Thursday, December 3, 2015

இயக்குனர் சிகரமும் காவிய கவிஞரும் - பகுதி 1

 இயக்குனர் சிகரம் பாலசந்தர் பாடல்கள் எடுப்பதில் வல்லவர். அவரது படங்கள் மட்டுமின்றி பாடல்களும் புதுமை நிறைந்ததாக இருக்கும். வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இடம்பெறும், சிப்பி இருக்குது முத்து இருக்குது பாடல் ஒன்றே போதும், அவரது திறமையை அறிய.

தூர்தர்ஷனில் காவிய கவிஞர் வாலி தனது மலரும் நினைவுகளை பதிவு செய்த நிகழ்ச்சியில் இயக்குனர் சிகரமும் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியை நடத்தியவர் நெல்லை ஜெயந்தா. அந்த அருமையான நிகழ்ச்சி நூலாகவும் வெளிவந்துள்ளது.

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் விழிகளில் கண்டேனே என்ற வாலியின் அற்புதமான பாடல் குறித்தும், அந்தப் பாடல் தனக்கு கற்றுத் தந்த பாடம் குறித்தும் இயக்குனர் சிகரம் அதில் பகிர்ந்து கொண்டுள்ளார்.


"மதுரையில் பறந்த மீன்கொடியை உன் விழிகளில் கண்டேனே ரொம்ப அற்புதமான பாட்டு. எல்லா ஊர்ப் பெயர்களும் அதில் வரும். ஆனால் அதில ஒரு டிராஜடி ஆகிப்போச்சு. நான் ரொம்ப ரசித்த பாட்டு, ஜெமினி பிரமாதமாக நடிச்சிருப்பார். அந்தப் பாடல் இடைவேளையில் வரும். ஏற்கனவே ஒன்றரை மணிநேரம் தம்மடிக்காம தம்பிடிச்சு உட்கார்ந்திருக்காங்க. அப்ப இந்தப் பாட்டு வந்தவுடன் பாதிபேர் எழுந்து வெளியே போயிட்டாங்க. அப்போ எல்லாம் உள்ளுக்குள்ள சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு சட்டம் இருந்தது. பல தியேட்டர்களிலும் இதே நிலை.

"எப்பவுமே இடைவேளை வரும்போது டைரக்டர் ஜாக்கிரதையாக இருக்கணும். அங்கபோயி இந்த மாதிரி ஸ்லோ உள்ள காட்சியை வைக்காமல் இடைவேளைக்குப் பிறகு கொடுத்தால் ரசிப்பாங்க. இடைவேளை நேரத்தில் இந்தப் பாட்டை கொடுத்ததால் எழுந்து போயிட்டாங்க. கொடுத்தது என் தப்பு. ஃபோன் பண்ணி பார்த்தால் எல்லா ஊர்களிலும் இதேநிலை என்றார்கள்.  கஷ்டமா போச்சு. மதுரை ஆடியன்ஸ்கூட எழுந்து போனார்கள்னு சொன்னாங்க. சரின்னு சொல்லிட்டு அந்தப் பாட்டை எல்லா ஊர்களிலும் நீக்க சொல்லிட்டேன்.

"இதிலிருந்து என்ன கத்துகிட்டேன்னா... ஒரு படத்துல பாட்டு வைக்கிற இடத்தக்கூட கவனமா பண்ணணும்னு. வெறும் சீனுன்னு நான் எழுதுறேன். நான் டைரக்ட் பண்ணிட்டு போயிடறேன். பாட்டு சீன் அப்படியில்ல. பாட்டுன்னா ஒரு கவிஞர் வர்றாரு. ஒரு மியூஸிக் டைரக்டர் வர்றாரு. நான் உட்கார்ந்துக்கிறேன். அப்புறம் நடன இயக்குனர். இவ்வளவு பேரும் சேர்ந்து பண்ற உழைப்பு வீணாகிப் போயிடக் கூடாதில்லையா? அதனால ஒரு பாட்ட எந்த இடத்தில் போடணும், போடக் கூடாதுன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்."

 - இயக்குனர் சிகரத்தின் இந்த வார்த்தைகளிலிருந்து அவர் ஒரு திரைப்படத்தை, திரைப்பட ரசிகர்களின் மனநிலையை எப்படி நுட்பமாக அணுகி புரிந்து வைத்துள்ளார் என்பதை அறியலாம்.

அவர் பாடலாசிரியர்களிடம் பாடல்கள் கேட்டுப் பெறுவதும் தனித்துவமானது. அது எப்படி? அடுத்தப பகுதியில் வாலியின் வார்த்தைகளில் அதனை படிக்கலாம்.

தனியார் பஸ்களில் கட்டணக் கொள்ளை ? ஹோட்டல்களில் ரூம் வாடகை இருமடங்கு உயர்வு ! என்னவாகுமோ சென்னை...

சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், ஹோட்டல்களில் ரூம் வாடகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாது பொதுமக்கள் திகைத்து வருகின்றனர்.

சென்னையில் விடாது விரட்டி விரட்டி பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். பலர் முகாம்களில் தங்கியுள்ளனர். மழையும் விடாது கொட்டித் தீர்த்து வருவதால் பாதிக்கப்பட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

இதற்காக பெருங்களத்தூரில் நேற்று இரவு முதல் பயணிகள் காத்திருக்கின்றனர். ஆனால் போதுமான பேருந்து வசதி இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிடைக்கும் ஓரிரு பஸ்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

இதனால் அந்த பகுதியாக வரும் லாரிகளில் பெண்கள் உட்பட பலர் ஏறி செல்கின்றனர். இந்த நெருக்கடியை பயன்படுத்தி தனியார் பஸ்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு செல்ல ரூ.1500ம், வந்தவாசி செல்ல ரூ.1000 வசூலிக்கப்படுவதாகவும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். விழுப்புரம், வந்தவாசிக்கே இந்த கட்டணம் என்றால் மற்ற ஊர்களுக்கு சொல்லவா வேண்டும் என பலர் மீண்டும் வீடு திரும்பினர்.

இந்த நிலையில் சென்னையில் ஈக்காட்டுதாங்கல், அரும்பாக்கம், சூளைமேடு, வேளச்சேரி, மடிப்பாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள் தங்களது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று தங்கியுள்ளனர். மேலும், பலர் அரசு, தனியார் சார்பில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களுக்குச் சென்றனர்.

பெரும்பாலான இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் தனியார் விடுதிகள் மற்றும் நட்சத்திர விடுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். ஏராளமானோர் ஒரே நேரத்தில் குவிந்து வருவதால், இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி தனியார் விடுதிகள் வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை விட இருமடங்கு கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

சென்னையில் இன்னும் 3 நாட்களுக்கு அதாவது 72 மணிநேரம் மழை தொடர்ந்து நீடிக்கும்; அதே நேரத்தில் அடுத்த 48 மணிநேரம் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்னவாகுமோ சென்னை...

மழை எதிரொலி: திரைப்படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு

சென்னையில் கடந்த சில நாட்களாக அடை மழை பொழிந்து வருகிறது. இந்த மழையால் சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால், வரும் 4ம் தேதி வெளியாக இருந்த ‘ஈட்டி’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மழை நின்று இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு இப்படங்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

பல் துலக்கும் போது நாம் செய்யும் 5 தவறுகள் - 5 mistakes we make while brushing

 பல் துலக்கும் போது நாம் செய்யும் தவறுகள் என்னவென்று பார்ப்போம்.

* நாம் கண்ணாடியை பார்த்து பல் துலக்குவது தான் சிறந்தது, ஆனால் பலரும் அதனை செய்வதில்லை.

* பல் துலக்குவதற்கு சரியான நேரம் எடுத்து கொள்ள வேண்டும் , ஆனால் நாம் வேகவேகமாக ஒரு நிமிடத்தில் முடித்து விடுகிறோம்.

* நாம் மிகவும் அழுத்தி பல் தேய்க்கிறோம் , இதனால் நமது பற்கள் பாதிப்படைகின்றன.

* நாம் சரியான பிரஷையும், டூத் பேஸ்டையும் உபயோகப்படுத்த தவறி விடுகிறோம்.

* பல் துலக்கிய பிறகு அதிகளவு வாய் கொப்பளக்க வேண்டும், ஆனால் நாம் அதனை செய்ய தவறி விடுகிறோம்.