‘நானும் ரௌடிதான்’ வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி பழைய பார்முலாவுக்கு திரும்பியுள்ளார். அடுத்த வருடம் மட்டும் இவரது நடிப்பில் அரை டஜன் படங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ஏற்கெனவே ஒப்புக் கொண்ட ஒரு புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார்.‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டன் இறார். அன்புசெழியன் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்க இருக்கிறது.
விஜய் சேதுபதி தற்போது ரஜினி படத்தலைப்பான ‘தர்மதுரை’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இவர் நடிக்கவுள்ள ‘ஆண்டவன் கட்டளை’ படம், சிவாஜி கணேசன், தேவிகா. சந்திரபாபு நடித்து 1964ஆம் ஆண்டு வெளியான படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி, சிவாஜி ரூட்டில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார் போலும் விஜய் சேதுபதி.. சூப்பர் ஜி. சூப்பர் ஜி..
6:33 PM
மகிழ்
Posted in:
0 comments:
Post a Comment