
தமிழகம் மற்றும் சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பல நடிகர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர். நடிகர் சங்கம் மூலமாகவும் நடிகர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
நடிகர்கள் சூர்யா சார்பில் 25 லட்சம், விஷால் 10 லட்சம், சிவகார்த்திகேயன் 5 லட்சம், நடிகர் தனுஷ் 5 லட்சம், நடிகர் ரஜினிகாந்த் 10 லட்சம் என நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்திருக்கும் ராம்கோபால் வர்மா “ஐயோ, ரஜினிகாந்த் சார், நீங்க கொடுத்த 10 லட்சத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் சென்னை மக்கள் முழிக்கிறார்கள். இதற்கு நீங்கள் நன்கொடை அளிக்காமலே இருக்கலாம்” என்று கிண்டலடித்துள்ளார்.
மேலும் “மழையை நிறுத்த ரஜினிகாந்த் ஏன் எதுவும் செய்யவில்லை” என்றும் கிண்டலாக கேள்வி கேட்டுள்ளார்.
பல பிரபலங்கள், சமூக வலைத்தளங்களில் மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக கூறி வருகிறார்கள். இதையும் கிண்டலடித்துள்ள ராம்கோபால் வர்மா “பிரபலங்கள் நிறைய பிரார்த்தனைகளையும், அன்பையும் வாரி வழங்குகிறார்கள். ஏனெனில் பணம் கொடுப்பதை விட அவைகள் மிகவும் மலிவானவை.
என்னை பொறுத்தவரை நான் ஒரு ரூபாய் கூட நன்கொடையாக கொடுக்க வில்லை. பிரபலங்களை போல் நானும் ஏராளமான அன்பையும், பிரார்த்தனைகளை மட்டுமே கொடுக்கும் ஒரு சுயநலவாதிதான்” என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment