
நையப்புடை படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன்தான் ஹீரோ. இன்னொரு ஹீரோ கோடம்பாக்கத்தில் விலை போகாமல் கிடக்கும் பா.விஜய்.
சச்சின், துப்பாக்கி, தெறி என்று விஜய் தொடர்ச்சியாக தாணுவுக்கு கால்ஷீட் தருவதால் தாணுவுக்கு விஜய் குடும்பத்தின் மீது தனிப்பாசம் இருக்கும்தானே. முக்கியமாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் மீது.
நையப்புடை படத்தில் நீங்க நடிச்சாதான் நல்லாயிருக்கும் என்று அட்வான்ஸை கையில் வைத்து அழுத்தியிருக்கிறார். அவரும் நடித்திருக்கிறார். நையப்புடை படவிழாவில் பாராட்டியே நம்மை புடைத்துவிட்டார்கள்.
அமிதாப்பச்சன் நடிக்கிற வேடங்களை இனி எஸ்.ஏ.சந்திரசேகரனும் செய்யலாம் என்று எடுத்துவிட்டார் இயக்குனர் விக்ரமன். அவருக்கும் இருக்காதா, விஜய்யை மீண்டும் இயக்கும் ஆசை.
இதையெல்லாம் கேட்ட எஸ்.ஏ.சி.க்கு, அடுத்த ஆஸ்கர் நமக்குத்தான் என்று தோன்றியதில் வியப்பில்லை.
நையப்புடை வெளிவந்தால் விஜய்க்கு நான்தான் போட்டி என்றார் சின்ன சிரிப்புடன். கூடவே அவர் சொன்ன இன்னொரு தகவல், வெற்றிமாறன் அவரை நடிக்க அழைத்திருக்கிறாராம்.
வெற்றிமாறனுக்குமா பிசகு ஏற்படும்?
0 comments:
Post a Comment