Saturday, December 5, 2015

சளி பிரச்னையால் அவஸ்தைப்படுகிறீர்களா? உங்களுக்கான டிப்ஸ்!

 தொண்டையில் சளி உண்டாவதையும், அதனால் ஏற்படும் தொந்தரவுகளையும் பெரும்பாலானோர் அனுபவித்திருப்போம்.


அதிலும் தொண்டையில் சளி இருந்தால் மூச்சு விடவே சிரமமாக இருக்கும்.


சுவாசமானது இயல்பாக இல்லையென்றால் அன்றாட தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும்.


ஆவி பிடித்தல்


 தொண்டை சளி இறுகி இருந்தால், அப்போது சூடான நீரில் ஆவி பிடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.


தண்ணீர்


 கபம் மற்றும் சளியை தளர்த்த வேண்டுமெனில், தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.


சுத்தமான மூக்கு


 தொண்டையில் சளி தேங்காமல் இருக்க, மூக்கினை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.


உப்புத் தண்ணீர்

 சளி இருக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீருடன் உப்பைச் சேர்த்து அடிக்கடி வாய் கொப்பளிக்க வேண்டும்.


இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்து, தொண்டை கரகரப்பு நீங்கும்.


யூகலிப்டஸ் எண்ணெய்


 கபத்தைத் தளர்த்தவும் மற்றும் சளியின் இறுக்கத்தை போக்கவும், சிறிது யூகலிப்டஸ் எண்ணெயை வெந்நீரில் சேர்த்து ஆவி பிடித்தல் நல்லது.


மூலிகைத் தேநீர்


 சளியை குணப்படுத்த மூலிகைத் தேநீர் அல்லது கோழி சூப் போன்றவற்றை சூடாக பருகினால், தொண்டை இதமாக இருக்கும்.


மஞ்சள் தூள்


 சளி இருக்கும் பொழுது அரை டம்ளர் பாலுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பருக வேண்டும். ஏனேனில் மஞ்சள் தூளில் கிருமி நாசினிகளின் பண்பு அதிகமாக இருப்பதால், அதனைக் குடிக்கும் போது, தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.


காரமான உணவுகள்


 காரமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஹார்ஸ் முள்ளங்கி அல்லது ஹாட் சில்லி பெப்பர்ஸ் போன்ற உணவுகளை உட்கொள்வது சளி இறுகுவதை தவிர்க்கும்.

சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!!

சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!!


ஒரு வீட்டின் மிக முக்கியமான பகுதியாக சமையலறை விளங்குகின்றது. வீட்டில் உள்ள விருந்தாளிகள் தங்கும் அறைக்கு நாம் சில நாட்கள் செல்லாமல் இருக்கக்கூடும் அல்லது மிகுந்த குளிர் காலத்தில் வீட்டின் மாடிக்கும் கூட செல்லாமல் இருக்கலாம். ஆனால் யாராலும் சமையலறைக்கு செல்லாமல் இருக்க முடியாது. ஆகையால் தான் வீட்டின் மற்ற பகுதியில் நாம் செலுத்தும் கவனத்தை சமையல் அறையில் சற்றே அதிகமாக செலுத்த வேண்டும். மற்ற அறைகளை போல் இதையும் அழகாக வைக்க வேண்டும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சமையலறை சாதனங்களையும் நவீன கட்டமைப்புடன் சமையல் அறையையும் நாம் அலங்கரிப்பது வீட்டிற்கு மேலும் அழகூட்டும். இவைகளை செய்தால் மட்டும் போதாது, அவற்றை எந்த வித பூச்சிகளும் பாழ்படுத்தாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு என்ன செய்வது? பெருமளவில் பணம் செலவு செய்து பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் போது அவை பூச்சிகளுக்கு மட்டுமின்றி நமக்கும் அதே அளவு கேடு விளைவிப்பதாக இருக்கின்றன. அப்படி என்றால் நாம் எப்படி இயற்கை முறையில் இத்தகைய பூச்சுகளை தவிர்க்க முடியும் என்று காண்போம்.

சோள மாவு

சோளத்திலிருந்து செய்யப்பட்ட இவை அதிக அளவு உணவு தயாரிப்பில் பயன்படுகின்றது. கிரேவி வகைகள், பஜ்ஜி, போண்டா போன்ற உணவுகளை தயாரிக்க மற்றும் பலவற்றில் இவை பயன்படுகின்றது. ஆனால் இவை எறும்புகளை கொள்ளுவதற்கும் உதவும் என்றும் பலருக்கு தெரியாது. இந்த மாவிற்கு ஒரு இனிப்பு தன்மை உண்டு. சோள மாவு விஷம் கிடையாது. ஆனால் அவைகள் செரிக்க சிறிது காலமாகும். எறும்புகள் இவற்றை உண்டால் அவைகளால் இந்த உணவை செரிக்க முடியாமல் போய்விடும். ஆகையால் சோள மாவு சாப்பிட்ட எறும்பு இறந்து விடும். எறும்பு தனக்கு மட்டுமில்லாமல் தன்னுடன் இருக்கும் சக எறும்புகளுக்கும் இதை கொடுப்பதால் அவையும் உண்டு இறந்துவிடும், சமையல் அறையில் மற்றும் எறும்பு இருக்கும் பகுதியில் இந்த மாவை சிறிதளவு தெளித்து வைத்தால் போதும். உங்கள் நோக்கம் நிறைவேறும்.

பூண்டு

பூண்டின் வாசனையும் அதை உண்டால் நமக்கு கிடைக்கும் சுகாதார பலன்களும் வியப்பூட்டுபவை. இவை எறும்புகளையும் கரப்பான்களையும் இந்த அறைக்குள் வரவிடாமல் தடுக்கும் என்ற விஷயம் நமக்கு தெரியாது. புதிதாக வாங்கிய பூண்டு பற்களை சமையல் அறையை சுற்றிலும் வைத்தால் போதும். இந்த வாசனை தாங்காமல் அவை தங்களுடைய உயிரை காக்க ஓடி விடும். பூண்டு பற்கள் கொஞ்சம் காயும் நிலையில் இருந்தால் வேறு புதிய பற்கள் மாற்றுவது நல்லது. இவை பூச்சிகளை மிரண்டு ஓட வைக்கும். பூண்டை அறைத்து அதில் தண்ணீர், தாது எண்ணைய் மற்றும் சோப் ஆகிய கலவையை தெளிக்கவும் செய்யலாம். இந்த வகை பாதுகாப்பு முறை மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். இந்த பூண்டு ஸ்பிரே உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்கவும், சமையலறை தோட்டத்தின் செடிகளை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

லகிரி தைலம்

யூகலிப்டஸ் மரத்திலிருந்த எடுக்கப்படும் எண்ணையானது மிகுந்த நறுமணம் கொண்ட வாசனை பொருளாகும். இவை பூச்சிகளை கட்டுபடுத்துவதில் சிறந்த பலனளிக்கின்றன. இந்த எண்ணையை சிறிது தண்ணீரில் கலக்கி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி அதை அடுப்பறைக்குள் வரும் கரப்பான்கள், சிலந்திகள் மற்றும் சிறிய பூச்சிகள் மீது தெளித்தால் அவை உடனே இறந்து விடும்.

போரிக் அமிலம்

பூச்சிகளை கொல்லும் மற்றொரு வழி போரிக் அமிலமாகும். இதை மாவுடன் சேர்த்து உள்ளே வரும் பூச்சிகள் மேல் தெளித்தால் உடனடியாக அவை இறந்து விடும். இந்த அமிலத்தை அருகில் உள்ள மருந்து கடைகளில் வாங்க முடியும். இது இல்லை என்றால் போரக்ஸ் டிடர்ஜென்ட்டை பயன்படுத்தலாம். இதை நாம் சர்கரை மற்றும் தண்ணீரில் கூட கலந்து பயன்படுத்துவது மிகுந்த பலனளிக்கும். இவை பொதுவாக மக்கள் பயன்படுத்தும் மருந்தாக அமைகின்றது.

ரஜினி 10 லட்சம் கொடுப்பதற்கு கொடுக்காமலே இருக்கலாம் : ராம்கோபால் வர்மா கிண்டல்

 வெள்ள நிவாரண நிதி அளிக்கும் நடிகர்களை கிண்டல் செய்திருக்கிறார் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா.

தமிழகம் மற்றும் சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பல நடிகர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர். நடிகர் சங்கம் மூலமாகவும் நடிகர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

நடிகர்கள் சூர்யா சார்பில் 25 லட்சம், விஷால் 10 லட்சம், சிவகார்த்திகேயன் 5 லட்சம், நடிகர் தனுஷ் 5 லட்சம், நடிகர் ரஜினிகாந்த் 10 லட்சம் என நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்  10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்திருக்கும்  ராம்கோபால் வர்மா “ஐயோ, ரஜினிகாந்த் சார், நீங்க கொடுத்த 10 லட்சத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் சென்னை மக்கள் முழிக்கிறார்கள். இதற்கு நீங்கள் நன்கொடை அளிக்காமலே இருக்கலாம்” என்று கிண்டலடித்துள்ளார்.

மேலும்  “மழையை நிறுத்த ரஜினிகாந்த் ஏன் எதுவும் செய்யவில்லை” என்றும் கிண்டலாக கேள்வி கேட்டுள்ளார்.

பல பிரபலங்கள், சமூக வலைத்தளங்களில் மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக கூறி வருகிறார்கள். இதையும் கிண்டலடித்துள்ள ராம்கோபால் வர்மா “பிரபலங்கள் நிறைய பிரார்த்தனைகளையும், அன்பையும் வாரி வழங்குகிறார்கள். ஏனெனில் பணம் கொடுப்பதை விட அவைகள் மிகவும் மலிவானவை.



என்னை பொறுத்தவரை நான் ஒரு ரூபாய் கூட நன்கொடையாக கொடுக்க வில்லை. பிரபலங்களை போல் நானும் ஏராளமான அன்பையும், பிரார்த்தனைகளை மட்டுமே கொடுக்கும் ஒரு சுயநலவாதிதான்” என்று கூறியுள்ளார்.

சென்னையில் படகு மூலம் நடமாடும் ஏடிஎம் இயந்திரம்: நிதியமைச்சகம் உத்தரவு

 சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகு மற்றும் பிற சேவைகள் மூலம் நடமாடும் மொபைல் ஏடிஎம் இயந்திரங்களை உடனடியா செயல்படுத்த மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் பொது மற்றும் தனியார் வங்கி பிரதிநிதிகளின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

கனமழை மற்றும் வெள்ளத்தினால் சென்னையில் பல்வேறு இடங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் செயல்படுத்தவில்லை. சில வங்கிகள் சரியாக செயல்படாமல் முன் அறிவிப்புமின்றி மூடப்பட்டது. இதனால் சென்னை மற்றும் புறநகரங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகு மற்றும் பிற சேவைகள் மூலம் நடமாடும் மொபைல் ஏடிஎம் இயந்திரங்களை உடனடியா செயல்படுத்த மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வங்கிகள் ஞாயிற்று கிழமைகளில் செயல்படுத்த மத்திய நிதியமைச்சகம் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் வங்கிகளின் நேரத்தை நீட்டிக்க அனைத்து வங்கிகளுக்கும் பரிந்திரைக்கப்பட்டுள்ளது.