
இவரே தயாரித்து இயக்கி நடித்திருந்த இப்படத்தில் நான்கு காதாநாயகிகள் நடித்திருந்தார்கள். அதாவது சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். தமிழில் வெளியாகி படம் சூப்பர் ஹிட்டடிக்கவே தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இப்படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே…’ பாடலுக்காக கவிஞர் பா. விஜய் மற்றும் பின்னணி பாடகி சித்ரா ஆகியோர் தேசிய விருது பெற்றனர்.
இந்நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை இயக்க சேரன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய கேரக்டரில் நடிக்க நயன்தாராவை அணுகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதன் முதல் பாகம் 2004ஆம் ஆண்டு வந்தபோதுதான் நயன்தாரா சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதால் இப்படத்தின் இரண்டாம் பாக பெயர் மாறக்கூடும் எனத் தெரிகிறது.
அப்போ இது நயன்தாராவின் ஆட்டோகிராப்..ன்னு சொல்லுங்க..
0 comments:
Post a Comment