நீண்ட நாட்களுக்கு பிறகு மாதவன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘இறுதிச்சுற்று’. தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தின் ட்ரைலர்கள் அண்மையில் வெளியானது. கமல்ஹாசன் வாழ்த்துக்களுடன் இதன் ட்ரைலரை சிவகார்த்திகேயன் தன் ட்விட்டரில் வெளியிட்டார்.மாதவன், ரித்திகாசிங், நாசர், காளி வெங்கட், ராதாரவி நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ராஜ்குமார் ஹிரானியுடன் இணைந்து சசிகாந்த் இப்படத்தை தயாரித்துள்ளார். இயக்கம் சுதா கொங்காரா.
இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை வருகிற ஜனவரி 4ஆம் தேதி சென்னையில் வெளியிடவுள்ளனர். பாடல்களை இயக்குனர் பாலா வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக் கொள்கிறார். சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் வருண்மணியன் கலந்து கொள்ளவிருக்கிறாராம். இப்படம் ஜனவரி இறுதியில் வெளியாகும் எனத் தெரிகிறது.
8:57 PM
மகிழ்
Posted in:
0 comments:
Post a Comment