
தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் படங்களின் சாயலில் இப்படத்தின் கதை அம்சம் உள்ளதாக சொல்லப்படுகிறது. பொங்கல் அன்று திரைக்கு வரும் தாரை தப்பட்டை படம் நேற்றைய முன்தினம் தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் தாரை தப்பட்டை படத்தில் வன்முறை அதிகமாக இருப்பதால் ஏ சான்றிதழ் மட்டுமே வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சிலகாட்சிகளை படத்திலிருந்து நீக்கினால் யுஏ சான்றிதழ் தருவதாக தெரிவித்துள்ளனர். யுஏ சான்றிதழ் கிடைத்தாலும் பிரயோஜனமில்லை, வரிவிலக்கு கிடைக்காது. எனவே ஏ சான்றிதழ் கொடுத்தாலும் பரவாயில்லை... குறிப்பிட்ட அந்தக்காட்சியை நீக்க மாட்டேன் என்று பாலா சொல்லிவிட்டார். எனவே ஏ சான்றிதழுடன் திரைக்கும் வருகிறது தாரை தப்பட்டை.
0 comments:
Post a Comment