
பிரபல நடிகர்கள் தங்களது படத்திற்கு பெயர் வைத்ததும், அது ஏற்கனவே நாங்கள் பதிவு செய்த தலைப்பு என ஆளாளுக்கு போர்க்கொடி தூக்குவது வழக்கமாகி விட்டது. அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் தலைப்பு பஞ்சம் தலை விரித்தாடுகிறது எனலாம். இதனாலேயே படத்திற்கு சகட்டு மேனிக்கு விதவிதமாய் பேர் வைப்பதை புதிய டிரெண்டாக்கி இருக்கிறார்கள் சில இயக்குநர்கள். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், தீயா வேலை செய்யணும் குமாரு, வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான், யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ள வை என இதற்கு உதாரணங்கள் பல.
ந்தவகையில் தற்போது வித்தியாசமான தலைப்பில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. தலைப்பு ‘ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல' என்பதாகும். தலைப்பைக் கேட்டாலே சும்மா சிரிப்பு அள்ளுதுல.
ப்படத்தின் நாயகனாக ஆதித்யா சேனல் தொகுப்பாளர் அஸார் நடிக்கிறார். மிமிக்ரியில் கலக்கிக் கொண்டிருந்த அஸார் ஏற்கனவே விக்ரமனின் நினைத்தது யாரோ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
அப்படம் அவ்வளவா சொல்லிக் கொள்ளும்படி ஓடாததால், நடிகரின் பெயர் வெளியில் வரவில்லை. இந்நிலையில் தற்போது இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் அஸார். இரண்டிலும் அஸார் மட்டுமே சோலோ ஹீரோ.
Posted in: சினிமா,நிகழ்வுகள்
Email This
BlogThis!
Share to Facebook
0 comments:
Post a Comment