்லது பானங்களைக் எடுத்து வந்தால் தான், கொழுப்புக்கள் மற்றும் கலோரிகளை எரிக்க முடியும்.
இங்கு உடல் எடையைக் குறைக்க உதவும் சில எளிய வைத்திய முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அதனை மட்டும் பின்பற்றி வந்தாலே, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இதனைப் பின்பற்றும் முன் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அது தான் நடக்கும்.
சீரகம்
சீரகத்தில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும், அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். இதனால் உடல் எடை குறையும்.
எடுக்கும் முறை
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - 1/2
தண்ணீர் - 1 1/2 டம்ளர்
செய்முறை
இரவில் படுக்கும் போது நீரில் சீரகத்தைப் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, குளிர வைத்து, அதில் எலுமிச்சையை பிழிந்து, குடித்து வர வேண்டும். இப்படி தினமும் காலையில் செய்து வந்தால், 2 வாரத்தில் உடல் எடை குறைந்திருப்பதை நீங்களே காணலாம்.
எலுமிச்சை மற்றும் தேன்
ஒரே மாதத்தில் உடற்பயிற்சி அல்லது டயட் இல்லாமல் எடையைக் குறைக்க வேண்டுமெனில், தேன் மற்றும் எலுமிச்சை உதவும். எலுமிச்சை உடலை சுத்தப்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் எலுமிச்சையில் உள்ள பாலிஃபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து, எடையைக் குறைக்க உதவும். அத்தகைய எலுமிச்சையுடன் தேனைக் கலக்கும் போது, ஆரோக்கியமாக உடல் எடை குறையும்.
எடுக்கும் முறை
எலுமிச்சை - 1/2
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 1 டம்ளர்
செய்முறை:
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையைப் பிழிந்து, தேன் கலந்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, ஒரு வாரத்தில் எடையில் மாற்றத்தைக் காணலாம்.
ஆப்பிள் சீடர் வினிகர்
உடல் பருமனை நினைத்து கவலைக் கொள்கிறீர்களா? அப்படியெனில் ஆப்பிள் சீடர் வினிகரைக் கொண்டு எடையை விரைவில் குறைக்கலாம். ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள பெக்டின் என்னும் பொருள், நீங்கள் அளவாக உணவை உட்கொள்ளச் செய்யும். மேலும் இதில் உள்ள அசிட்டிக் ஆசிட், கொழுப்புக்களை கரைத்து, எடையைக் குறைக்க உதவும்.
எடுக்கும் முறை
ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 1 டம்ளர்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் மாலை மற்றும் இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் குடித்து வர, ஒரு வாரத்தில் கொழுப்புக்கள் கரைந்து தொப்பை சுருங்கி, உடல் எடை குறைந்திருப்பதை உணர்வீர்கள்.
சுடுநீர்
சொன்னால் நம்பமாட்டீர்க்ள, தினமும் குளிர்ந்த நீருக்கு பதிலாக சுடுநீரைக் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, கலோரிகள் அதிகம் எரிக்கப்பட்டு, உடல் எடை சீக்கிரம் குறையும். எனவே உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் சுடுநீரைக் குடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 9-10 டம்ளர் சுடுநீரைக் குடித்து வந்தால், உடல் எடை குறையும்.
பூண்டு
பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் சேர்மம், உடலில் சேர்ந்துள்ள ஆரோக்கியமற்ற கொழுப்புக்களை கரைத்து, உடலின் மெட்டபாலிச அளவை அதிகரித்து, கலோரிகளை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும். அதற்கு தினமும் 4-5 பற்களை பச்சையாக உட்கொள்ளலாம் அல்லது பாலுடன் சேர்த்தும் எடுத்து வரலாம்.
எடுக்கும் முறை
பூண்டு - 5 பற்கள்
பால் - 1 கப்
செய்முறை:
பூண்டு பற்களை பாலில் போட்டு, 20 நிமிடம் நன்கு வேக வைத்து, பின் பூண்டை அந்த பாலுடன் சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், 2 வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், அவ்வுடலின் அனைத்துப் பாகங்களும் நன்றாக வேலை செய்ய வேண்டும். சில குறிப்பிட்ட பாகத்தில் ஒரு சிறு குறை ஏற்பட்டாலும் அது உடலின் அனைத்துப் பாகங்களையும் பாதிக்கும். அப்படிப்பட்ட ஒரு பாகம்தான் சிறுநீரகம். சிறுநீரகத்தில் ஏற்படும் ஒரு சிறு குறையும் உடலில் உள்ள பல பாகங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்க ஆரம்பிக்கும். எனவே, சிறுநீரகத்தை பத்திரமாகப் பார்த்துக் கொள்வதால் பல்வேறு விதமான நோய்களையும் தவிர்க்கலாம். முதுகெலும்புக்குக் கீழ்ப் பகுதியில் பக்கத்திற்கு ஒன்றாக இரு அவரை விதைகளைப் போல் இருக்கும் உறுப்புதான் சிறுநீரகம். நாம் அனைவரும் இரு சிறுநீரகங்களோடு பிறந்தாலும், நாம் உயிர் வாழ ஒரு கிட்னி இருந்தாலே போதுமானதாகும். சிறுநீரகத்தில் கல்லா? வீட்டிலேயே மருந்திருக்கு! நமக்கு ஒரு உடலின் பல உறுப்புக்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கு சிறுநீரகம்தான் முக்கியக் காரணமாகும். உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும், தேவையில்லாத உப்புச் சத்துக்களையும் வடிகட்டும் ஒரு முக்கியமான பணியை சிறுநீரகம் செய்கிறது. உடலில் உள்ள நீரின் அளவையும் அது கட்டுக்குள் வைத்திருக்கிறது. மேலும் இரத்த அழுத்தம், இரத்த சிவப்பணுக்கள் மற்றும் அமிலங்களின் அளவுகளையும் கட்டுப்படுத்துவதில் சிறுநீரகம் பெரும் பங்கு வகிக்கிறது. சிறுநீரக கல்லை காணாமல் போக்கும் வாழைத்தண்டு அப்படிப்பட்ட சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சில வழிகளை இப்போது நாம் பார்க்கலாம்.

உடற்பயிற்சி நாம் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி இன்றியமையாததாகும். உடலின் பல பாகங்களின் நலத்திற்கே அது நல்லது எனும் போது, சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கும் இந்த உடற்பயிற்சி தான் முக்கியம். அதைத் தவறாமல் செய்து வருவது சிறுநீரகத்திற்கும், அதன் செயல்பாடுகளுக்கும் நல்லது.

மருத்துவ சோதனைகள் நாம் நம் உடலை அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். குறிப்பாக, 30 வயதுக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் நம் சிறுநீரகங்களைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரம்பரை பரம்பரையாக சிறுநீரக வியாதிகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியம்.
உணவுக் கட்டுப்பாடு உங்கள் சிறுநீரகத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. அதாவது உங்கள் உணவுக் கட்டுப்பாடு, சிறுநீரகத்தை நன்றாகச் செயல்பட வைக்க உதவும். சுத்தமான மற்றும் ஃப்ரெஷ்ஷாக சமைக்கப்பட்ட உணவுகளையே உண்ணுங்கள். நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை நிறைய சேர்த்துக் கொள்வது சிறுநீரகத்திற்கு நல்லது.

இரத்த அழுத்தம் சிறுநீரகத்தின் செயல்பாடுகளுக்கு இரத்த அழுத்தம் முக்கியம் என்பதால், அதைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். உயர் இரத்த அழுத்தம் நம் சிறுநீரகத்தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.

இரத்தத்தில் சர்க்கரை அதேப்போல், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்க வேண்டும். சர்க்கரை வியாதி உள்ளவர்களை சிறுநீரக வியாதிகள் எளிதாகத் தொற்றிக் கொள்ளும்.

நிறைய நீர் சிறுநீரகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு நிறைய நீராகாரங்களை எடுத்துக் கொள்வது அவசியம். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அது சிறுநீரகத்தைத் தான் நேரடியாகப் பாதிக்கும்.


'நோ' சிகரெட் அதேபோல், புகைப்பிடிப்பவர்களையும் சிறுநீரக வியாதிகள் எளிதாகத் தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. புகைப்பிடிக்கும் பழக்கத்தைத் தவிர்த்தால், சிறுநீரகம் மட்டுமல்லாமல் மற்ற பல உடல் பாகங்களும் தப்பித்துக் கொள்ளும்.

சரியான மருந்துகள் நம் உடலுக்கு எந்தவிதமான பாதிப்பு வந்தாலும், அதற்குத் தகுந்த சரியான மாத்திரை-மருந்துகளை ஒரு மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்களாக எந்த மருந்தையும் தேர்ந்தெடுக்கக் கூடாது.

முதல்வர் கையில்தான் கொடுப்பேன்! நயன்தாரா பிடிவாதம்?

யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்று மனமுவந்து நிதியளித்து வருகிறார்கள் நடிகைகள். என்னய்யா இது? ரஜினியும் பத்து லட்சம், நம்ம ஹன்சிகாவும் பத்து லட்சமா? என்று ரசிகர்களே வியக்கிறார்கள். ஹன்சிகா கொடுத்த செய்தியின் ஈரம் காய்வதற்குள் ஊதாக்கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யாவும் பத்து லட்சத்தை வழங்கியிருக்கிறார். எல்லாம் வெள்ள நிவாரண நிதி. மேற்படி செக்குகள் நடிகர் சங்க நிர்வாகிகள் வசம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த இக்கட்டான நேரத்தில், அடிப்படையிலேயே இரக்க குணமும், ஈகை குணமும் மிக்க நயன்தாரா எங்கே என்று மனசு தேடுமல்லவா? அப்படிதான் தேடுகிறது சினிமா டெக்னீஷியன்களின் கண்கள். சக தொழிலாளிக்கு கஷ்டம் என்றால் ஓடி வந்து உதவி செய்யும் குணமுடைய நயன்தாரா எதையும் விளம்பரமாக்கிக் கொண்டதில்லை. கடந்த முறை சுனாமி வந்து மக்கள் கடும் உயிர் பலியை சந்தித்தபோது நயன்தாராதான் சினிமாவுலகத்திலிருந்து முதல் நிதியை வழங்கினார். அப்போதே பத்து லட்சம்!

அப்படிப்பட்ட நயன்தாரா எங்கு போனார்? ஏன் இன்னும் நிதியளிக்கவில்லை? நிச்சயம் அது நிறைவான தொகையாகதான் இருக்கும் என்றெல்லாம் சினிமாவுலகம் எதிர்பார்த்து காத்திருக்க, நம் காதுக்கு வந்த செய்தி… அட! அட!!

இந்த தடவையும் நிதியை நேரடியாக முதல்வரை சந்தித்துதான் கொடுக்க வேண்டும் என்கிற திட்டத்திலிருக்கிறாராம் நயன்தாரா. அதனால்தான் அந்த நல்ல செய்தி வர தாமதம் ஆகிறது என்கிறார்கள். மனசு சொல்லும்போதே மணி பர்சை திறந்துடுங்க நயன்தாரா! நாள் போக போக, சுருக்குப்பை இறுக்கமாகிடும் என்பதுதான் மனுஷ மனசின் மகத்துவம்!