Tuesday, December 22, 2015

அம்மாவான நடிகை அமலாபால்!

தலைப்பை பார்த்தவுடன் நடிகை அமலாபால் அம்மாவாக போகிறார் என்று எண்ணிவிடாதீர்கள். ஒருபடத்தில் அவர் அம்மாவாக நடிக்க உள்ளார். நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலான பிறகு நடிக்க மாட்டார் என்றுதான் முதலில் கூறப்பட்டது. விஜய்யும் அதைத்தான் கூறிவந்தார். ஆனால் அமலாபால் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். முன்புபோல் இல்லாமல் அழுத்தமான கேரக்டர் உள்ள படங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். குழந்தைகள் படம் என்பதாலும், சூர்யா கேட்டுக் கொண்டதாலும் பசங்க 2 படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் சூர்யாவின் மனைவியாகவும், ஆசிரியையாகவும் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற டிசம்பர் 24ம் தேதி வெளிவருகிறது.

இந்த நிலையில் அவர் இந்தி ரீமேக் படமொன்றில் நடிக்க இருக்கிறார். இந்தியில் வெளியாகி பல விருதுகளை வென்ற நில் பட்டே சனட்டா என்ற படம் தமிழில் ரீமேக்காக இருக்கிறது. இது அம்மாவுக்கும் மகளுக்குமான பாசப்போராட்டத்தை சொல்லும் படம். இதில் நடிகை அமலாபால், அம்மா கேரக்டரில் நடிக்கிறார், அவரது மகளாக புதுமுகம் ஒருவர் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்புகள் ஜனவரி முதல்வாரத்தில் துவங்க உள்ளது.

தொடர்ந்து நல்ல நல்ல கேரக்டரில், நடிப்பேன் என்று அமலாபால் கூறியது, இப்போது அவர் தொடர்ந்து நடித்து வரும் படங்களின் மூலம் நிரூபணமாகிறது.

வடக்கு திசையில் தலை வைத்து தூங்க கூடாது ஏன் ?

 மனிதனினுக்கு மிக முக்கியான தூக்கத்தில் நாம் எப்படி தூங்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் அறிவியல் ரீதியாக அன்றே வகுத்துள்ளனர்.
 
இந்த உலகில் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் சரி, அல்லது சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் தேவை முறையான ஒய்வும் நல்ல தூக்கமும் தேவை. எனவே தான் பலரும் ஓய்வுக்காக கோடை வாசஸ்தலத்திற்கும், குளுகுளு இடங்களை தேடிச் செல்கின்றனர். அங்கு நல்ல ஓய்வு எடுத்து மீண்டும் உற்சாகமாக திரும்புகின்றனர்.

நாம் நன்கு துங்கி எழும் போழுது, நாம் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். அப்போது தான், அன்றைய பணி மிகவும் உற்சாகமாக இருக்கும். எனவே, நாம் தலை வைத்து படுக்கும் திசை மிகவும் முக்கியமானது ஆகும்.

நாம், வடக்கு திசையில் தலை வைத்து படுத்தால், பூமியின் காந்த கல ஓட்ட திசையில் நம் உடல் இருப்பதால் நம்முடைய உயிர்ச் சக்தியை அது கனிசமாக இழுத்துக் கொள்ளும். இதனால், நாம் வடக்கு திசையில் தலைவைத்து படுத்தால் நம் உயிர்ச் சக்தி தேவையின்றி விரையம் ஆகும். காலையில் உற்சாகமாக எழுந்திருக்க முடியாது. அவ்வாறு எழுந்தாலும், அன்றைய பொழுது புத்துணர்ச்சியாக இருக்காது.

அதே போல, நம் மேற்கு திசையில் தலைவைத்து படுத்தால் காலையில் நாம் எழுந்து கண்விழிக்கும் போது, சூரியனின் ஒளிகதிர்கள் நமது கண்களில் பட்டு கூசும். எனவே, மேற்கு திசையில் தலை வைத்து படுப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும், நாம் கிழக்கு திசை பக்கம் தலை வைத்து படுத்தால்,நாம் பூமியின் காந்த ஓட்டத்தின் குறுக்காக இருப்பதால் நமது உடல் ஒரு டைனமோ போல் திகழ்ந்து உயிர்ச் சக்தியாக்கம் பெறும். இதனால், உற்சாகம் கிடைக்கும். எனவே, கீழக்கு திசையில் தலை வைத்து படுப்பதுவே மிகவும் சிறந்தது ஆகும்.

உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிகள்!

உடல் பருமன் உடைய அனைவருக்குமே உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாகத்தான் இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க என்ன வழி என்று யாரையாவது கேட்டால் உடனே உடற் பயிற்சி செய்யத்தான் சொல்வார்கள். உடற்பயிற்சி என்ற வார்த்தையைக் கேட்டதுமே கொஞ்சம் ஷாக் ஆகிவிடும் உடல் பருமன் உடையவர்கள் அந்த திட்டத்தை அப்படியே கைவிட்டுவிடுகிறார்கள். அதற்கு மாற்றாக உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிகள் இருந்தால் எப்படி இருக்கும். சித்த மருத்துவம் சொல்கிறது உடல் எடையை இப்படியும் குறைக்கலாம் என்று.
body-weight-loss
முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் தினமும் காலை மாலை சாப்பிட்டு வர உடல் எடை குறைந்து போகும்.

துளசி இலை சாறை சூடாக்கி சிறிது தேன் கலந்து குடித்தால் உடல் பருமன் குறையும்.

சாப்பாட்டில் அடிக்கடி புடலங்காயை சேர்த்துக் கொண்டால் தேவையில்லாத உடல் எடை மெல்ல காணாமல் போகும்.

இலந்தைமர இலையை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடிக்க உடல் எடை அப்படியே மெல்ல மெல்ல குறையும்.

சிறிதளவு கொள்ளை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து அதை ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு(கல் உப்பு) கலந்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் உடல் மெலிவதுடன் உடல் பலமும் அதிகமாகும் கிடைக்கும்.

அமுக்கிராவேர், பெருஞ்சீரகம் இவைகளை பாலுடன் காய்ச்சி குடித்துவர உடல் எடை குறைவதை நீங்கள் நன்றாகவே உணர்வீர்கள்.

ஓமத்தை கறுக வறுத்து பொடி செய்து தேன் கலந்து தினமும் சாப்பிட எளிதில் உடல் எடை குறையும்.

அவரை இலையை உலர்த்தி இடித்துத் தூளாக்கி தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.

செம்பருத்தி பொடியை தேன் கலந்து தினமும் காலை, மாலை உணவுக்கு பின் சாப்பிட கொழுப்பு குறையும். அப்படின்னா உடல் எடையும் காணாமல் போயிடும்தானே!

கல்யாண முருங்கை பொடியை தினமும் காலையில் உணவுக்குப் பின் சாப்பிட உடல் எடை குறையும்.

உடல் எடை குறைய கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு சேர்த்து பொரியல் செய்து சாப்பிடலாம். இதை இரவு வேளைகளில் சாப்பிடக் கூடாது.

ஆவாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து ஒரு ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.

சிறிதளவு மோர் மற்றும் காரட் இவற்றை நன்றாக சேர்த்து அரைத்து தினமும் குடித்து வந்தால் உடல் இளைக்கும்.

சிறிதளவு சோம்பு, கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி அதனுடன் சுத்தமான சிறிதளவு தேன் கலந்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் உடல் எடை குறைந்து விடும்.

இளையராஜா மீதான விமர்சனம்: ஜேம்ஸ் வசந்தன் வருத்தம்

 ராஜா சாருடைய ரசிகர்கள் பலர் என்னுடைய கருத்தால் காயமுற்றதால் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.

முன்னதாக, சிம்புவின் 'பீப் பாடல்' குறித்து இளையராஜாவிடம் ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.இதனால் கோபமடைந்த இளையராஜா, ''உனக்கு அறிவு இருக்கா?'' என்று எதிர் கேள்விகள் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இளையராஜாவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் தனது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அப்போது ஜேம்ஸ் வசந்தனுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில், இளையராஜா குறித்து விமர்சனம் செய்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சமீபத்தில் நான் ராஜா சார் பற்றி கூறிய கருத்துகள் மிகவும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த சர்ச்சையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும்,ராஜா சாருடைய ரசிகர்கள் பலர் என்னுடைய இந்தக் கருத்தால் காயமுற்றதால் தான் இந்த மன்னிப்பு அறிக்கை.

இதே நேரத்தில் சில விஷமிகள் என்னுடைய பெயரையும் , படத்தையும் வைத்துக் கொண்டு அவதூறான கருத்துகளையும், பரப்புரையும் செய்து வருகிறார்கள்.அதனால் தான் நேற்றே என்னுடை ட்விட்டர் தொடர்பையும் விட்டு விட்டேன்.இந்த அறிக்கை மூலம் நான் என்னுடைய நிலையை தெளிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.

நான் என்னுடைய மனதில் உள்ளதை பேசுபவன், யார் மனதை புண் படுத்தவோ குறிப்பாக தமிழ் சமுதாயத்தை சேர்ந்தவர்களை புண்படுத்தவோ நினைக்க கூட செய்யாதவன். நடந்த சம்பவங்களை மறந்து முன்னேறுவோம்'' என்று ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.