Sunday, December 27, 2015

கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்!

1. பாத்திரத்தை அடுப்பில் வைக்கும் முன் அதனை ஈரமில்லாமல் நன்றாக துடைத்து விடவும். ஈரத்தை சூடுபடுத்தி காயச்செய்ய கேஸ் சற்றே அதிகம் செலவழியும். எனவே நன்றாகத் துடைத்து வைப்பதன் மூலம் சிறிதளவு மிச்சம் செய்யலாம்.

2. சமையலைத் துவங்குவதற்கு முன்பு வெட்டப்பட்ட காய்கள், மற்றும் தேவையான பொருட்களை உடனடியாகத் தயாராக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பத்திரத்தை வைத்து விட்டு ஒவ்வொரு பொருட்களாக தேடித் தேடி எடுத்துப் போடுவதன் மூலம் கேஸ் அதிகம் செலவழியும்!

3. பிரிட்ஜில் வைத்த பொருளை கொதிக்க வைக்கும்போது அது சாதாரணமாக உலரவிடவும். இதனால் நேரடியாக பிரிட்ஜில் இருந்து அடுப்பில் வைத்து அது காய்ம் நேரத்தினால் கேஸ் செலவு அதிகரிக்கும்.

4. சமையல் பாத்திரம் போதுமான அளவுக்கு சூடான பிறகு பர்னரை சிம்மில் வைக்கவும். குறைந்த நெருப்பில் கொதிக்கும் உணவிற்கு ஊட்டச்சத்து அதிகம் என்று கூறப்படுகிறது.

5. சமைக்கும்போது பாத்திரத்தை அடுப்பில் திறந்து வைப்பதைத் தவிர்க்கவும். இதன் மூலம் கொதிப்படைவது விரைவில் நிகழும் எரிபொருளை பெருமளவு மிச்சப்படுத்தலாம்.

6. பிரஷர் குக்கர் மூலம் சமைக்கவும் ஏனெனில் அது அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது.

7. சமயல் பொருளில் அதிக தண்ணீர் சேர்ப்பதைத் தவிர்க்கவும், ஏனெனிலி அது கொதிப்பதற்கு அதிக எரிவாயு தேவைப்படும்.

8. மைக்ரோ வேவ் அடுப்பை பயன்படுத்தலாம். ஆனால் இந்திய சமயலுக்கு அது சரிப்பட்டு வராது என்றால் ஹைபிரிட் மாடலை வாங்கி வைத்துக் கொள்ளவும். மைக்ரோவேவை பயன்படுத்தி அரை வேக்காடு செய்து கொண்ட பிறகு கேஸ் பர்னருக்கு மாற்றினால் பெருமளவு கேஸ் மிச்சம் செய்யலாம்.

9. தண்ணீர் கொதிக்கவைக்கவேண்டுமென்றால் அடிக்கடி கேசை திறக்காமல் தெர்மாஸ் பாட்டிலை பயன்படுத்தவும்.

10. ரெகுலேட்டர், பைப்கள், பர்னர் ஆகியவற்றில் லீக் இருக்கிறதா என்பதை அடிக்கடி செக் செய்யவும். மேலும் காரியம் முடிந்தவுடன் ரெகுலேட்டர் ஸுவிட்சை ஆஃப் செய்து விடுவதை கவனமாகச் செய்யவும்.

இவை அனைத்தும் செய்து ஓரளவுக்கு மிச்சம் செய்ய முடிந்தால் நல்லது. இல்லையெனில் பழைய காலம் போல் விறகடுப்பிற்கு மாறவேண்டியதுதான்! விறகு விற்பனை அமோகமான பிறகு அதிலும் அயல்நாட்டு முதலீட்டை வரவேற்று அதன் தலையிலும் நம் அரசு கை வைக்கும். ஆனால் அதற்குள் ஓரளவுக்கு நாம் சுதாரித்துக் கொள்ளலாம்.

நிதியமைச்சர் விமர்சித்த போது கமல் ஹாஸனுக்கு நடிகர் சங்கம் ஏன் ஆதரவு தரவில்லை? - ராதிகா

நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்தபோது ஏன் கமல் ஹாஸனை நடிகர் சங்கம் ஆதரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை ராதிகா.

பீப் பாடல் தொடர்பாக நடிகை ராதிகா சில ட்வீட்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சிம்புவுக்காக விமான நிலையங்களில் கண்காணிப்பா? நாட்டில் பற்றி எரியும் பல விஷயங்கள் உள்ளன. இதுதான் முக்கியமா?

கற்பழித்தவர் சுதந்தரமாக வெளியே உள்ளார். ஏன் இந்தப் பிரச்னை பெரிதாக்கப்படுகிறது? அல்லது கவனத்தைத் திசைதிருப்பவா?

நடிகர் சங்கம் ஒரு முடிவெடுங்கள். பாத்ரூமில் பாடுபவர்கள், செல்ஃபி எடுப்பவர்கள் என உங்களில் யாருக்கு வேண்டுமானால் இது நடக்கலாம்.

நடிகர் கமல்ஹாசனை நிதி அமைச்சர் (எஃப்.எம்.) விமரிசித்தபோது ஏன் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை? என்று அவர் ட்வீட்களை வெளியிட்டுள்ளார்.

இல்லத்தரசிகளுக்கு எளிய டிப்ஸ்…

சமையலை எளிதாக்க இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ்.

* அரிசியை நன்கு ஊறவைத்து பின் வேகவைத்தால் சீக்கிரமாக வேகும்.

* இட்லி, இடியாப்பம், புட்டு எண்ணையில்லாச் சப்பாத்தி ஆகியவற்றிற்கு முதலிடம் கொடுப்பது உடலுக்கு நல்லது.

* ஒரு நேரத்திற்கு ஒரே வகைக் காய் நல்லது.

* கீரை வகைகளை, அரை வேக்காட்டில் இறக்க வேண்டும்.

* எண்ணெய்விட்டு தாளித்து பின் காய்களை வேக வைத்து பொரியல் செய்வது வழக்கம். அதற்குப் பதிலாக தேவையான அளவு தண்ணீர் மட்டுமே விட்டு காய்களையும் மசாலாச் சாமான்களையும் சேர்த்து வேகவேகக் கிளற வேண்டும். பச்சை நிறம் மாறும் முன்பே தேங்காய்த்துருவலை வேண்டிய அளவு சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும், தேங்காயை வேகவிடக் கூடாது.

* குழம்புச் சாதத்தை குறைத்து மோர்சாதத்தைக் கூட்ட வேண்டும்.

* காரம், புளி, உப்பு மிகக் கெடுதல் குறைத்து கொள்வது நல்லது.

* தேங்காய் வெந்தால் கொழுப்புக் கூடும். பச்சையாக உபயோகித்தால் கூடுதலாக இருக்கிற கொழுப்பு வெளியேறி சமநிலைக்கு வந்துவிடும்.

* பொரித்த பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது.

* வெள்ளைச் சர்க்கரை கெடுதல் தரும். வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்ப்பது நல்லது.

* அரிசியோடு சோளம், கேழ்வரகையும் சேர்த்து இட்லி தயாரித்தால் சத்து கூடுதலாக கிடைக்கும்.

• காய்கறிகள், கீரை வகைகளை கூடுதலாக எடுத்துக் கொண்டு உணவை குறைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வழுக்கை தலையில் முடிவளர.....!

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
                                      
சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.