
சிசிஎல், ஐசிஎல் என ஆளாளுக்கு ஒரு விளையாட்டுக் கம்பெனியை ஆரம்பித்து பணம், பப்ளிசிட்டியை ஏகத்துக்கும் குவிப்பதைப் பார்த்த கேப்டன் மகன் விஜய பிரபாகரனுக்கு, தானும் அப்படி ஒரு கம்பெனியை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது.
பிபிஎல் - பிரிமியர் பேட்மின்டன் லீக் - என்ற பெயரில் நடக்கும் பேட்மின்டன் விளையாட்டுப் போட்டிகளில் ஆடும் சென்னை அணியை விலைக்கு வாங்கி சென்னை ஸ்மாஷர்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பை வெளியிட நேற்று நடந்த பிரஸ் மீட்டில், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசிய விஜய பிரபாகரனுக்கு, தமிழ் திக்கித் திணறியது. அவர் பேசியதைக் கேட்டு, 'தமிழுக்காக அப்படி குரல் கொடுக்கும் தலைவரின் மகன் பேசும் தமிழா இது...
விஜயகாந்த் தன் தமிழ்ப் பணியை வீட்டிலிருந்தேயல்லவா ஆரம்பித்திருக்க வேண்டும்' என்று ஒரு குரல்! கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் சொன்ன பாணியோ தூக்கி அடிச்சிருவாரோ என்று கமெண்ட் அடிக்கும் அளவுக்கு இருந்தது!
0 comments:
Post a Comment