
இவர்கள் வரிசையில்தான் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும், சினிமாவில் நடிகராக வேண்டும் என்று வந்தவர். ஆனால் அவரது நடிப்பு கனவு நனவாகவில்லை. மாறாக, மிகப்பெரிய இயக்குனராகி விட்டார். ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடக்கூடிய வகையில் தமிழில் பிரமாண்டமான படங்களை இயக்கி வருகிறார். அதோடு தனது படங்களில் ஏதேனும் கேரக்டர்களில் அவர் முகம் காட்டுவதுமில்லை. டைரக்சனில் மட்டுமே அவரது கவனம் ஒரே நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கிறது.
ஆனபோதும், அவருக்குள்ளும் ஒரு நடிகன் இருப்பதால், சரியான நேரம் வரும்போது அவரும் நடிப்பார் என்கிறார்கள். அதுபற்றி தனது உதவியாளர்களிடம் சொல்லும்போது, இப்போதைக்கு நடிக்கிற ஆசையில்லை. ஆனபோதும், அதற்கான நேரம் காலம் கூடி வரும்போது எதுவும் நடக்கலாம். அப்போது எனக்குள் இருக்கிற நடிகன் வெளியில் வரலாம் என்று புதிர் போடுகிறாராம் ஷங்கர்.
0 comments:
Post a Comment